இயேசு தம்முடைய சீடர்களைத் தேற்றுதல்
உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள். ஏசா 26:3யோவா 16:22-23ஏசா 12:2-32 கொரி 12:9-10யோவா 14:27-28யோவா 6:40சங் 42:5-6யோவா 12:44 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன். 2 கொரி 5:1யோவா 13:36எபி 13:14வெளி 21:2எபி 11:10வெளி 3:12எபி 11:14-16யோவா 12:25-26 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 1 தெச 4:16-17யோவா 12:262 தீமோ 2:12அப் 1:11எபி 9:28யோவா 14:18-23யோவா 14:28யோவா 17:24 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். யோவா 10:9யோவா 16:28யோவா 12:26யோவா 13:3யோவா 14:2யோவா 3:16-17யோவா 3:36யோவா 6:40
இயேசுவே பிதாவைச் சென்றடையும் வழி
தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். யோவா 11:16மாற் 9:19யோவா 20:25-28யோவா 15:12லூக் 24:25மாற் 8:17-18எபி 5:11-12 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். அப் 4:12யோவா 10:9எபே 2:18யோவா 11:25-26யோவா 1:41 யோவா 5:20யோவா 1:141 யோவா 5:11-12 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார். கொலோ 1:15-17யோவா 8:19லூக் 10:22யோவா 17:8யோவா 17:61 யோவா 2:132 கொரி 4:6கொலோ 2:2-3
பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். யாத் 33:18-23வெளி 22:3-5யோவா 1:43-46யோவா 16:25சங் 17:15யோவா 6:5-7யோவா 12:21-22யோபு 33:26 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? கொலோ 1:15யோவா 12:45யோவா 14:7எபி 1:3யோவா 10:30யோவா 1:14பிலி 2:6யோவா 14:20 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார். யோவா 5:19யோவா 10:38அப் 10:38யோவா 10:30யோவா 8:28யோவா 12:49கொலோ 2:9யோவா 6:38-40 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள். யோவா 10:25யோவா 10:38யோவா 5:36யோவா 14:10அப் 2:22எபி 2:4யோவா 10:32மத் 11:4-5 உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான். மத் 21:21மாற் 16:17லூக் 10:17-19அப் 16:18அப் 19:12அப் 9:34அப் 3:6-8அப் 5:15 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன். யோவா 15:7மாற் 11:24மத் 7:7மத் 21:221 யோவா 5:14யோவா 16:23யோவா 14:14யோவா 15:16 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
இயேசு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தல்
நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். 1 யோவா 2:3-51 யோவா 5:2-3யோவா 14:21-242 யோவா 1:6யோவா 15:10-141 யோவா 4:19-202 கொரி 5:14-151 பேது 1:8 நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். யோவா 14:26யோவா 15:26யோவா 16:7-15ரோம 15:13ரோம 8:26-27கலா 5:22ரோம 14:171 யோவா 2:1 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். எசேக் 36:27யோவா 16:131 யோவா 2:271 யோவா 4:6யோவா 15:261 கொரி 2:141 கொரி 3:162 தீமோ 1:14 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன். யோவா 14:3சங் 23:4யோவா 14:16யோவா 14:27-28மத் 18:20மத் 28:20யோவா 16:33எபி 2:18 இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள். யோவா 16:16எபி 7:25யோவா 6:56-58யோவா 7:33கொலோ 3:3-4யோவா 11:251 கொரி 15:452 கொரி 4:10-12 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள். யோவா 15:5-7கலா 2:20யோவா 17:21-23யோவா 17:26யோவா 14:101 யோவா 4:12யோவா 10:38ரோம 8:1 என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். யோவா 14:151 யோவா 5:31 யோவா 2:52 யோவா 1:6யோவா 15:9-10யோவா 16:27உபா 11:13லூக் 11:28 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான். அப் 1:13லூக் 6:16அப் 10:40-41மத் 10:3யோவா 3:4யோவா 3:9யோவா 6:60யூதா 1:1 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். யோவா 14:21யோவா 14:15வெளி 3:20-211 யோவா 4:15-161 யோவா 2:241 யோவா 4:42 கொரி 6:16யோவா 10:30 என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது. யோவா 7:16யோவா 14:10யோவா 3:34யோவா 5:19யோவா 8:42யோவா 14:21-231 யோவா 3:16-20யோவா 14:15 நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன். யோவா 17:6-8யோவா 13:19யோவா 16:1-4யோவா 16:12யோவா 14:29யோவா 15:11 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார். யோவா 15:26யோவா 14:161 கொரி 2:10-131 யோவா 2:27யோவா 16:71 யோவா 2:20எபே 1:17ரோம 15:13 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. பிலி 4:7யோவா 16:33ஏசா 41:102 தெச 3:16கொலோ 3:152 தீமோ 1:7ரோம 15:13எண் 6:26 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார். யோவா 10:29-301 கொரி 15:24-281 கொரி 11:3எபி 1:2-3எபி 2:9-15யோவா 13:16யோவா 20:17பிலி 2:6-11 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். யோவா 13:19யோவா 16:4-31மத் 24:24-25 இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. 1 யோவா 5:191 யோவா 4:4எபே 6:12யோவா 12:31வெளி 12:9எபே 2:21 பேது 2:222 கொரி 4:4 நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார். யோவா 10:18யோவா 12:49யோவா 4:34லூக் 12:50பிலி 2:8எபி 5:7-8சங் 40:8யோவா 15:9