ஆதியாகமம் 23

Genesis 23
அத்தியாயம் 23

சாராளின் மரணம்

சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான். ஆதி 17:17 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான். ஆதி 23:19ஆதி 13:181 நாளாக 6:57நியாயாதி 1:101 சாமு 20:311 சாமு 28:32 நாளாக 35:252 சாமு 1:12 பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி: ஆதி 10:151 சாமு 26:62 சாமு 23:39ஆதி 23:5ஆதி 23:7ஆதி 27:46ஆதி 49:30ஆதி 25:10 “நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாக இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்த இறந்த உடலை நான் அடக்கம்செய்வதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைநிலத்தைத் தரவேண்டும்” என்றான். 1 நாளாக 29:15எபி 11:9ஆதி 17:8சங் 119:19அப் 7:5ஆதி 49:30எபி 11:13-16லேவி 25:23 அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக: “எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம் செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை” என்றார்கள். ஆதி 24:35ஆதி 14:141 யோவா 3:1-2யாத் 32:22ஆதி 13:2ஆதி 18:12ஆதி 21:22ஆதி 24:18 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் வம்சத்தாராகிய அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி, எபி 12:14ஆதி 18:2ஆதி 19:1நீதி 18:24ரோம 12:17-181 பேது 3:8 அவர்களோடு பேசி: “என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன், 1 யோவா 2:1-21 இராஜா 2:17ஆதி 25:9எபி 7:26லூக் 7:3-4 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா எனப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை நிலமாகத் தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அதற்குரிய விலைக்கு அவர் அதைத் தரட்டும்” என்றான். ரோம 12:17ரோம 13:8

எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனான எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக: ஆதி 34:20ஆதி 34:24ஆதி 23:18ஆதி 24:10ஏசா 28:6யோபு 29:7லூக் 2:3-4மத் 9:1 “அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குக் கொடுக்கிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குக் கொடுக்கிறேன், என் இனத்தாரின் முன்னிலையில் அதை உமக்குக் கொடுக்கிறேன், உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான். லூக் 19:24ஏசா 32:81 நாளாக 21:22-242 சாமு 24:20-24உபா 17:6உபா 19:15ஆதி 23:18ஆதி 23:6 அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி, ஆதி 18:2ஆதி 19:1ஆதி 23:7 தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: “கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம் செய்வேன்” என்றான். ரோம 13:82 சாமு 24:24அப் 20:35ஆதி 14:22-23கொலோ 4:5எபி 13:5பிலி 4:5-8 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக: “என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; 1 எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான். எசேக் 45:12யாத் 30:13யாத் 30:15 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான 400 சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான். எரே 32:9சகரி 11:121 தெச 4:6யாத் 30:13எசேக் 45:12எஸ்றா 8:25-30ஆதி 23:15ஆதி 43:21 இந்த விதமாக மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்த இடமும், அதிலுள்ள குகையும், நிலத்திலுள்ள அனைத்து மரங்களும், ஆதி 25:9ஆதி 50:13ஆதி 23:20அப் 7:16ஆதி 49:29-32கொலோ 4:5எபே 5:15எரே 32:7-14 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆதி 34:20எரே 32:12ரூத் 4:1 அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்ரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான். பிரச 12:5பிரச 12:7பிரச 6:3ஆதி 25:9-10ஆதி 3:19ஆதி 35:27-29ஆதி 47:30ஆதி 49:29-32 இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது. எரே 32:10-14ரூத் 4:7-102இராஜா 21:182 சாமு 24:24ஆதி 25:9ஆதி 49:31-32ஆதி 50:13ஆதி 50:24-25