ராஜாவின் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும்
இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள். ஆதி 40:13எஸ்த 6:1நெகே 1:11ஆதி 39:20-23 பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடுங்கோபம்கொண்டு, நீதி 16:141 நாளாக 27:27அப் 12:20நீதி 19:12நீதி 19:19நீதி 27:4சங் 76:10 அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் காவலாளிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவலில் வைத்தான். ஆதி 39:20ஆதி 39:23 காவலாளிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாட்கள் காவலில் இருந்தார்கள். ஆதி 37:36ஆதி 39:1ஆதி 39:21-23சங் 37:5 எகிப்தின் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனுமாகிய அந்த இரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே இரவில் வெவ்வேறு அர்த்தமுள்ள கனவு கண்டார்கள். ஆதி 41:11தானி 2:1-3தானி 4:19தானி 4:5தானி 4:9தானி 7:1-8எஸ்த 6:1ஆதி 12:1-7 காலையில் யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். தானி 2:1-3தானி 4:5தானி 5:6தானி 7:28தானி 8:27ஆதி 40:8ஆதி 41:8 அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனுடைய அதிகாரிகளை நோக்கி: “உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன” என்று கேட்டான். நெகே 2:21 சாமு 1:82 சாமு 13:4நியாயாதி 18:24லூக் 24:17 அதற்கு அவர்கள்: “கனவு கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு: “கனவுக்கு அர்த்தம் சொல்லுவது தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள்” என்றான். தானி 2:47ஆதி 41:15-16தானி 2:281 கொரி 12:10-11ஆமோ 3:7ஏசா 8:19தானி 2:11தானி 4:8 அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். தானி 2:31தானி 4:10-18தானி 4:8ஆதி 37:5-10நியாயாதி 7:13-15 அந்தத் திராட்சைச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. பார்வோனுடைய பாத்திரம் என்னுடைய கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன்” என்று தன் கனவைச் சொன்னான். நெகே 1:111 இராஜா 10:52 நாளாக 9:4ஆதி 40:21ஆதி 49:11லேவி 10:9நீதி 3:10 அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கொடிகளும் மூன்று நாட்களாம். ஆதி 41:12நியாயாதி 7:14ஆதி 40:18ஆதி 41:25-26தானி 2:36-45தானி 4:19-331 கொரி 10:4கலா 4:25 மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்கு பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவருடைய கையிலே கொடுப்பாய்; 2இராஜா 25:27எரே 52:31சங் 3:3ஆதி 40:19-22ஆதி 7:4 இதுதான் அதனுடைய அர்த்தம் என்று சொன்னதுமல்லாமல் நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்குத் தெரிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். யோசு 2:121 சாமு 20:14-15லூக் 23:421 இராஜா 2:71 சாமு 25:312 சாமு 9:11 கொரி 7:21 நான் எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படி நான் இந்த இடத்தில் ஒன்றும் செய்யவில்லை” என்றும் சொன்னான். 1 பேது 3:17-18ஆதி 39:201 சாமு 24:111 தீமோ 1:10அப் 24:12-21அப் 25:10-11தானி 6:22உபா 24:7 அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: “நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; ஆதி 40:1-2 மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது” என்றான். ஆதி 49:201 நாளாக 12:20 அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம். ஆதி 40:121 கொரி 10:41 கொரி 11:24ஆதி 41:26 இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதனுடைய அர்த்தம்” என்று சொன்னான். ஆதி 40:13ஆதி 40:221 சாமு 17:441 சாமு 17:462 சாமு 21:102 சாமு 21:6அப் 20:27உபா 21:22-23 மூன்றாம் நாள் பார்வோனுடைய பிறந்த நாளாயிருந்தது; அவன் தன் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்துசெய்து, பானபாத்திரக்காரர்களுடைய தலைவனையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே நிறுத்தி, ஆதி 40:13ஆதி 40:19மத் 14:6மாற் 6:212இராஜா 25:27எஸ்த 1:3ஆதி 21:8யோபு 3:1 பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். ஆதி 40:13நெகே 2:1 அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆதி 40:19அப் 5:30தானி 2:19-23தானி 2:30தானி 5:12ஆதி 40:8ஆதி 41:11-13ஆதி 41:16 ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான். யோபு 19:14சங் 31:12சங் 105:19ஆமோ 6:6பிரச 9:15-16