ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்
இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். மாற் 6:31-44யோவா 6:23லூக் 5:1மத் 4:18யோவா 21:1எண் 34:11மத் 14:13-21யோசு 12:3 அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள். மத் 4:24-25மத் 12:15மத் 15:30-31யோவா 2:11மத் 14:14மாற் 6:33மத் 8:1மத் 13:2 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார். யோவா 6:15லூக் 9:28மத் 14:23லூக் 6:12-13மத் 15:29 அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது. யோவா 2:13யோவா 11:55உபா 16:1யாத் 12:6-14யோவா 5:1யோவா 12:1யோவா 13:1லேவி 23:5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார். லூக் 9:12-13மத் 15:33யோவா 1:43யோவா 4:35மத் 14:14-15மாற் 6:34-35மாற் 8:2-4 தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். ஆதி 22:12 நாளாக 32:31உபா 13:3உபா 8:16உபா 33:8உபா 8:2 பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான். மாற் 6:37எண் 11:21-22யோவா 12:52இராஜா 4:43மத் 18:28 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து: யோவா 1:40-44மத் 4:18 இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான். 2இராஜா 4:42-44மத் 14:17மாற் 6:38லூக் 9:13சங் 78:19மத் 16:9மாற் 8:192 கொரி 8:9 இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். லூக் 9:14-16மத் 14:18-19மாற் 8:6-7மத் 15:35-36மாற் 6:39-41 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார். 1 தெச 5:18யோவா 6:23லூக் 24:30மத் 15:36ரோம 14:61 கொரி 10:311 தீமோ 4:4-51 சாமு 9:13 அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். லூக் 1:53லூக் 9:17நெகே 9:25மாற் 6:42-44நெகே 8:10மத் 14:20-21மத் 15:37-38மாற் 8:8-9 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். நீதி 11:24-251 இராஜா 7:15-162 நாளாக 25:92 கொரி 9:8-92இராஜா 4:2-7பிலி 4:19 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். உபா 18:15-18அப் 7:37மத் 21:11மத் 11:3அப் 3:22-24ஆதி 49:10யோவா 1:21யோவா 7:40 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். யோவா 18:36யோவா 7:3-4யோவா 6:15-21லூக் 19:38மாற் 11:9மாற் 6:45-52மத் 14:22-33யோவா 2:24-25
இயேசு தண்ணீரின்மேல் நடத்தல்
மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய், படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். மாற் 6:45யோவா 6:24-25யோவா 2:12யோவா 4:46 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. சங் 135:7சங் 107:25மத் 14:24 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள். மாற் 6:47-49மத் 14:25-26யோவா 14:18சங் 93:4யோபு 9:8யோனா 1:13எசேக் 27:26லூக் 24:36-39 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். மத் 14:27-31ஏசா 43:1-2ஏசா 44:8ஏசா 41:10ஏசா 41:14வெளி 1:17-18மாற் 6:50மாற் 16:6 அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. மாற் 6:51மத் 14:32-33சங் 24:7-10வெளி 3:20உன்னத 3:4 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள். மாற் 6:45யோவா 6:15-21யோவா 6:2மத் 14:22 கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது. யோவா 6:1யோவா 6:11-12 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். யோவா 6:17லூக் 8:40மாற் 1:37மாற் 6:53யோவா 18:4-5யோவா 20:15யோவா 6:23யோவா 6:59
ஜீவ அப்பமாகிய இயேசு
கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள். யோவா 1:38-39மத் 23:7 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யாக் 4:3-4பிலி 3:19பிலி 2:211 தீமோ 6:5அப் 8:18-21எசேக் 33:31ரோம 16:18யோவா 6:2 அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். கொலோ 3:2ஏசா 55:2யோவா 6:542 தீமோ 2:19யோவா 6:40மத் 6:19ரோம 6:23யோவா 6:51 அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். அப் 16:30அப் 9:6லூக் 10:25மத் 19:16அப் 2:37உபா 5:27மீகா 6:7-8எரே 42:20 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார். 1 யோவா 3:23அப் 16:31யோவா 3:36எபி 5:91 யோவா 5:1மாற் 16:16ரோம 4:4-5யோவா 5:39 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்? யோவா 12:371 கொரி 1:22யோவா 10:38யோவா 6:361 இராஜா 13:31 இராஜா 13:5அப் 4:30யாத் 4:8 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள். நெகே 9:15சங் 105:40சங் 78:24-25யாத் 16:4-15யாத் 16:35உபா 8:3யோவா 6:49நெகே 9:20 இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யாத் 16:4யோவா 15:1யோவா 6:58யாத் 16:8கலா 4:4யோவா 1:9யோவா 6:33யோவா 6:35 வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார். யோவா 8:42யோவா 17:8யோவா 3:131 யோவா 1:1-2யோவா 6:501 தீமோ 1:15யோவா 13:3யோவா 16:28 அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள். யோவா 4:15யோவா 6:26சங் 4:6 இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான். யோவா 6:48-58ஏசா 55:1-3வெளி 22:17யோவா 6:41ஏசா 49:10யோவா 7:37-38வெளி 7:16மத் 11:28 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 1 பேது 1:8-9யோவா 12:37யோவா 6:26லூக் 16:31யோவா 15:24யோவா 6:30யோவா 6:40யோவா 6:64 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை. மத் 11:28யோவா 6:39யோவா 