உடன்படிக்கை உடைக்கப்படுதல்
யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீங்கள் கேட்டு யூதாவின் மனிதருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன: எரே 11:6யாத் 19:52 நாளாக 23:162 நாளாக 29:102 நாளாக 34:312இராஜா 11:172இராஜா 23:2-3எரே 34:13-16 என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்; உபா 27:26உபா 28:15-68உபா 29:19-20கலா 3:10-13 நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனிதன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறாரென்று அவர்களுக்குச் சொல். லேவி 26:12உபா 4:20எரே 7:22-23சகரி 8:81 இராஜா 8:512 கொரி 6:16எரே 24:7உபா 11:27 இன்றையதினம் இருக்கிறதுபோல, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்குச் சொன்ன வாக்கை நான் உறுதிப்படுத்த இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் மறுமொழியாக, அப்படியே ஆகக்கடவது யெகோவாவே என்றேன். உபா 7:12-13எரே 28:6சங் 105:9-111 கொரி 14:16உபா 27:15-26உபா 6:3யாத் 13:5யாத் 3:8-17 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள். யாக் 1:22ரோம 2:13எரே 19:2எரே 3:12எரே 7:2யோவா 13:17ஏசா 58:1எரே 11:2-4 நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்த நாள்முதல், இந்நாள்வரை நான் அவர்களுக்கு உறுதியான சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கும்விதமாக எச்சரித்துவந்தேன். 2 நாளாக 36:151 சாமு 8:9எபே 4:17யாத் 15:26யாத் 23:21-222 தெச 3:12உபா 10:12-13உபா 11:26-28 ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கச்செய்வேன் என்று சொல் என்றார். எரே 7:24எரே 7:26எசேக் 20:8எரே 3:17எரே 35:15உபா 28:15-68உபா 29:21-24உபா 30:17-19 மேலும் யெகோவா என்னை நோக்கி: யூதாவின் மனிதருக்குள்ளும் எருசலேமின் குடிமக்களுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது. ஓசி 6:9அப் 23:12-15எசேக் 22:25-31எரே 5:31எரே 6:13எரே 8:10யோவா 11:53மத் 21:38-39 அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தெய்வங்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள். உபா 31:16எசேக் 16:591 சாமு 15:11நியாயாதி 2:12-13நியாயாதி 2:17நியாயாதி 2:19எரே 3:6-11சங் 78:8-10 ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 8:18ஏசா 1:15நீதி 1:28மீகா 3:4சகரி 7:132இராஜா 22:16எரே 14:12ஏசா 24:17 அப்பொழுது யூதா பட்டணங்களின் மனிதரும், எருசலேமின் குடிகளும் போய் தாங்கள் தூபங்காட்டியிருந்த தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை காப்பாற்றுவதில்லை. உபா 32:37எரே 2:282 நாளாக 28:22ஏசா 45:20நியாயாதி 10:14எரே 44:17-27 யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும் உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி; எருசலேமுடைய வீதிகளின் எண்ணிக்கையும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த வெட்கமான காரியத்திற்கு ஸ்தாபித்த பீடங்களின் எண்ணிக்கையும் சரி. எரே 2:282இராஜா 23:132இராஜா 21:4-52இராஜா 23:4-5உபா 32:16-17ஓசி 12:11ஏசா 2:8எரே 19:5 ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களைக் கேளாதிருப்பேன். எரே 7:16எரே 11:111 யோவா 5:16எரே 14:11யாத் 32:10சங் 66:18ஓசி 5:6எரே 15:1 தீயவருடன் மகா தீமை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகச்செய்வார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ சந்தோசப்படுகிறாயே. நீதி 2:14தீத் 1:151 கொரி 13:6எசேக் 16:25-34எசேக் 23:2-21ஆகா 2:12-14ஓசி 3:1ஏசா 1:11-15 நல்ல பழம் இருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பெயரைக் யெகோவா உனக்குச் சூட்டினார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது. ரோம 11:17-24ஏசா 27:11சங் 52:8சங் 80:16எசேக் 15:4-7எசேக் 20:47-48ஏசா 1:30-31எரே 21:14 பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 5:2எரே 12:2எரே 2:21எரே 19:152 சாமு 7:10எசேக் 17:5ஏசா 61:3எரே 11:11
எரேமியாவிற்கு எதிரான சதி
அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார். 1 சாமு 23:11-122இராஜா 6:9-10எசேக் 8:6-182இராஜா 6:14-20எரே 11:19ரோம 3:7மத் 21:3 மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன். ஏசா 53:7-8எரே 20:10சங் 83:4எரே 18:18யோபு 28:13சங் 31:13லூக் 20:10-15எண் 1:14 சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். எரே 20:12எரே 17:101 சாமு 16:7சங் 7:9வெளி 2:23ஆதி 18:25எரே 15:15எரே 17:18 ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்: ஆமோ 2:12ஏசா 30:10எரே 12:5-6எரே 20:10லூக் 13:33-34அப் 7:51-52ஆமோ 7:13-16எரே 20:1-2 இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள். எரே 18:211 தெச 2:15-162 நாளாக 36:17எரே 9:21புலம் 2:21 அவர்களில் மீதியாய் இருப்பவர்கள் இல்லை; நான் ஆனதோத்தின் மனிதரை விசாரிக்கும் வருடத்தில் அவர்கள்மேல் ஆபத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 23:12ஓசி 9:7எரே 50:27லூக் 19:44மீகா 7:4ஏசா 14:20-22எரே 11:19எரே 44:27