இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
நான் துதிக்கும் தேவனே, சங் 28:1சங் 83:1உபா 10:21யாத் 15:2ஏசா 42:14சங் 35:22-23எரே 17:14சங் 118:28
மவுனமாக இருக்கவேண்டாம்.
துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், சங் 52:4நீதி 6:17சங் 120:2-32 சாமு 17:1அப் 6:13எரே 9:5நீதி 12:19சங் 31:13
எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது;
பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, சங் 69:4சங் 35:7யோவா 15:24-25சங் 35:20சங் 88:171 சாமு 19:4-51 சாமு 26:182 சாமு 15:12
காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், சங் 38:20லூக் 23:34சங் 35:7சங் 69:12-13சங் 55:16-17லூக் 6:11-12சங் 35:122 கொரி 12:15
நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், நீதி 17:13சங் 38:202 சாமு 15:31ஆதி 44:4சங் 35:7-12சங் 55:12-152 சாமு 15:12யோவா 13:18
என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சகரி 3:1மத் 5:25மத் 27:4யோவா 13:2யோவா 13:27
சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; நீதி 28:9நீதி 21:27கலா 3:10நீதி 15:82 சாமு 15:7-8ஏசா 1:15ஏசா 66:3மத் 23:13
அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அப் 1:16-26சங் 55:23மத் 27:5
அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், யாத் 22:24எரே 18:21புலம் 5:3
அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, ஆதி 4:12-14சங் 37:252இராஜா 5:27ஏசா 16:2சங் 59:152 சாமு 3:29யோபு 24:8-12யோபு 30:3-9
தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; யோபு 5:5உபா 28:29உபா 28:33-34உபா 28:50-51யோபு 18:9-19யோபு 20:18நியாயாதி 6:3-6
அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், யாக் 2:13லூக் 6:38மத் 27:25சங் 137:8-9ஏசா 13:18ஏசா 27:11ஏசா 9:17யோபு 5:4
அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; நீதி 10:7யோபு 18:19சங் 37:281 சாமு 2:31-331 சாமு 3:132இராஜா 10:10-11உபா 25:19உபா 29:20
இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், யாத் 20:5நெகே 4:5எரே 18:232 நாளாக 22:3-42இராஜா 10:13-142இராஜா 11:12இராஜா 8:272இராஜா 9:27
அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; சங் 34:16யோபு 18:17சங் 90:8சங் 51:9ஆமோ 8:7உபா 32:34ஏசா 65:15எரே 2:22
அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
அவன் தயவுசெய்ய நினைக்காமல், சங் 34:18யாக் 2:13மத் 18:33-35சங் 37:142 சாமு 16:11-122 சாமு 17:1-2ஆதி 42:21யோபு 19:2-3
ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி,
மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; மத் 7:2நீதி 14:14எசேக் 35:6சங் 52:4-5சங் 59:12-132 தெச 2:10-11வெளி 16:6
அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான்,
அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; சங் 73:6எண் 5:22கொலோ 3:12மத் 27:3-51 பேது 5:5அப் 1:18அப் 1:25கொலோ 3:8
அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும்,
அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், சங் 109:29சங் 132:18சங் 109:18சங் 35:26
எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், 2 தீமோ 4:141 இராஜா 2:44சங் 94:231 கொரி 12:31 தெச 2:15-162 சாமு 17:232 சாமு 18:32லூக் 19:27
என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
ஆண்டவராகிய யெகோவாவே, சங் 31:3சங் 69:16சங் 25:11சங் 63:3சங் 79:9-10பிலி 2:8-11சங் 143:11-12சங் 86:15
நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து,
உமது கிருபை நலமானதினால்,
என்னை விடுவித்தருளும்.
நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், சங் 86:1சங் 102:4சங் 40:172 கொரி 8:92இராஜா 4:27யோவா 12:27சங் 22:6ஏசா 53:3
என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; யாத் 10:191 நாளாக 29:15யோபு 14:2சங் 102:10-11பிரச 6:12பிரச 8:13யாத் 10:13யாக் 4:14
வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; எபி 12:12மத் 4:2சங் 22:14சங் 32:3-42 கொரி 11:27யோபு 19:20சங் 102:4-5சங் 35:13-14
என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, சங் 22:6-7சங் 69:19-20ரோம 15:3சங் 69:9-12எபி 12:2எபி 13:13ஏசா 37:22யோபு 16:4
தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; சங் 119:86சங் 57:1எபி 5:7சங் 69:13சங் 40:12சங் 69:16
உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
இது உமது கரம் என்றும், யெகோவாவே, யோபு 37:71 இராஜா 18:36-37யாத் 8:191 சாமு 17:46-47அப் 2:32-36அப் 4:16சங் 126:2சங் 17:13-14
தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; எண் 23:20யோவா 16:22எபி 12:2எண் 22:12சங் 109:172 சாமு 16:10-13ஏசா 65:13-16எண் 23:23
அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்;
உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, சங் 132:18சங் 35:26யோபு 8:22எரே 20:11தானி 12:2மீகா 7:10சங் 109:17-19சங் 140:9
தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, சங் 111:1சங் 35:18சங் 138:1சங் 22:22-25எபி 2:12சங் 107:32சங் 108:1-3சங் 116:12-18
அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி சங் 121:5சங் 16:8ஏசா 54:17சங் 110:5சங் 140:12சங் 73:23நீதி 22:22-23பிரச 5:8
அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.