உன் தேவனாகிய கர்த்தரிடம் அன்புசெலுத்து
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு, உபா 4:1உபா 12:1உபா 4:45உபா 5:31லேவி 27:34உபா 4:14உபா 4:5எசேக் 37:24 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே. உபா 4:40உபா 13:4பிரச 12:13யாத் 20:20நீதி 3:1-2சங் 128:1நீதி 3:161 பேது 3:10-11 இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு. ஆதி 22:17யாத் 3:8ஆதி 15:5ஆதி 26:4ஆதி 28:14ஏசா 3:10அப் 7:17உபா 4:6 “இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா. மாற் 12:29-32ஏசா 44:61 தீமோ 2:5ஏசா 45:5-6யோவா 17:3யோவா 10:30ஏசா 44:8ஏசா 42:8 நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக. மாற் 12:30மத் 22:37லூக் 10:27உபா 10:12உபா 30:6உபா 4:291 யோவா 5:3மாற் 12:33 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. கொலோ 3:16நீதி 7:3எரே 31:33உபா 11:182 கொரி 3:3சங் 37:31உபா 32:46சங் 119:11 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, உபா 11:19எபே 6:4சங் 78:4-61 பேது 3:15உபா 4:9-10உபா 6:2எபே 4:29ஆதி 18:19 அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக. நீதி 6:21உபா 11:18நீதி 3:3யாத் 13:9நீதி 7:3யாத் 13:16எண் 15:38-39எபி 2:1 அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. உபா 11:20ஏசா 30:8ஏசா 57:8ஆப 2:2யாத் 12:7யோபு 19:23-25 “உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், யோசு 24:13சங் 105:44நெகே 9:25ஆதி 26:3சங் 78:55ஆதி 13:15-17ஆதி 15:18ஆதி 28:13 நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், உபா 7:12-18உபா 8:10-20எசேக் 16:10-20உபா 32:15எரே 2:31-32நியாயாதி 3:7நீதி 30:8-9மத் 19:23-24 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக. லூக் 4:8உபா 10:20உபா 13:4மத் 4:10லேவி 19:12உபா 10:12சங் 63:11ஏசா 45:23 உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. எரே 25:61 யோவா 5:21உபா 13:7உபா 8:19உபா 11:28யாத் 34:14-16 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. உபா 4:24யாத் 20:5உபா 11:17உபா 7:41 இராஜா 13:342 நாளாக 36:16ஆமோ 3:2ஆமோ 9:8 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள் 1. யாத் 17:7லூக் 4:12மத் 4:7சங் 95:8-9எபி 3:8-91 கொரி 10:9யாத் 17:2எண் 21:4-5 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக. உபா 11:22சங் 119:41 கொரி 15:582 பேது 1:5-102 பேது 3:14யாத் 15:26எபி 6:11தீத் 3:8 நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும், உபா 4:40உபா 12:25உபா 5:29ரோம 12:2எசேக் 18:5யோவா 8:29உபா 12:28உபா 13:18 யெகோவா தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக. யாத் 23:28-30எண் 33:52-53நியாயாதி 2:1-3நியாயாதி 3:1-4 நாளைக்கு உன் மகன்: “நம்முடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்; யாத் 13:14யாத் 12:26யோசு 4:21-24யோசு 4:6-7உபா 6:7நீதி 22:6 நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; யெகோவா பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். எபே 2:11-12ரோம 6:17-18உபா 15:15உபா 5:6யாத் 20:2உபா 26:5-9உபா 5:15யாத் 13:3 யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, உபா 4:34சங் 58:10-11உபா 7:19சங் 91:8உபா 1:30உபா 3:21உபா 4:3யாத் 14:1-31 தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார். உபா 6:18உபா 1:8உபா 6:10யாத் 13:5உபா 1:35 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் யெகோவா நமக்குக் கட்டளையிட்டார். எரே 32:39சங் 41:2உபா 10:12-13ஏசா 3:10உபா 4:1உபா 8:1ரோம 10:5ரோம 6:21-22 நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக. உபா 24:13ரோம 10:3யாக் 2:10லேவி 18:5ரோம 10:5-6லூக் 10:28-29நீதி 12:28சங் 106:30-31