யோவான் 1

John 1
அத்தியாயம் 1

வார்த்தை மாம்சமானது

ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. ஆதி 1:1யோவா 17:5வெளி 19:13கொலோ 1:17யோவா 1:141 யோவா 1:1-2வெளி 22:13யோவா 1:2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை. கொலோ 1:16-171 கொரி 8:6வெளி 4:11சங் 33:6ஆதி 1:26யோவா 1:10எபி 1:2-3ஏசா 45:18 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது. யோவா 8:12யோவா 12:46யோவா 5:261 யோவா 1:5-7யோவா 9:5லூக் 1:78-79யோவா 11:25ஏசா 42:6-7 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை. யோவா 3:19-20யோவா 12:36-401 கொரி 2:14யோபு 24:13-17யோவா 1:10ரோம 1:28நீதி 1:22நீதி 1:29-30 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான். மல்கி 3:1யோவா 3:28ஏசா 40:3-5அப் 13:24யோவா 1:33லூக் 1:76மத் 11:10மத் 3:1-11 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அப் 19:4யோவா 1:12யோவா 1:32-34யோவா 1:36யோவா 5:33-35யோவா 1:92 பேது 3:9யோவா 1:26-27 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான். யோவா 1:20யோவா 3:28அப் 19:4 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவா 12:46யோவா 1:41 யோவா 2:8ஏசா 49:61 தெச 5:4-7யோவா 1:71 யோவா 5:20யோவா 14:6 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. யோவா 17:251 யோவா 3:11 கொரி 2:81 கொரி 1:21மத் 11:27எபி 11:3அப் 17:24-27எபி 1:2-3 அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. லூக் 19:14ஏசா 53:2-3யோவா 3:32அப் 7:51-52லூக் 20:13-15மத் 15:24அப் 3:25-26ரோம 15:8 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். கலா 3:26ரோம 8:141 யோவா 3:12 கொரி 6:17-18கலா 4:6யோவா 3:18மத் 10:401 யோவா 5:12-13 அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள். 1 யோவா 3:9யாக் 1:181 பேது 1:231 பேது 1:3யோவா 3:5-81 யோவா 5:41 யோவா 2:28-291 யோவா 4:7 அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 1 யோவா 4:91 தீமோ 3:16கலா 4:4யோவா 1:1ஏசா 40:5எபி 1:31 யோவா 1:1-2பிலி 2:6-8 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான். மத் 3:11கொலோ 1:17யோவா 1:1-2யோவா 1:29-34யோவா 3:26-36லூக் 3:16யோவா 1:7-8யோவா 5:33-36 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். கொலோ 1:19ரோம 5:2எபே 2:5-10கொலோ 2:9-10எபே 4:7-13எபே 3:19எபே 1:23ரோம 5:17 ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது. யோவா 14:6ரோம 6:14ரோம 3:19-26ரோம 5:20-21யோவா 1:14எபி 9:22யோவா 8:32யோவா 7:19 தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். கொலோ 1:15யோவா 6:46மத் 11:27லூக் 10:221 யோவா 4:121 தீமோ 6:161 யோவா 4:91 யோவா 4:20

யோவான்ஸ்நானன் கிறிஸ்து அல்ல

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, யோவா 10:24லூக் 3:15-18அப் 19:4அப் 13:25யோவா 5:33-36மத் 21:23-32யோவா 2:18யோவா 5:10 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான். மத் 3:11-12மாற் 1:7-8யோவா 3:28-36லூக் 3:15-17 அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான். உபா 18:15-18மல்கி 4:5மத் 11:14யோவா 1:25லூக் 1:17மத் 16:14மத் 17:10-12யோவா 7:40 அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 2 சாமு 24:13 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான். ஏசா 40:3-5மாற் 1:3மத் 3:3யோவா 3:28லூக் 1:16-17லூக் 1:76-79லூக் 3:4-6 அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள். லூக் 11:39-44லூக் 11:53மத் 23:13-15யோவா 3:1-2லூக் 16:14லூக் 7:30அப் 23:8அப் 26:5 அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். உபா 18:18உபா 18:15யோவா 1:20-22அப் 5:28மத் 21:23அப் 4:5-7தானி 9:24-26 யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார். அப் 1:5யோவா 1:10-11லூக் 3:16மத் 3:11மாற் 1:8அப் 11:16யோவா 8:191 யோவா 3:1 அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். லூக் 3:16யோவா 1:30மத் 3:11மாற் 1:7யோவா 1:15அப் 19:4 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது. யோவா 10:40யோவா 3:23நியாயாதி 7:24யோவா 3:26யோவா 12:5

தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு

மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. ஏசா 53:71 யோவா 2:21 யோவா 3:51 பேது 1:192 கொரி 5:211 பேது 2:24ஏசா 53:11எபி 1:3 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். யோவா 1:15யோவா 1:27லூக் 3:16 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான். மல்கி 3:1யோவா 1:33யோவா 1:7லூக் 1:17ஏசா 40:3-5லூக் 3:3-4மல்கி 4:2-5மத் 3:6 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன். லூக் 3:22மாற் 1:10மத் 3:16யோவா 1:7யோவா 5:32 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அப் 1:5மத் 3:11லூக் 3:16தீத் 3:5-6அப் 10:44-47அப் 19:2-6யோவா 3:34மாற் 1:7-8 அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான். சங் 2:7யோவா 1:49மத் 4:31 யோவா 5:20சங் 89:26-27யோவா 20:31வெளி 2:18ரோம 1:4

இயேசுவின் முதல் சீடன்

மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது, மல்கி 3:16யோவா 3:25-26 இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். யோவா 1:291 பேது 1:19-20ஏசா 65:1-2எபி 12:2ஏசா 45:22 அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள். ரோம 10:17யோவா 1:43வெளி 22:17சகரி 8:21யோவா 4:39-42எபே 4:29நீதி 15:23 இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம். யோவா 18:7யோவா 3:2யோவா 1:49யோவா 18:4நீதி 8:34சங் 27:4யோவா 12:21யோவா 3:26 அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி. லூக் 24:29மத் 11:28-30யோவா 6:37யோவா 1:46யோவா 4:40நீதி 8:17வெளி 3:20யோவா 14:22-23 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். மாற் 1:16-20மத் 4:18-22யோவா 1:40-42லூக் 5:2-11மத் 10:2அப் 1:13யோவா 6:8 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். யோவா 4:25யோவா 1:45அப் 13:32-33ஏசா 2:3-5சங் 89:20அப் 10:38தானி 9:25-26யோவா 1:36-37 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம். 1 கொரி 3:22யோவா 21:15-171 கொரி 15:51 கொரி 1:121 கொரி 9:5கலா 2:9மத் 10:2மத் 16:17-18

பிலிப்பு மற்றும் நாத்தான்வேலை இயேசு அழைத்தல்

மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார். ஏசா 65:1யோவா 14:8மத் 9:9யோவா 12:21மத் 4:18-211 யோவா 4:19யோவா 6:5பிலி 3:12 பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன். யோவா 12:21மத் 11:21லூக் 10:13லூக் 9:10மத் 10:3மாற் 3:18மாற் 6:45மாற் 8:22 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான். உபா 18:18-22மீகா 5:2லூக் 24:27மத் 2:23லூக் 24:44ஏசா 7:14ஏசா 9:6யோவா 5:45-46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். யோவா 7:52யோவா 7:41-42யோவா 4:291 தெச 5:21லூக் 12:57லூக் 4:28-29 இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார். வெளி 14:5சங் 32:2சங் 73:1யோவா 8:39ரோம 9:4ரோம 9:6யோவா 8:31ரோம 2:28-29 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார். ஏசா 65:24யோவா 2:25மத் 6:6சங் 139:1-2வெளி 2:18-191 கொரி 14:25ஆதி 32:24-301 கொரி 4:5 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். செப்ப 3:15மத் 27:42சகரி 9:9யோவா 12:13-15லூக் 19:38மத் 2:2யோவா 1:34மத் 21:5 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார். யோவா 20:29யோவா 11:40லூக் 1:45மத் 25:29லூக் 7:9மத் 13:12 பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆதி 28:12அப் 7:56லூக் 22:43மத் 16:27-28மாற் 1:10அப் 10:11லூக் 2:13மாற் 14:62