எரேமியா 15

Jeremiah 15
அத்தியாயம் 15

யெகோவா என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்திற்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த மக்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு. எசேக் 14:14எசேக் 14:20-21எரே 14:11எரே 11:14சங் 106:23எரே 7:15-16யாத் 32:11-14சங் 99:6 எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு. எரே 43:11சகரி 11:9எசேக் 5:2வெளி 13:10வெளி 6:3-8எசேக் 5:12ஏசா 24:18எரே 14:12 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 28:26லேவி 26:16லேவி 26:22எசேக் 14:21லேவி 26:25வெளி 6:81 இராஜா 21:23-24ஏசா 18:6 எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன். எரே 24:92இராஜா 21:11-132இராஜா 21:16-172இராஜா 23:26-272இராஜா 24:3-4உபா 28:25எசேக் 23:46எரே 29:18 எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதாபப்படுவார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்? ஏசா 51:19நாகூ 3:7எரே 21:7சங் 69:201 சாமு 17:221 சாமு 25:5யாத் 18:7எரே 13:14 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 7:24செப்ப 1:4ஓசி 11:7ஏசா 1:4சகரி 7:11எசேக் 25:7ஓசி 13:14எரே 1:16 தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன். எரே 51:2மத் 3:12ஏசா 41:16ஏசா 9:13எரே 5:3எரே 18:21எரே 8:4-5சங் 1:4 கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன். ஏசா 3:25எரே 4:16எரே 5:6எரே 6:4-5லூக் 21:35 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1 சாமு 2:5ஏசா 47:9ஆமோ 8:9-10புலம் 1:1எசேக் 5:12எரே 15:2-3எரே 21:7எரே 44:27 என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதிற்கும் உள்ளானவனாயிருக்க என்னை நீ பெற்றாயே; ஐயோ, நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லோரும் என்னைச் சபிக்கிறார்கள். லூக் 6:22அப் 16:20-22அப் 17:6-8எசேக் 3:7-9எரே 1:18-19எரே 15:20யோபு 3:1-26லூக் 2:34 உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் பகைவனுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். நீதி 16:7எரே 29:11-14சங் 106:46சங் 37:3-11பிரச 8:12எரே 37:3எரே 21:2எரே 40:2-6 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ? ஆப 1:5-10ஏசா 45:9எரே 1:18-19எரே 21:4-5எரே 28:14யோபு 40:9 உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன். எரே 17:3சங் 44:12ஏசா 52:3எரே 20:5ஏசா 52:5எரே 15:8 நீ அறியாத தேசத்தில் உன் எதிரிகள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகச்செய்வேன்; உங்கள்மேல் எரியப்போகிற நெருப்பை என் கோபத்தினால் ஏற்பட்டது என்று யெகோவா சொன்னார். உபா 32:22எரே 16:13உபா 28:36எரே 17:4சங் 21:9உபா 28:64ஆமோ 5:27உபா 28:25 யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். எரே 12:3சங் 69:7-9லூக் 21:17எரே 17:16எரே 20:12நெகே 13:221 பேது 4:14-16எரே 20:8 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. வெளி 10:9-10எசேக் 3:1-3சங் 119:101-103யோபு 23:12சங் 19:10சங் 119:111சங் 119:97சங் 119:72 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர். புலம் 3:28சங் 1:1எசேக் 3:24-25சங் 26:4-52 கொரி 6:17எரே 13:17எரே 6:11சங் 102:7 என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ? எரே 30:15யோபு 34:6மீகா 1:9எரே 1:18-19எரே 14:19எரே 14:3எரே 20:7எரே 30:12 இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார். சகரி 3:7லூக் 21:15லேவி 10:10எசேக் 44:23எசேக் 22:26யூதா 1:24கலா 1:10எபி 5:14 உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 1:18-19எசேக் 3:9அப் 18:9-10சங் 124:1-3சங் 46:72 தீமோ 4:16-17ஏசா 41:10ஏசா 8:9-10 நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார். 2 கொரி 1:10ஏசா 49:24-25எரே 50:34ஏசா 54:17ஆதி 48:16ஏசா 29:20சங் 37:40சங் 27:2