ஆதியாகமம் 33

Genesis 33
அத்தியாயம் 33

யாக்கோபு ஏசாவைச் சந்தித்தல்

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து, ஆதி 32:6-7ஆதி 27:41-42ஆதி 32:16 மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி: ஆதி 29:30ஆதி 30:22-24ஆதி 37:3மல்கி 3:17 தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான். ஆதி 42:6ஆதி 18:2லூக் 14:11ஆதி 43:261 சாமு 2:5பிரச 10:4யோவா 10:11-12யோவா 10:15 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள். ஆதி 45:14-15சங் 34:4லூக் 15:20ஆதி 32:28அப் 20:37ஆதி 45:2ஆதி 46:29ஆதி 43:30 அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான். சங் 127:3ஏசா 8:18ஆதி 48:91 நாளாக 28:51 சாமு 1:27ஆதி 30:2எபி 2:13ரூத் 4:13 அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான். ஆதி 32:5எஸ்த 2:17ஆதி 32:13-20ஆதி 39:5 அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான். ஆதி 27:39பிலே 1:7அப் 21:20அப் 9:17பிரச 4:8ஆதி 27:41ஆதி 4:9நியாயாதி 20:23 அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. யோபு 33:26வெளி 22:4ஆதி 32:30எரே 31:21 சாமு 20:32 சாமு 14:242 சாமு 14:282 சாமு 14:32 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். 1 சாமு 25:27பிலி 4:182இராஜா 5:23ஆதி 30:43ஆதி 33:91 கொரி 3:211 சாமு 30:261 தீமோ 4:8 பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான். அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும். ஏசா 40:11எசேக் 34:15-161 நாளாக 22:5எசேக் 34:23-25யோவா 21:15-17நீதி 12:10 என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்” என்றான். ஆதி 32:3ஏசா 40:11ரோம 15:12 நாளாக 20:10உபா 2:1எசேக் 25:8எசேக் 35:2-3நியாயாதி 5:4 அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான். ரூத் 2:13ஆதி 34:11ஆதி 47:251 சாமு 25:82 சாமு 16:4 அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான். யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் 1 என்று பெயரிட்டான். நியாயாதி 8:5யோசு 13:27சங் 60:6நியாயாதி 8:16நியாயாதி 8:81 இராஜா 7:46யாத் 12:37யாத் 13:20

யாக்கோபு சீகேமுக்கு வந்தான்

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான். அப் 7:16நியாயாதி 9:1யோசு 24:1ஆதி 25:20யோவா 4:5ஆதி 28:2ஆதி 28:6-7ஆதி 35:9 தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி, அப் 7:16யோவா 4:5யோசு 24:32ஆதி 23:17-20ஆதி 34:2-31ஆதி 49:30-32 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் 2 என்று பெயரிட்டான். ஆதி 21:33ஆதி 35:7ஆதி 32:28ஆதி 12:7-8ஆதி 13:18ஆதி 8:20