சங்கீதங்கள் 31

Psalms 31
சங்கீதம் 31

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; ரோம 10:11சங் 25:2சங் 71:1-3சங் 22:4-5ஏசா 49:23சங் 143:1தானி 9:16சங் 7:8-9

நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்;

உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

உமது செவியை எனக்குச் சாய்த்து, சங் 71:2-3சங் 102:2சங் 86:11 யோவா 4:15-16உபா 32:31சங் 130:21 யோவா 4:122 சாமு 22:3

சீக்கிரமாக என்னைத் தப்புவியும்;

நீர் எனக்குப் பலத்த கோபுரமும்,

எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; சங் 143:10-11ஏசா 49:10யோவா 16:13லூக் 1:79சங் 25:5சங் 79:9எரே 14:7நெகே 9:12

உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி,

என்னை நடத்தியருளும்.

அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; சங் 25:15சங் 140:52 தீமோ 2:26சங் 19:14சங் 57:6நீதி 29:5சங் 124:7சங் 35:7

தேவனே நீரே எனக்கு அடைக்கலம்.

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; லூக் 23:46அப் 7:59உபா 32:41 பேது 1:18-19சங் 71:232 தீமோ 2:13எபி 6:18தீத் 1:2

சத்தியபரனாகிய யெகோவாவே,

நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, யோனா 2:8சங் 24:4சங் 26:51 கொரி 10:201 கொரி 8:4எரே 10:15எரே 10:81 நாளாக 16:28-29

யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.

உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; ஏசா 49:13ஏசா 63:9சங் 119:1532 தீமோ 2:19கலா 4:9ஏசா 63:16யோவா 10:27-30ஏசா 43:2

நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து,

என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.

எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், யோபு 36:16உபா 32:30சங் 18:19சங் 4:11 சாமு 17:461 சாமு 24:18ஏசா 19:4யோபு 16:11

என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; சங் 6:7சங் 88:9சங் 73:26யோபு 17:7யோபு 33:19-22புலம் 4:17புலம் 5:17சங் 102:3-5

துக்கத்தினால் என் கண்ணும்

என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.

என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், சங் 32:3-4சங் 38:3சங் 88:15சங் 78:33ரோம 9:2யோபு 3:24சங் 102:3-28சங் 13:2

என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது;

என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து,

என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.

என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், சங் 38:11சங் 88:8மத் 26:56சங் 88:18ஏசா 49:7ஏசா 53:3-5யோபு 19:13-14சங் 41:8-9

நான் என் அயலாருக்கு நிந்தையும்,

எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்;

வீதியிலே என்னைக் கண்டவர்கள்

எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; சங் 88:4-5ஏசா 30:14சங் 119:83சங் 2:9ரோம 9:21-22ஏசா 38:11-12வெளி 2:27

உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.

அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எரே 20:10மத் 27:1புலம் 2:221 சாமு 20:332 சாமு 17:1-4மத் 26:3-4மத் 26:591 சாமு 19:10-17

எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால்

திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது;

என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.

நானோ, யெகோவாவே, சங் 56:3-4சங் 18:2சங் 43:5மத் 26:42சங் 140:6சங் 16:1-2மத் 26:39சங் 63:1

உம்மை நம்பியிருக்கிறேன்;

நீரே என் தேவன் என்று சொன்னேன்.

என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; அப் 1:7பிரச 3:1-8யோவா 17:1யோவா 7:6சங் 142:6யோபு 24:1சங் 17:8-92 தீமோ 4:6

என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும்

என்னைத் தப்புவியும்.

நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, சங் 4:6சங் 6:4தானி 9:9சங் 80:3ரோம 9:15தானி 9:17-18எபே 1:6-7எபே 2:4-7

உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; சங் 25:2-3எரே 20:11ஏசா 41:11-12சங் 115:17சங் 34:5சங் 35:261 சாமு 2:9சங் 35:4

நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;

துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.

நீதிமானுக்கு விரோதமாகப் யூதா 1:15சங் 94:41 சாமு 2:3ஏசா 54:17அப் 25:7யோவா 8:44யோவா 8:48மத் 12:24

பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

உமக்குப் பயந்தவர்களுக்கும், 1 கொரி 2:9ஏசா 64:4புலம் 3:23-251 பேது 1:4-5கொலோ 3:2-4யாக் 2:5சங் 16:11சங் 126:2-3

மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்,

நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!

மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, சங் 27:5சங் 32:7சங் 91:1-4யோபு 5:21சங் 64:2-4சங் 140:3சங் 140:5யாத் 18:11

நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி,

உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், 1 சாமு 23:7-13சங் 17:71 பேது 2:9எரே 1:18சங் 118:23சங் 98:1

அவருக்கு ஸ்தோத்திரம்.

உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று சங் 116:11எபி 5:7எசேக் 37:11யோபு 35:14யோனா 2:7-9சங் 6:9சங் 88:161 சாமு 23:26

நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்;

ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, சங் 97:10சங் 94:2சங் 145:20யோவா 10:27-30சங் 34:9சங் 30:41 சாமு 2:91 தெச 4:1

நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்;

உண்மையானவனைக் யெகோவா தற்காத்து,

வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.

யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, சங் 27:14சங் 146:5கொலோ 1:11ஏசா 35:3-4சங் 29:11எபி 12:12-13சங் 138:3யாக் 5:10-11

நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள்,

அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.