ஆபிராம் லோத்துவைக் காப்பாற்றுதல்
சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; ஆதி 10:10ஆதி 10:22ஆதி 11:2ஏசா 37:12ஏசா 11:11தானி 1:2எசேக் 32:24ஏசா 21:2 அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் செய்தார்கள். ஆதி 13:10உபா 29:23ஆதி 10:19ஓசி 11:8ஏசா 1:9-101 சாமு 13:18உபா 34:3ஆதி 19:20-30 இவர்கள் எல்லோரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள். உபா 3:17யோசு 3:16எண் 34:12ஆதி 19:24சங் 107:34 இவர்கள் 12 வருடங்கள் கெதர்லாகோமேரைச் சேவித்து, 13 ஆம் வருடத்திலே கலகம் செய்தார்கள். எசேக் 17:15ஆதி 9:25-26 14 ஆம் வருடத்திலே கெதர்லாகோமேரும், அவனோடு கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும், உபா 1:4உபா 2:10-11உபா 3:11ஆதி 15:20உபா 3:221 நாளாக 11:151 நாளாக 14:91 நாளாக 4:40 சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்திரத்திற்கு அருகிலுள்ள எல்பாரான்வரை தோற்கடித்து, உபா 2:22உபா 2:12ஆதி 21:21எண் 12:16எண் 13:31 நாளாக 1:38-42ஆதி 16:7ஆதி 36:20-30 திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியர்களுடைய நாடு முழுவதையும், ஆசாசோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும் கூட அழித்தார்கள். 2 நாளாக 20:2ஆதி 16:14ஆதி 20:11 சாமு 15:1-351 சாமு 27:1-121 சாமு 30:1-31உபா 1:19உபா 1:46 அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டு சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஆதி 13:10ஆதி 19:20ஆதி 19:22ஆதி 14:10ஆதி 14:2-3 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயிமின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்செய்யப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நான்கு ராஜாக்களும் யுத்தம் செய்தார்கள். அந்த சித்தீம் பள்ளத்தாக்கில் நிலக்கீல் உண்டாகும் கிணறுகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்று ஓடி அங்கே விழுந்தார்கள்; மீதமுள்ளவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். ஆதி 19:17ஆதி 11:3ஆதி 19:30ஏசா 24:18எரே 48:44யோசு 8:24சங் 83:10 அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆதி 14:16ஆதி 14:21உபா 28:31உபா 28:35உபா 28:51ஆதி 12:5 ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்ததால், அவனையும், அவனுடைய பொருட்களையும் கொண்டுபோய்விட்டார்கள். ஆதி 12:5ஆதி 11:27வெளி 3:191 தீமோ 6:9-11ஆதி 13:12-13எரே 2:17-19யோபு 9:23எண் 16:26 தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதைத் தெரிவித்தான்; ஆபிராம் தன்னுடன் உடன்படிக்கை செய்திருந்த மனிதர்களாகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான். ஆதி 13:18ஆதி 14:24ஆதி 40:151 சாமு 4:122 கொரி 11:22யாத் 2:11யாத் 2:6ஆதி 10:16 தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய், நியாயாதி 18:29ஆதி 15:3உபா 34:1பிரச 2:7ஆதி 17:12ஆதி 17:27நீதி 24:11-12ஆதி 12:5 இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி, அப் 9:21 இராஜா 15:18உபா 15:2ஏசா 41:2-3சங் 112:5 அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். 1 சாமு 30:18-191 சாமு 30:8ஆதி 12:2ஆதி 14:11-12ஏசா 41:2
மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசீர்வதித்தல்
அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 2 சாமு 18:18எபி 7:1நீதி 19:41 சாமு 18:6நியாயாதி 11:34நீதி 14:20 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் 1 ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, சங் 110:4எபி 6:20எபி 5:6எபி 5:10சங் 76:2அப் 16:17சங் 57:2எபி 7:10-22 அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. ஆதி 14:22எபி 7:6-7ரூத் 3:10எண் 6:23-27சங் 24:1அப் 16:17எபே 1:3மத் 11:25 உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். ஆதி 28:22எபி 7:4-9நெகே 13:12உபா 14:28மல்கி 3:10உபா 12:17உபா 14:23ஆதி 24:27 சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: “மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான். அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; “ஆபிராமை செல்வந்தனாக்கினேன் என்று நீர் சொல்லாமலிருக்க நான் ஒரு நூலையாகிலும் காலணியின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் ஒன்றையாகிலும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று, தானி 12:7தானி 4:34உபா 32:40யாத் 6:8நியாயாதி 11:35சங் 24:1சங் 83:18வெளி 10:5-6 வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய யெகோவாவுக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். 2இராஜா 5:162 கொரி 11:9-12எஸ்த 9:15-16எபி 13:51 இராஜா 13:82 கொரி 12:142இராஜா 5:20 வாலிபர்கள் சாப்பிட்டதுபோக, என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் மனிதர்களுடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்களுடைய பங்குகளை எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். ஆதி 14:13மத் 7:12நீதி 3:271 கொரி 9:14-151 தீமோ 5:18ரோம 13:7-8