ஆதியாகமம் 29

Genesis 29
அத்தியாயம் 29

யாக்கோபு பதான் ஆராமிற்கு வந்துசேருதல்

யாக்கோபு பயணம்செய்து, கிழக்கு தேசத்தாரிடத்தில் போய்ச் சேர்ந்தான். நியாயாதி 6:3ஓசி 12:12நியாயாதி 6:33பிரச 9:7எண் 23:7சங் 119:32சங் 119:601 இராஜா 4:30 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே சேர்க்கப்பட்டிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது. யோவா 4:14ஏசா 49:10யோவா 4:6யாத் 2:15-16ஆதி 24:11ஆதி 24:13சங் 23:2வெளி 7:17 அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்ததுபோல கிணற்றை மூடிவைப்பார்கள். யாக்கோபு அவர்களைப் பார்த்து: “சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றான்; அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள். ஆதி 28:10ஆதி 27:43அப் 7:2அப் 7:4ஆதி 11:31ஆதி 24:10 அப்பொழுது அவன்: “நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா” என்று கேட்டான்; “அறிவோம்” என்றார்கள். ஆதி 24:24ஆதி 24:29ஆதி 31:53 “அவன் சுகமாயிருக்கிறானா” என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: “சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்று சொன்னார்கள். 1 சாமு 17:221 சாமு 25:52 சாமு 20:9யாத் 18:7ஆதி 37:14ஆதி 43:27 அப்பொழுது அவன்: “இன்னும் அதிக நேரமிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம்” என்றான். எபே 5:16கலா 6:9-10 அதற்கு அவர்கள்: “எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள். லூக் 24:2மாற் 16:3ஆதி 29:3ஆதி 34:14ஆதி 43:32 அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். யாத் 2:15-16யாத் 2:21உன்னத 1:7-8ஆதி 24:15 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய மகளாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். யாத் 2:17 பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது, ஆதி 33:4ஆதி 43:30ஆதி 45:14-15ஆதி 45:2யாத் 18:7யாத் 4:27ஆதி 27:26ஆதி 29:13 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் மகனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். ஆதி 24:28ஆதி 13:8ஆதி 14:14-16 லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான். ஆதி 24:292 சாமு 19:39அப் 20:37யாத் 18:7யாத் 4:27ஆதி 45:15லூக் 7:45ரோம 16:16

யாக்கோபு லேயாளையும் ராகேலையும் திருமணம் செய்தல்

அப்பொழுது லாபான்: “நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்” என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். 2 சாமு 19:12-13ஆதி 2:23நியாயாதி 9:22 சாமு 5:1ஆதி 29:12ஆதி 29:15மீகா 7:5ஆதி 13:8 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: “நீ என் மருமகனாயிருப்பதால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்”, சொல் என்றான். ஆதி 30:28ஆதி 31:7 லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல். ஆதி 49:31ரூத் 4:11ஆதி 29:17ஆதி 29:25-32ஆதி 30:19ஆதி 31:4ஆதி 35:23ஆதி 46:15 லேயாளுடைய கண்கள் 1கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள். ஆதி 12:111 சாமு 10:2ஆதி 24:16ஆதி 29:18ஆதி 29:6-12ஆதி 30:1-2ஆதி 30:22ஆதி 35:19-20 யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: “உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன்” என்றான். ஓசி 12:12யாத் 22:16-17ஆதி 34:122 சாமு 3:14ஆதி 29:20ஆதி 29:30ஆதி 31:41ஓசி 3:2 அதற்கு லாபான்: “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு” என்றான். ஏசா 6:11ஏசா 6:5சங் 12:2 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது. 1 கொரி 13:7எபே 5:2ஓசி 12:12உன்னத 8:6-7ஆதி 24:672 கொரி 5:14ஆதி 30:26 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: “என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்” என்றான். நியாயாதி 15:1ஆதி 29:18ஆதி 29:20ஆதி 31:41ஆதி 38:16ஆதி 4:1மத் 1:18 அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான். வெளி 19:9நியாயாதி 14:10-18மத் 22:2-10மத் 25:1-10ரூத் 4:10-13யோவா 2:1-10 அன்று இரவிலே அவன் தன் மகளாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். மீகா 7:5ஆதி 24:65ஆதி 38:14-15 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். ஆதி 16:1ஆதி 30:9-12ஆதி 46:18ஆதி 24:59 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: “ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்பு ஏன் என்னை ஏமாற்றினீர்” என்றான். மத் 7:2நீதி 11:311 கொரி 3:13ஆதி 12:18ஆதி 27:35-36நியாயாதி 1:7வெளி 3:19யோவா 21:17 அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை. இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடத்திலே வேலைசெய்” என்றான். லேவி 18:18நியாயாதி 14:12ஆதி 2:2-3ஆதி 8:10-12நியாயாதி 14:10மல்கி 2:151 தீமோ 6:10 அப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் மகளாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். ஆதி 29:24ஆதி 30:3-8ஆதி 35:22ஆதி 35:25ஆதி 37:2 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைவிட ராகேலை அவன் அதிகமாக நேசித்து, பின்னும் ஏழு வருடங்கள் அவனிடத்தில் வேலை செய்தான். ஆதி 31:41ஆதி 29:18ஆதி 29:20ஆதி 31:15ஆதி 44:27மத் 10:371 சாமு 18:17-27உபா 21:15

யாக்கோபின் பிள்ளைகள்

லேயாள் அற்பமாக எண்ணப்பட்டாள் என்று யெகோவா கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். 1 சாமு 2:21சங் 127:31 சாமு 1:5உபா 21:15ஆதி 20:18ஆதி 30:1-2மத் 10:37யாத் 3:7 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “யெகோவா என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார்” என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். உபா 26:7யாத் 3:7யாத் 4:311 சாமு 1:111 சாமு 1:202 சாமு 16:12ஆதி 31:42ஆதி 37:21-22 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் யெகோவா கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள். ஆதி 34:25ஆதி 30:18ஆதி 30:20ஆதி 30:6ஆதி 30:8ஆதி 34:30ஆதி 35:23ஆதி 42:24 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார்” என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். யாத் 32:26-29ஆதி 49:5-7உபா 33:8-10யாத் 2:1ஆதி 34:25ஆதி 35:23ஆதி 46:11எண் 18:2-4 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “இப்பொழுது யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது. 1 நாளாக 5:2ஆதி 49:8-12மத் 1:2உபா 33:7ஆதி 35:26ஆதி 38:1-30ஆதி 43:8-9ஆதி 44:18-34