எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ? 2 கொரி 10:122 கொரி 12:112 கொரி 5:12அப் 18:271 கொரி 16:31 கொரி 10:331 கொரி 3:101 கொரி 4:15 எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே. 1 கொரி 9:1-21 தெச 1:8ரோம 1:8பிலி 1:71 கொரி 3:102 கொரி 11:112 கொரி 12:152 கொரி 7:3 ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. எசேக் 11:19எரே 31:33எபி 8:10எபி 10:16சங் 40:8யாத் 31:182 கொரி 6:16எசேக் 36:25-27 நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம். பிலி 1:6எபே 3:121 தெச 1:82 கொரி 2:14யாத் 18:19 எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. 2 கொரி 12:9பிலி 4:131 கொரி 15:10யோவா 15:5பிலி 2:13யாக் 1:17மத் 10:19-201 கொரி 3:6 புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது. யோவா 6:63ரோம 7:6எரே 31:31ரோம 8:2எபி 8:6-101 கொரி 15:452 கொரி 3:14எபி 12:24
புதிய உடன்படிக்கையின் மகிமை
எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. 2 கொரி 3:9-111 கொரி 13:10யாத் 31:18ரோம 10:42 கொரி 3:32 கொரி 3:6யாத் 24:12உபா 10:1-4 மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்? 1 கொரி 3:16எபே 2:181 பேது 1:22 தெச 2:13கலா 3:14கலா 5:22-23ஏசா 59:21யோவா 1:17 அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. எபி 12:18-21ரோம 3:21-222 கொரி 5:211 கொரி 1:301 கொரி 15:412 கொரி 3:10-112 கொரி 3:6-72 பேது 1:1 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல. 2 பேது 1:17ஆகா 2:7-9அப் 26:13ஆகா 2:3ஏசா 24:23யோபு 25:5பிலி 3:7-8வெளி 21:23-24 அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. எபி 8:13ரோம 5:20-21எபி 7:21-252 கொரி 3:6-72 கொரி 4:1எபி 12:25-29 நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம். 2 கொரி 7:4எபே 6:19-20அப் 4:13யோவா 16:29பிலி 1:201 கொரி 14:191 தெச 2:21 தீமோ 3:13 மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. யாத் 34:33-35எபே 2:14-152 கொரி 3:7கொலோ 2:17எபி 10:1-9கலா 3:23-24ரோம 10:4 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 2 கொரி 4:3-4அப் 26:18ரோம 11:252 கொரி 4:6எபே 1:17-20ரோம 11:7-10யோவா 12:40எசேக் 12:2 மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அப் 13:27-29 அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும். யாத் 34:34ஏசா 25:7ஏசா 29:18யோவா 6:45-46எரே 31:34ரோம 11:23ரோம 11:25-27புலம் 3:40 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு. ரோம 8:2யோவா 8:32கலா 5:13கலா 4:6கலா 5:1ஏசா 61:1-2யோவா 6:632 தீமோ 1:7 நாமெல்லோரும் திறந்த முகமாகக் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே பார்க்கிறதுபோலப் பார்த்து, ஆவியாக இருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகவே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம். 2 கொரி 4:6எபே 4:22-24ரோம 12:22 கொரி 4:41 கொரி 13:12கொலோ 3:101 கொரி 15:49ரோம 8:29