“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; யோபு 12:4லூக் 23:35சங் 35:15-16சங் 69:122இராஜா 2:23அப் 17:5ஏசா 3:5யோபு 19:13-19
இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, யோபு 24:5எபி 11:38யோபு 24:13-16
அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய்,
செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; லூக் 15:162இராஜா 4:38-39ஆமோ 7:14
காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; தானி 4:25தானி 4:32-33ஆதி 4:12-14சங் 109:10
திருடனைத் துரத்துகிறதுபோல்:
திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், 1 சாமு 22:1-2நியாயாதி 6:2ஏசா 2:19வெளி 6:15
பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள். ஆதி 16:12யோபு 11:12யோபு 6:5
அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், நீதி 16:22ஏசா 32:6எரே 7:18யோபு 40:4மாற் 6:24நீதி 1:22நீதி 1:72 நாளாக 22:3
தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். யோபு 17:6புலம் 3:63புலம் 3:14யோபு 12:4சங் 35:15-16சங் 69:11-12சங் 44:14
என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, ஏசா 50:6மத் 26:67எண் 12:14சங் 88:8உபா 25:9மத் 27:30யோபு 17:6யோபு 19:13-14
என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, யோபு 12:21யோபு 12:18ரூத் 1:212 சாமு 16:5-8யாக் 1:26மத் 26:67-68மத் 27:39-44சங் 32:9
என்னைச் சிறுமைப்படுத்தினதினால்,
அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, யோபு 19:12ஏசா 3:5யோபு 19:18சங் 140:4-5
தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; ஏசா 3:12சங் 69:26சகரி 1:15
அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
பெரிய வழியை உண்டாக்கி, ஏசா 8:7-8யோபு 22:16சங் 18:4சங் 69:14-15
தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, ஓசி 13:3யோபு 6:4ஏசா 44:22யோபு 31:23சங் 55:4-5சங் 88:15ஓசி 6:4யோபு 10:16
அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது;
என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; சங் 42:4சங் 22:14ஏசா 53:12யோபு 3:24சங் 40:121 சாமு 1:15
உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, ஏசா 38:13யோபு 33:19-21யோபு 7:4சங் 22:2சங் 6:2-6சங் 38:2-8
என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; யோபு 19:20யோபு 2:7யோபு 7:5ஏசா 1:5-6சங் 38:5
அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல,
என்னைச் சுற்றிக்கொண்டது.
சேற்றிலே தள்ளப்பட்டேன்; யோபு 9:31ஆதி 18:27யோபு 42:6சங் 69:14எரே 38:6சங் 69:1-2யோபு 2:8
புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யோபு 19:7புலம் 3:8சங் 22:2சங் 80:4-5யோபு 27:9புலம் 3:44மத் 15:23
நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்;
கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; யோபு 10:14-17யோபு 16:9-141 பேது 5:6யோபு 10:3யோபு 19:6-9எரே 30:14யோபு 13:25-28யோபு 19:22
உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, யோபு 27:21சங் 1:4எசேக் 5:2ஓசி 13:3ஓசி 4:19ஏசா 17:13எரே 4:11-12யோபு 21:18
என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். பிரச 12:5-7பிரச 8:8பிரச 9:5எபி 9:272 சாமு 14:14ஆதி 3:19யோபு 14:5யோபு 21:33
ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும், நியாயாதி 5:31யோபு 19:7மத் 27:39-44சங் 35:25
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ரோம 12:15சங் 35:13-14எரே 13:172 கொரி 9:9தானி 4:27ஏசா 58:7-8எரே 18:20யோவா 11:35
ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால்,
அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல்,
எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; எரே 8:15எரே 14:19யோபு 3:25-26ஏசா 50:10யோபு 18:6யோபு 19:8யோபு 23:17மீகா 1:12
வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
என் உள்ளம் கொதித்து, புலம் 2:11எரே 31:20எரே 4:19புலம் 1:20சங் 22:4
அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; சங் 38:6சங் 42:9சங் 43:2ஏசா 53:3-4யோபு 19:7புலம் 3:1-3
நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், மீகா 1:8சங் 102:6யோபு 17:14மல்கி 1:3சங் 44:19ஏசா 13:21-22ஏசா 38:14
நரிகளுக்குத் தோழனுமானேன்.
என் தோல் என்மேல் கறுத்துப்போனது; புலம் 4:8சங் 102:3சங் 119:83புலம் 3:4புலம் 5:10
என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
என் சுரமண்டலம் புலம்பலாகவும், புலம் 5:15ஏசா 21:4தானி 6:18பிரச 3:4ஏசா 22:12ஏசா 24:7-9சங் 137:1-4
என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.