முன்னுரை
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். யாக் 5:11எசேக் 14:14எசேக் 14:20யோபு 28:28யோபு 2:3ஆதி 6:9யோபு 1:8யோபு 23:11-12 அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள். யோபு 42:13சங் 127:3-5எஸ்த 5:11யோபு 13:13சங் 107:38சங் 128:3 அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். யோபு 29:25யோபு 42:12நியாயாதி 6:31 இராஜா 4:30எண் 23:7நீதி 10:22ஆதி 12:16ஆதி 12:5 அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள். எபி 13:1சங் 133:1 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே நிந்தித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை வரவழைத்து, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லோருடைய எண்ணிக்கையின் வரிசையில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்த முறையில் யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். யோபு 42:8ஆதி 8:201 சாமு 16:5எபே 6:18ஆதி 35:2-3யோபு 8:41 இராஜா 21:101 இராஜா 21:13
யோபுவுக்கு வந்த முதலாம் சோதனை
ஒருநாள் தேவதூதர்கள் 1 யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். யோபு 2:1யோபு 38:7சகரி 3:1வெளி 12:9-101 இராஜா 22:191 நாளாக 21:1ஆதி 6:4யோவா 6:70 யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 1 பேது 5:8யோபு 2:2மத் 12:43வெளி 12:12-17வெளி 12:9வெளி 20:82இராஜா 5:25சகரி 1:10-11 யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 2:3யோபு 1:1எண் 12:7-8நீதி 8:132இராஜா 23:25ஏசா 1:16யோபு 8:20யோபு 23:11-12 அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? 1 தீமோ 4:8மத் 16:261 தீமோ 6:6யோபு 1:21யோபு 21:14-15யோபு 2:10மல்கி 1:10 நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது. சங் 34:7சகரி 2:51 பேது 1:5உபா 28:2-6நீதி 10:22சகரி 2:8யோபு 31:25சங் 107:38 ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். யோபு 2:5யோபு 19:21வெளி 16:11மல்கி 3:13-14வெளி 16:21வெளி 16:9ஆதி 26:11ஏசா 5:25 யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான். லூக் 22:31-322 கொரி 12:7யோவா 3:35-361 கொரி 10:13யோவா 19:11ஏசா 27:8யோபு 2:4-7லூக் 8:32-33 பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது, லூக் 21:34நீதி 27:1பிரச 9:12லூக் 17:27-29யோபு 1:4லூக் 12:19-20 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது, 1 சாமு 4:17எரே 51:312 சாமு 15:13 சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். ஆதி 10:7யோபு 6:191 சாமு 22:20-21எசேக் 23:42ஆதி 10:28ஆதி 25:3ஏசா 45:14யோபு 1:16-17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய நெருப்பு விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 2இராஜா 1:12ஆதி 19:241 இராஜா 18:38லேவி 10:22இராஜா 1:10ஆமோ 7:4லேவி 9:24எண் 11:1-3 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். ஆதி 11:28ஆப 1:6ஆதி 11:31ஏசா 23:132 சாமு 1:3யோபு 1:15 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது, யோபு 1:4யோபு 1:13புலம் 1:12சங் 34:192 சாமு 13:28ஆமோ 4:6-11பிரச 9:2ஏசா 28:19 வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 1 இராஜா 20:302 சாமு 18:33அப் 28:4எபே 2:2ஆதி 37:32-33ஆதி 42:36நியாயாதி 16:30எரே 4:11-12 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: 1 பேது 5:62 சாமு 12:16-20ஆதி 37:34எஸ்றா 9:3ஆதி 37:29உபா 9:18மத் 26:392 நாளாக 7:3 நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான். பிரச 5:151 தீமோ 6:71 தெச 5:18யாக் 1:17யோபு 2:10சங் 49:17பிரச 12:7எபே 5:20 இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை. யாக் 1:12யோபு 2:101 பேது 1:7யாக் 1:4ரோம 9:20யோபு 34:18-19யோபு 40:4-8யோபு 34:10