ஓசியா 10

Hosea 10
அத்தியாயம் 10

இஸ்ரவேல் பலனற்ற திராட்சைச்செடி, அது தனக்குத்தானே பழங்களைக் கொடுக்கிறது; அவன் தன் பழங்களின் பெருக்கத்திற்குச் சரியாகப் பலிபீடங்களை அதிகமாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்பிற்குச் சரியாகச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். ஓசி 8:11ஓசி 12:11ஏசா 5:1-7லேவி 26:1பிலி 2:211 இராஜா 14:23எரே 2:28ரோம 14:7-8 ஏமாற்றுகிற இருதயம் அவர்களுக்கு இருக்கிறது; இப்போதும் குற்றம் சுமத்தப்படுவார்கள்; அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய சிலைகளை நாசமாக்குவார். 1 இராஜா 18:21மீகா 5:13யாக் 4:4யாக் 1:8லூக் 16:13வெளி 3:15-16செப்ப 1:51 சாமு 5:4 நாம் யெகோவாவுக்குப் பயப்படாமற்போனதினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். ஓசி 10:15ஓசி 10:7ஓசி 13:11ஆதி 49:10ஓசி 3:4யோவா 19:15மீகா 4:9ஓசி 11:5 பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். ஆமோ 5:7ஆமோ 6:12ஓசி 4:22இராஜா 17:3-4உபா 29:18எசேக் 17:13-192 தீமோ 3:3அப் 8:23 சமாரியாவின் குடிமக்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் மக்களும், அதின் பூசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கம்கொண்டாடுவார்கள். ஓசி 9:112இராஜா 23:5ஓசி 5:8ஓசி 4:15ஓசி 8:5-61 சாமு 4:21-22ஓசி 13:22 நாளாக 11:15 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவிற்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் அவமானமடைவான்; இஸ்ரவேல் தன் மர விக்கிரங்களினால் 1வெட்கப்படுவான். ஓசி 5:13ஏசா 30:3எரே 7:24தானி 11:82இராஜா 17:3எசேக் 36:31ஓசி 11:5-6ஓசி 4:19 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். ஓசி 10:32இராஜா 1:3யூதா 1:131 இராஜா 21:12இராஜா 15:302இராஜா 17:4ஓசி 10:15ஓசி 13:11 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; மலைகளைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்வார்கள். வெளி 6:16லூக் 23:30ஏசா 2:191 இராஜா 12:28-30ஆமோ 8:14ஓசி 9:6ஏசா 32:131 இராஜா 13:2 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்களிலிருந்து பாவம்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்கள்மேல் வந்த போர் தங்களைக் நெருங்குவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். ஓசி 9:9நியாயாதி 20:5நியாயாதி 19:22-30ஆதி 6:5ஆதி 8:21நியாயாதி 20:13-14நியாயாதி 20:17-48மத் 23:31-32 நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினாலே கட்டப்படும்போது, மக்கள் அவர்களுக்கு விரோதமாகக் கூடுவார்கள். எசேக் 5:13ஓசி 4:9எரே 16:16உபா 28:63எசேக் 16:37எசேக் 16:42எசேக் 23:46எசேக் 23:9 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான். ஓசி 4:16உபா 25:4எரே 50:112 நாளாக 28:5-8ஓசி 11:4ஓசி 2:5ஓசி 3:1ஓசி 9:1 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. எரே 4:3-4யாக் 3:18ஏசா 45:8நீதி 11:18ஏசா 55:6ஓசி 6:3எரே 29:12-14ஏசா 44:3 அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள். யோபு 4:8கலா 6:7-8நீதி 1:31நீதி 22:8ஓசி 8:7நீதி 18:20-21சங் 62:10பிரச 9:11 ஆகையால் உங்கள் மக்களுக்குள் குழப்பம் எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா பாதுகாப்புகளும் அழிக்கப்படும். ஓசி 13:162இராஜா 18:9-10ஆப 1:102இராஜா 17:162இராஜா 18:332இராஜா 19:11-13ஆமோ 3:8ஆமோ 9:5 உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் அழிக்கப்படுவான். ஓசி 10:5ஆமோ 7:9-17ஓசி 10:7ரோம 7:13ஓசி 10:3ஏசா 16:14