2 இராஜாக்கள் 11

2 Kings 11
அத்தியாயம் 11

அத்தாலியாளும் யோவாசும்

அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள். எரே 41:12 நாளாக 22:10-122இராஜா 25:252 நாளாக 24:7மத் 2:162இராஜா 8:262இராஜா 9:27மத் 21:38-39 ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள். 1 இராஜா 6:101 இராஜா 6:82 நாளாக 22:112இராஜா 11:212இராஜா 8:162இராஜா 8:19எசேக் 40:45ஏசா 37:35 இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் யெகோவாவுடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள். 2 நாளாக 22:12மல்கி 3:15சங் 12:8 ஏழாம் வருடத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவர்களையும் காவலாளர்களையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்கு ராஜாவின் மகனைக் காண்பித்து, 2இராஜா 11:192இராஜா 11:92 நாளாக 15:122இராஜா 11:171 நாளாக 9:131 இராஜா 18:101 சாமு 18:31 சாமு 23:18 அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும். 1 நாளாக 9:251 நாளாக 23:3-61 நாளாக 23:321 நாளாக 24:3-61 இராஜா 10:52இராஜா 11:192இராஜா 16:18எசேக் 44:2-3 மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும். 1 நாளாக 26:13-192 நாளாக 23:4-5 இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். 2 நாளாக 23:62இராஜா 11:5 நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான். 2 நாளாக 23:71 இராஜா 2:28-312இராஜா 11:15யாத் 21:14எண் 27:17 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் போகிறவர்களுமாகிய தங்கள் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள். 2 நாளாக 23:81 நாளாக 26:262இராஜா 11:4 ஆசாரியன் யெகோவாவின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான். 2 சாமு 8:71 நாளாக 18:71 நாளாக 26:26-271 சாமு 21:92 நாளாக 23:9-102 நாளாக 5:1 காவலாளர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாக, ஆலயத்தின் வலப்பக்கம் தொடங்கி அதன் இடப்பக்கம்வரை, பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள். 2 நாளாக 6:122இராஜா 11:102இராஜா 11:8யாத் 40:6எசேக் 8:16யோவே 2:17லூக் 11:51மத் 23:35 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள். 1 சாமு 10:24யாத் 25:161 இராஜா 1:392 சாமு 1:10யாத் 31:181 சாமு 10:12இராஜா 11:22 சாமு 16:16 ஓடிவருகிற மக்களின் ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து, 2 நாளாக 23:12-15 இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள். 2 நாளாக 34:312இராஜா 23:32இராஜா 9:231 இராஜா 1:39-40லூக் 19:37வெளி 19:1-71 நாளாக 12:401 இராஜா 18:17-18 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவுடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 2 நாளாக 23:142 நாளாக 23:92இராஜா 11:42இராஜா 11:9-10எசேக் 21:14எசேக் 9:7 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரண்மனைக்குள் குதிரைகள் நுழைகிற வழியிலே அவள் போகும்போது, அவளைக் கொன்றுபோட்டார்கள். ஆதி 9:62 நாளாக 23:15யாக் 2:13நியாயாதி 1:7மத் 7:2வெளி 16:5-7 அப்பொழுது யோய்தா, அவர்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து, 2 சாமு 5:32 நாளாக 15:12-142 நாளாக 34:31யோசு 24:251 சாமு 10:252 நாளாக 29:10எஸ்றா 10:31 நாளாக 11:3 பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான். உபா 12:31 இராஜா 18:402இராஜா 10:262இராஜா 18:4உபா 13:52 நாளாக 21:172 நாளாக 23:17-202 நாளாக 34:4 நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவர்களையும், காவலாளர்களையும் தேசத்தின் மக்களையும் கூட்டி, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, அவனைக் காவலாளர்களின் வாசல் வழியாக ராஜஅரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான். 1 நாளாக 29:231 இராஜா 1:132 நாளாக 23:192 நாளாக 23:52இராஜா 11:4-6எரே 17:25எரே 22:30எரே 22:4 தேசத்தின் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து, நகரம் அமைதலானது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனை அருகில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள். நீதி 11:10நீதி 29:22 நாளாக 23:212இராஜா 11:14 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான். 2 நாளாக 24:1-142இராஜா 11:42இராஜா 22:1