உபாகமம் 5

Deuteronomy 5
அத்தியாயம் 5

பத்துக் கட்டளைகள்

“மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். உபா 4:1மத் 23:3உபா 29:10உபா 1:1உபா 29:2 நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார். உபா 4:23யாத் 19:5-8யாத் 24:8எபி 8:6-13எபி 9:19-23 அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார். உபா 29:10-15கலா 3:17-21ஆதி 17:21ஆதி 17:7எபி 8:8-9எரே 32:38-40மத் 13:17சங் 105:8-10 யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார். யாத் 19:18-19உபா 34:10உபா 4:33உபா 4:36யாத் 19:9உபா 5:24-26யாத் 20:18-22யாத் 33:11 யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: கலா 3:19யாத் 19:16யாத் 20:18-21எபி 12:18-24உபா 5:27யாத் 24:2-3ஆதி 18:22எபி 9:24 நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே. யாத் 20:2-17சங் 81:5-10உபா 4:4லேவி 26:1-2 என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத் 20:3மத் 4:101 யோவா 5:21யோவா 5:23 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். யாத் 20:4உபா 4:15-19 நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத் 20:4-6யாத் 34:7தானி 9:4-9எண் 14:18யாத் 34:14மத் 23:35-36எரே 32:18ரோம 11:28-29 என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன். ரோம 8:281 யோவா 1:7எரே 32:18தானி 9:4உபா 6:5-6யோவா 15:14கலா 5:6யாக் 1:25 உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார். யாத் 20:7உபா 6:13லேவி 19:12யாக் 5:12மத் 5:33-34எரே 4:2சங் 139:20 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக. யாத் 20:8-11ஏசா 58:13ஏசா 56:6 ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக. எசேக் 20:12யாத் 23:12யாத் 35:2-3லூக் 13:14-16லூக் 23:56 ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; எபி 4:4ஆதி 2:2யாத் 16:29-30யாத் 23:12நெகே 13:21நெகே 5:5லேவி 25:44-46நெகே 13:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார். உபா 5:6உபா 15:15உபா 16:12உபா 24:18-22எபே 2:11-12உபா 4:34-37ஏசா 51:1-2ஏசா 63:9 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக. யாத் 20:12எபே 6:1-3கொலோ 3:20உபா 27:16உபா 4:40மத் 15:4-6மத் 19:19மாற் 10:19 கொலை செய்யாதிருப்பாயாக. யாத் 20:13ரோம 13:9மத் 5:21-22ஆதி 9:6யாக் 2:11மத் 19:18 விபசாரம் செய்யாதிருப்பாயாக. யாத் 20:14லூக் 18:20லேவி 20:10மத் 5:27-28யாக் 2:10-11நீதி 6:32-33 திருடாதிருப்பாயாக. யாத் 20:15ரோம 13:9எபே 4:28 மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. யாத் 20:16யாத் 23:1நீதி 19:9நீதி 19:51 இராஜா 21:13உபா 19:16-21மல்கி 3:5நீதி 6:19 மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத் 20:17ரோம 13:91 இராஜா 21:1-4லூக் 12:151 தீமோ 6:9-10மீகா 2:2ஆப 2:9எபி 13:5 “இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார். யாத் 24:12யாத் 31:18உபா 4:12-15உபா 4:36உபா 5:4யாத் 19:18-19 மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து: யாத் 20:18-19எபி 12:18-21 “இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம். உபா 4:33யாத் 19:19யாத் 33:20ஆதி 32:30உபா 5:4-5நியாயாதி 13:22 இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம். உபா 18:162 கொரி 3:7-9உபா 33:2கலா 3:10கலா 3:21-22எபி 12:29 நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா? உபா 4:33ரோம 3:201 தெச 1:92 கொரி 6:16அப் 14:15தானி 6:26ஆதி 6:12ஏசா 40:6 நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள். யாத் 20:19எபி 12:19 நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது. உபா 18:17எண் 27:7எண் 36:5 அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். ஏசா 48:18உபா 11:1எசேக் 33:31-32மத் 23:37லூக் 19:42உபா 4:40உபா 32:29-30உபா 5:16 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். கலா 3:19உபா 11:1உபா 12:1உபா 4:1உபா 4:45உபா 4:5உபா 5:1யாத் 24:12 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக. நீதி 4:27யோசு 23:6யோசு 1:7உபா 17:20உபா 28:14உபா 8:1உபா 11:32உபா 12:32 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள். எரே 7:23உபா 4:40லூக் 1:6உபா 10:121 தீமோ 4:8ரோம 2:7சங் 119:6உபா 5:29