தேசத்தை பிரித்தல்
கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும், எசேக் 47:15-17யோசு 19:40-471 இராஜா 12:28-292 சாமு 24:2யாத் 1:1-5எசேக் 47:20ஆதி 30:3-6நியாயாதி 18:26-29 தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும், யோசு 19:24-31ஆதி 30:12-13 ஆசேரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை நப்தலிக்கு ஒரு பங்கும், யோசு 19:32-39ஆதி 30:7-8 நப்தலியின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை மனாசேக்கு ஒரு பங்கும், யோசு 17:1-11யோசு 13:29-31ஆதி 30:22-24ஆதி 41:51ஆதி 48:14-20ஆதி 48:5 மனாசேயின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், யோசு 17:8-10யோசு 17:14-18யோசு 16:1-10 எப்பிராயீமின் எல்லையருகே கிழக்கு திசை துவங்கி மேற்கு திசைவரை ரூபனுக்கு ஒரு பங்கும், யோசு 13:15-21ஆதி 29:32ஆதி 49:3-4 ரூபனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக. யோசு 15:1-63யோசு 19:9ஆதி 29:35 யூதாவின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரம் கோல் அகலமும், கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. எசேக் 45:1-6ஏசா 12:6ஏசா 33:20-222 கொரி 6:16கொலோ 2:9எபே 2:20-22எசேக் 48:21எசேக் 48:35 இதிலே யெகோவாவுக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக. வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. எசேக் 45:4எசேக் 44:281 கொரி 9:13-14யோசு 21:1-45மத் 10:10எண் 35:1-9 இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும். எசேக் 40:46எசேக் 44:10மத் 24:45-461 பேது 5:42 தீமோ 4:7-8எசேக் 43:19எசேக் 44:15-16வெளி 2:10 அப்படியே தேசத்தில் அர்ப்பணிக்கப்படுகிறதிலோ மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக. எசேக் 45:4லேவி 27:21 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர்கள் அடையும் பங்கு இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; நீளம் இருபத்தைந்தாயிரம் கோலும், அகலம் பத்தாயிரம் கோலுமாக இருப்பதாக. உபா 12:19எசேக் 45:3எசேக் 45:5லூக் 10:7 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. லேவி 27:28லேவி 27:9-10யாத் 22:29எசேக் 48:12லேவி 23:20லேவி 25:34லேவி 27:32-33மல்கி 3:8-10 இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும். எசேக் 42:20எசேக் 45:61 தீமோ 3:15எசேக் 22:26எசேக் 44:23 அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம். வெளி 21:16 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும். பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பத்தாயிரம் கோலும் மேற்கே பத்தாயிரம் கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக இருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக வேலை செய்கிறவர்களுக்கு ஆகாரமாக இருப்பதாக. எசேக் 45:6எஸ்றா 2:43-58யோசு 9:27நெகே 7:46-62 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள். 1 இராஜா 4:7-23எசேக் 45:6நெகே 11:1-36 அர்ப்பணிக்கப்பட்ட நிலம் அனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், இருபத்தைந்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; பட்டணத்தின் நிலம் உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலம் சதுரமாக இருக்கவேண்டும். எபி 12:17வெளி 21:16 பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கே மத்திய கடல் எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும். எசேக் 48:22எசேக் 34:23-24எசேக் 37:24எசேக் 45:7-8எசேக் 48:10எசேக் 48:8ஓசி 1:11 அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது. மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை பென்யமீனுக்கு ஒரு பங்கும், யோசு 18:21-28எசேக் 48:1-7ஆதி 35:16-19 பென்யமீன் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை சிமியோனுக்கு ஒரு பங்கும், யோசு 19:1-9ஆதி 29:33ஆதி 49:5-7 சிமியோனின் எல்லை அருகே கிழக்குதிசை துவக்கி மேற்கு திசைவரை இசக்காருக்கு ஒரு பங்கும், யோசு 19:17-23ஆதி 30:14-18 இசக்காரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை செபுலோனுக்கு ஒரு பங்கும், யோசு 19:10-16ஆதி 30:19-20 செபுலோனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருக்கட்டும். யோசு 13:24-28ஆதி 30:10-11 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் வரையும் மத்திய தரைக் கடல்வரைக்கும் போகும். 2 நாளாக 20:2எசேக் 47:15எசேக் 47:19-20எசேக் 47:10ஆதி 14:7ஆதி 15:18ஏசா 27:12யோசு 13:3 சொந்தமாக்கிக்கொள்ளும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 47:13-22யோசு 13:1-21எண் 34:13எண் 34:2
நகரத்தின் வாசல்
நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். எசேக் 48:16எசேக் 48:32-35வெளி 21:16 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும். வெளி 21:12-13ஏசா 26:1-2ஏசா 54:12ஏசா 60:11வெளி 21:21வெளி 21:25 கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. தெற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. சுற்றிலும் அதின் அளவு பதினெட்டாயிரம் கோலாகும்; அந்த நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும். வெளி 21:3சகரி 2:10எரே 33:16வெளி 22:3ஏசா 12:6எரே 3:17எசேக் 35:10ஏசா 14:32