ஆதியாகமம் 9

Genesis 9
அத்தியாயம் 9

நோவாவோடு தேவனுடைய உடன்படிக்கை

பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். ஆதி 1:28ஆதி 9:7ஆதி 8:17ஆதி 1:22ஏசா 51:2சங் 128:3-4ஆதி 10:32ஆதி 2:3 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன. சங் 8:4-8ஆதி 1:28ஓசி 2:18யாக் 3:7எசேக் 34:25யோபு 5:22-23லேவி 26:6ஆதி 2:19 நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன். ரோம 14:141 தீமோ 4:3-5கொலோ 2:21-22உபா 12:151 கொரி 10:311 கொரி 10:25-26கொலோ 2:161 கொரி 10:23 இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். உபா 12:23உபா 12:16உபா 15:23அப் 15:20லேவி 7:26அப் 15:29லேவி 17:10-14லேவி 3:17 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். யாத் 21:28-29யாத் 21:12ஆதி 4:9-10எண் 35:31-33சங் 9:12உபா 21:1-9யாத் 20:13லேவி 19:16 மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும். லேவி 24:17மத் 26:52வெளி 13:10யாத் 21:12-14எண் 35:33ஆதி 1:26-27யாக் 3:9ஆதி 5:1 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள்” என்றார். ஆதி 9:1ஆதி 1:28ஆதி 9:19ஆதி 8:17

பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: “நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், ஆதி 6:18ஏசா 54:9-10ரோம 1:3ஆதி 17:7-8ஆதி 9:11ஆதி 9:17ஆதி 22:17எரே 33:20 உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். சங் 145:9ஆதி 8:1ஆதி 9:15-16யோபு 38:1-41யோபு 41:1-34யோனா 4:11சங் 36:5-6 இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். ஏசா 54:9ஆதி 8:21-222 பேது 3:7ஆதி 7:21-232 பேது 3:11 மேலும் தேவன்: “எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலை முறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: ஆதி 17:11மத் 26:26-28யாத் 12:131 கொரி 11:23-25யாத் 13:16ஆதி 9:17யோசு 2:12 நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். எசேக் 1:28வெளி 10:1வெளி 4:3 நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். உபா 7:9எசேக் 16:60ஏசா 54:8-10யாத் 28:121 இராஜா 8:23லேவி 26:42-45சங் 106:45எரே 14:21 அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன். எரே 32:40ஏசா 54:8-102 சாமு 23:5ஆதி 17:13ஆதி 17:19எபி 13:20ஆதி 17:7ஆதி 8:21-22 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம்” என்று நோவாவிடம் சொன்னார்.

நோவாவின் மகன்கள்

கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். ஆதி 10:1ஆதி 10:6ஆதி 9:25-27ஆதி 9:231 நாளாக 1:4 இம்மூவரும் நோவாவின் மகன்கள்; இவர்களாலே பூமியெங்கும் மக்கள் பெருகினார்கள். 1 நாளாக 1:4-28ஆதி 10:2-32ஆதி 5:32ஆதி 8:17

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். உபா 20:6உபா 28:30பிரச 5:9ஆதி 3:18-19ஆதி 3:23ஆதி 4:2ஆதி 5:29ஏசா 28:24-26 அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான். ஆப 2:15-16நீதி 20:1நீதி 23:31-32கலா 5:21தீத் 2:21 கொரி 10:12பிரச 7:20ஆதி 19:32-36 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான். நீதி 30:17கலா 6:11 கொரி 13:6மத் 18:15சங் 40:15ஆதி 10:15-19ஆதி 10:6ஒபதி 1:12-13 அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்துத் தங்களுடைய தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, பின்முகமாக வந்து, தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாகப் போகாததால், தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்கவில்லை. கலா 6:1யாத் 20:121 பேது 2:171 பேது 4:81 தீமோ 5:11 தீமோ 5:171 தீமோ 5:19லேவி 19:32 நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து: “கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். உபா 27:16யோசு 9:23நியாயாதி 1:28-301 இராஜா 9:20-21யோவா 8:34யோசு 9:272 நாளாக 8:7-8ஆதி 9:22 “சேமுடைய தேவனாகிய யெகோவாவிற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான். சங் 144:15ஆதி 12:1-3எபி 11:16உபா 33:26ஆதி 10:10-26ஆதி 27:37லூக் 3:23-36ரோம 9:5 யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். ரோம 11:12ரோம 15:12எபே 2:13-14எபே 3:6எபி 11:9-10எபே 2:19எபே 3:13ஓசி 2:14

வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். ஆதி 5:27ஆதி 5:32சங் 90:10ஆதி 11:11-25ஆதி 5:20ஆதி 5:5