17:24யோவா 10:28-29யோவா 17:2யோவா 17:62 தீமோ 2:19ஏசா 55:7 என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன். யோவா 5:30யோவா 4:34யோவா 3:31பிலி 2:7-8சங் 40:7-8ஏசா 53:10யோவா 6:33யோவா 3:13 அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது. யோவா 17:12யோவா 6:40யோவா 18:9யோவா 10:27-30யோவா 6:54யோவா 6:44யூதா 1:1ரோம 8:11 குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். யோவா 5:24ரோம 6:23யோவா 6:54யோவா 11:25யோவா 3:15-18யோவா 4:14யோவா 1:14யோவா 12:45 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: யோவா 6:51-52யோவா 6:33யோவா 6:48யோவா 6:60யோவா 6:66யோவா 7:12யோவா 6:43யோவா 6:58 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். லூக் 4:22மத் 13:55-56மாற் 6:31 கொரி 15:47யோவா 7:27-28கலா 4:4யோவா 6:38யோவா 6:62 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம். எபி 4:13யோவா 6:64யோவா 16:19மத் 16:8மாற் 9:33 என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவா 6:65மத் 11:25-27யோவா 6:39-40எபே 2:4-10யோவா 12:32மத் 16:17யோவா 6:45தீத் 3:3-5 எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். ஏசா 54:13எரே 31:33-34எபி 10:16எபி 8:10-111 தெச 4:9மீகா 4:2ஏசா 2:3யோவா 6:65 தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர். யோவா 1:18யோவா 7:29லூக் 10:22மத் 11:271 யோவா 4:121 தீமோ 6:16கொலோ 1:15யோவா 14:9-10 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவா 3:36கொலோ 3:3-4யோவா 3:16யோவா 5:24ரோம 5:9-10யோவா 3:18யோவா 6:40யோவா 6:54 ஜீவ அப்பம் நானே. யோவா 6:511 கொரி 11:24-251 கொரி 10:16-17யோவா 6:41யோவா 6:33-35 உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள். எபி 3:17-19யூதா 1:51 கொரி 10:3-5யோவா 6:31யோவா 6:58எண் 26:65சகரி 1:5 இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே. யோவா 6:33ரோம 8:10யோவா 6:51யோவா 6:58யோவா 8:51யோவா 3:13யோவா 6:42யோவா 11:25-26 நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். யோவா 6:33லூக் 22:19தீத் 2:14எபி 10:5-12யோவா 3:132 கொரி 5:21மத் 20:28எபி 10:20 அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள். யோவா 10:19யோவா 9:16யோவா 6:411 கொரி 2:14அப் 17:32யோவா 3:4யோவா 3:9யோவா 4:11 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 யோவா 5:12மத் 26:26-28யோவா 6:55யோவா 6:47யோவா 15:4யோவா 6:26-27யோவா 3:3வெளி 2:17 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். யோவா 6:39-40பிலி 3:7-10கலா 2:20யோவா 6:27நீதி 9:4-6ஏசா 55:1-3யோவா 4:14யோவா 6:47 என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது. யோவா 6:32யோவா 8:31யோவா 8:36யோவா 1:9யோவா 15:11 யோவா 5:20எபி 8:2யோவா 1:47 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 1 யோவா 3:24யோவா 15:4-5வெளி 3:20யோவா 14:20யோவா 17:21-23சங் 91:91 யோவா 4:15-16யோவா 14:23 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். கலா 2:20யோவா 17:21யோவா 5:26கொலோ 3:3-4எரே 10:10யோவா 3:17சங் 18:461 கொரி 15:22 வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். யோவா 3:36யோவா 6:47-51யோவா 6:31-34யோவா 6:41 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார். யோவா 6:24யோவா 18:20லூக் 4:31நீதி 1:20-23நீதி 8:1-3சங் 40:9-10
இயேசுவின் சீடர்கள் இடறலடைதல்
அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள். யோவா 6:66யோவா 8:43யோவா 8:31மத் 11:6யோவா 6:41-422 பேது 3:16எபி 5:11 சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ? யோவா 2:24-25யோவா 6:64எபி 4:13வெளி 2:23யோவா 21:17மத் 11:6 மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்? யோவா 3:13மாற் 16:19எபே 4:8-10லூக் 24:511 பேது 3:22அப் 1:9யோவா 16:28யோவா 17:4-5 ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. கலா 5:25எபி 4:12சங் 119:93யோவா 6:68சங் 119:1301 பேது 1:23சங் 119:50உபா 32:47 ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 2 தீமோ 2:19யோவா 10:26எபி 4:13யோவா 13:10-11யோவா 2:24-25யோவா 5:42யோவா 6:61யோவா 6:70-71 ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார். யோவா 6:44-45யோவா 6:37யோவா 3:27யோவா 10:26-27எபே 2:8-92 தீமோ 2:25யாக் 1:16-18தீத் 3:3-7 அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள். லூக் 9:621 யோவா 2:19எபி 10:38யோவா 6:60யோவா 8:312 தீமோ 4:10மத் 19:22யோவா 6:64 அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார். யோவா 6:70லூக் 14:25-33ரூத் 1:11-18யோசு 24:15-222 சாமு 15:19-20மத் 10:2 சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. சங் 73:25யோவா 5:241 யோவா 5:11-13அப் 4:12அப் 5:20யோவா 6:63மத் 16:16அப் 7:38 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவா 11:27லூக் 9:20மாற் 8:291 யோவா 5:11 யோவா 5:20யோவா 1:45-49யோவா 20:28யோவா 1:29 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார். யோவா 13:27யோவா 13:2யோவா 17:12யோவா 6:64யோவா 13:18வெளி 3:9-101 யோவா 3:81 தீமோ 3:11 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார். மத் 26:14-16அப் 1:16-20யூதா 1:4சங் 41:9அப் 2:23யோவா 13:26யோவா 18:2-6மத் 27:3-5