புலம்பல்கள் 2

Lamentations 2
அத்தியாயம் 2

எருசலேமின் மேல் தேவனுடைய கோபம்

ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; 1 நாளாக 28:2சங் 132:7எசேக் 28:14-16புலம் 3:43-44லூக் 10:18வெளி 12:7-9எசேக் 30:18ஏசா 14:12-15

அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல்

இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார்.

ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; புலம் 2:17புலம் 3:43சங் 89:39-40ஏசா 25:12ஏசா 43:28சங் 21:92 கொரி 10:4எசேக் 9:10

அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து,

தரையோடே தரையாக்கிப்போட்டார்;

இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; சங் 74:11ஏசா 42:25சங் 75:10சங் 75:5எரே 48:25சங் 79:5சங் 89:46உபா 32:22

விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி,

சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.

பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எரே 7:20எசேக் 24:25ஏசா 42:25எரே 21:5யோபு 6:4புலம் 3:12-13எரே 30:14நாகூ 1:6

எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று,

கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்;

மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.

ஆண்டவர் பகைவனைப் போலானார்; புலம் 2:22இராஜா 25:9எரே 30:14எரே 52:13புலம் 2:42 நாளாக 36:16-17எசேக் 2:10எரே 15:1

இஸ்ரவேலை விழுங்கினார்;

அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்;

அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.

தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; புலம் 1:4செப்ப 3:18புலம் 4:16எசேக் 12:12-13எசேக் 17:18ஏசா 1:13ஏசா 1:8ஏசா 43:28

சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்;

யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து,

தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.

ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; ஆமோ 2:5சங் 74:3-8எசேக் 24:21எசேக் 7:20-22எரே 52:13சங் 78:59-612 நாளாக 36:19அப் 6:13-14

தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;

அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்;

பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.

யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; 2இராஜா 21:13ஏசா 3:26ஏசா 34:11எரே 14:2ஆமோ 7:7-8எரே 5:102 சாமு 8:2எசேக் 20:22

நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை;

அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்;

அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.

எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; எசேக் 7:26ஓசி 3:42 நாளாக 15:3மீகா 3:6-7நெகே 1:3சங் 74:9ஆமோ 8:11-12உபா 28:36

அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்;

அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்;

வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை.

மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; ஏசா 3:26ஏசா 15:3யோபு 2:12-13ஆமோ 8:3எசேக் 7:18ஏசா 47:1யோசு 7:6புலம் 1:1

தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்;

சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்;

எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; புலம் 1:20எரே 4:19யோபு 16:13புலம் 1:16ஏசா 22:4புலம் 3:48-51லூக் 23:29சங் 22:14

என் குடல்கள் கொதிக்கிறது;

என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது;

குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.

அவர்கள் காயப்பட்டவர்களைப்போல எசேக் 30:24ஏசா 53:12

பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும்,

தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி:

தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.

மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? புலம் 1:122 சாமு 5:20எரே 14:17எரே 30:12-15எரே 8:22தானி 9:12எசேக் 26:3-4ஏசா 37:22

உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?

மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே,

நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்?

உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே,

உன்னைக் குணமாக்குகிறவன் யார்?

உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; எசேக் 22:28ஏசா 58:1எரே 5:31எசேக் 22:25மீகா 3:5-7எரே 2:8எரே 8:10-112 பேது 2:1-3

அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல்,

பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.

வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; எரே 18:16சங் 48:2எசேக் 25:6எரே 19:8சங் 50:2ஏசா 37:22ஏசா 64:11மத் 27:39

மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து,

கேலியாக தங்கள் தலைகளை அசைத்து:

பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; சங் 35:21புலம் 3:46சங் 37:12யோபு 16:9-10சங் 56:2எரே 51:34சங் 124:3சங் 22:13

பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்;

அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே,

இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; எசேக் 5:11சங் 89:42உபா 28:15-68உபா 31:16-17எசேக் 7:8-9எசேக் 8:18புலம் 1:5புலம் 2:1-2

ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்;

அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்;

உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.

அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சங் 119:145எரே 9:1புலம் 1:16புலம் 2:8புலம் 3:48-49சங் 119:136ஓசி 7:14ஆப 2:11

மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே,

உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.

எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; சங் 62:8ஏசா 26:9சங் 119:147-148சங் 142:2மாற் 1:351 சாமு 1:15சங் 141:2புலம் 2:11-12

ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு;

எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

யெகோவாவே, யாருக்கு இந்த விதமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; எரே 19:9புலம் 4:10சங் 78:64உபா 9:26யாத் 32:11புலம் 4:132இராஜா 6:28-29உபா 28:53-57

பெண்கள், கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பத்தின் பிள்ளைகளை சாப்பிடவேண்டுமோ?

ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; 2 நாளாக 36:17சகரி 11:6எரே 13:14புலம் 3:43எரே 18:21புலம் 1:15புலம் 2:17புலம் 2:2

என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்;

உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; எரே 6:25சங் 31:13ஏசா 24:17-18எரே 16:2-4எரே 20:3ஆமோ 9:1-4உபா 28:18ஓசி 9:12-16

யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை;

நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.