பிரசங்கி 9

Ecclesiastes 9
அத்தியாயம் 9

எல்லோருக்கும் ஒரே முடிவு

இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான். உபா 33:3யோவா 10:27-301 பேது 1:5பிரச 7:15பிரச 8:14யோபு 12:101 சாமு 2:92 தீமோ 1:12 எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடக்கும்; நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், நல்லகுணமும் சுத்தமும் உள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாக நடக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாக நடக்கும். மல்கி 3:18பிரச 2:14-16யோபு 9:22மல்கி 3:5சங் 73:3மல்கி 3:15பிரச 2:26பிரச 6:6 எல்லோருக்கும் ஒரேவிதமாக நடக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீமை ஆகும்; ஆதலால் மனுமக்களின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாள்வரை அவர்களுடைய இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் மரித்து, இறந்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். எரே 17:9பிரச 8:11பிரச 1:17யோபு 15:16சங் 51:5ரோம 1:29-31தீத் 3:32 பேது 2:16 இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது. யோபு 14:7-12ஏசா 38:18லூக் 16:26-29புலம் 3:21-22யோபு 27:8 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது. ஏசா 26:14பிரச 1:11சங் 6:5சங் 88:10-12எபி 9:27யோபு 14:21சங் 109:15பிரச 2:16 அவர்களுடைய அன்பும், அவர்களுடைய பகையும், அவர்களுடைய பொறாமையும் ஒழிந்துபோனது; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறது ஒன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கு இல்லை. சங் 146:3-4பிரச 6:12யோபு 3:17-18மத் 2:20பிரச 2:18-23யாத் 1:8நீதி 10:28 நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார். பிரச 3:12-13உபா 12:7பிரச 10:19பிரச 8:15பிரச 2:24-26நெகே 8:10-121 நாளாக 16:1-3பிரச 5:18 உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. வெளி 19:14வெளி 3:4-5வெளி 19:8வெளி 7:13-14வெளி 16:15வெளி 7:92 சாமு 19:24தானி 10:3 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. நீதி 5:18-19பிரச 2:10பிரச 6:12மல்கி 2:15பிரச 3:13பிரச 2:24பிரச 3:22பிரச 5:18 செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. கொலோ 3:23எபே 5:16ரோம 12:11சங் 6:5பிரச 11:62 நாளாக 31:20-211 கொரி 9:24யோவா 9:4 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். எரே 9:23நீதி 21:30-31புலம் 3:37-38யோபு 5:11-14பிரச 3:17ஆமோ 2:14-16பிரச 3:14சங் 147:10-11 தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். 1 தெச 5:3லூக் 21:34-36நீதி 6:15பிரச 8:5-7யோபு 18:8-10லூக் 12:20நீதி 29:6சங் 73:18-20

மதியீனத்தைவிட ஞானமே சிறந்தது

சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது. பிரச 8:16பிரச 6:1பிரச 7:15பிரச 9:11 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான். 2இராஜா 6:242 சாமு 20:15-22 அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. பிரச 4:13ஆதி 40:23எஸ்த 6:2-32 சாமு 20:22பிரச 2:16 ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன். பிரச 7:19நீதி 24:5நீதி 21:22மாற் 6:2-31 கொரி 1:26-29யாக் 2:2-6பிரச 9:18யோவா 7:47-49 மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள். யாக் 3:17-18நீதி 28:23ஏசா 42:2யாக் 1:201 சாமு 7:3-6ஆதி 41:33-40ஏசா 42:4 யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான். யோசு 7:1யோசு 7:11-122 தீமோ 2:16-182 தீமோ 4:3-4பிரச 9:16யோசு 7:52 தீமோ 3:8தீத் 1:10-11