யெகோவாவுடைய மலை
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி. ஏசா 1:1ஏசா 13:1ஆமோ 1:1ஆப 1:1மீகா 1:1மீகா 6:9 வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள். மீகா 4:1-3ஏசா 56:7சகரி 8:3ஏசா 27:13வெளி 11:15எபி 1:22 பேது 3:32 தீமோ 3:1 திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். எரே 50:4-5லூக் 24:47சகரி 8:20-23ஏசா 51:4-5சங் 110:2சங் 25:8-9உபா 6:1யோவா 7:17 அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை. ஓசி 2:18மீகா 4:3ஏசா 11:6-9சகரி 9:10ஏசா 60:17-18சங் 46:9ஏசா 32:18ஏசா 9:7 யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். எபே 5:81 யோவா 1:7ஏசா 60:19-20லூக் 1:791 யோவா 1:5யோவா 12:35-36வெளி 21:23-241 தெச 5:5-6
யெகோவாவுடைய நாள்
யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் நாடுகளின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே. ரோம 11:202இராஜா 1:2உபா 18:10-141 நாளாக 10:131 இராஜா 11:1-22 நாளாக 15:22 நாளாக 24:202இராஜா 16:7-8 அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. உபா 17:16-17ஏசா 30:16ஏசா 31:1சங் 20:7மீகா 5:101 இராஜா 10:21-271 இராஜா 4:262 நாளாக 9:20-25 அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள். சங் 115:4-8வெளி 9:20ஏசா 37:19எரே 2:282 நாளாக 27:22 நாளாக 28:2-42 நாளாக 28:23-252 நாளாக 33:3-7 சிறியவனும், பெரியவனும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீராக. ஏசா 5:15ஏசா 27:11எரே 18:23யோசு 24:19மாற் 3:29நெகே 4:5ரோம 3:23கொலோ 2:23 யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். வெளி 6:15-16ஏசா 2:19-21ஓசி 10:8லூக் 23:30ஏசா 6:3-5நியாயாதி 6:1-2எரே 10:7யோபு 37:22-24 மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார். ஏசா 5:15-16சங் 18:27ஏசா 2:17ஏசா 12:4ஏசா 13:11ஏசா 24:21மல்கி 4:1மீகா 4:6 அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், மல்கி 4:1ஏசா 23:9லூக் 14:11நீதி 16:51 கொரி 5:51 தெச 5:2ஆமோ 5:18தானி 4:37 லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், ஏசா 14:8சகரி 11:1-2ஆமோ 2:5எசேக் 31:3-12ஏசா 10:33-34ஏசா 37:24 உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், ஏசா 30:25ஏசா 40:42 கொரி 10:5சங் 110:5-6சங் 68:16 உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும், ஏசா 25:12 தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், அனைத்துச் சித்திர விநோதங்களின் 1மேலும் வரும். 1 இராஜா 10:22ஏசா 23:11 இராஜா 22:48-49ஏசா 60:9எண் 33:52சங் 47:7வெளி 18:11வெளி 18:17-19 அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். ஏசா 2:11எரே 48:29-30ஏசா 13:11எசேக் 28:2-7 சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம். எசேக் 36:25எசேக் 37:23ஏசா 21:9ஏசா 27:9சகரி 13:2செப்ப 1:3ஓசி 14:8 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். ஏசா 2:10லூக் 23:30ஓசி 10:8ஏசா 2:21ஆகா 2:6எபி 12:26வெளி 11:19வெளி 6:12-15 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, ஏசா 30:22ஏசா 31:7ஓசி 14:8ஏசா 46:1ஏசா 46:6லேவி 11:19பிலி 3:7-8 மனிதன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி சிலைகளையும், தன் பொன் சிலைகளையும், மூஞ்சூறு எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவான். ஏசா 2:19யாத் 33:22ஏசா 2:10யோபு 30:6உன்னத 2:14 நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். எரே 17:5சங் 146:3யாக் 4:14சங் 144:3-4சங் 8:4ஆதி 2:7ஏசா 40:15சங் 62:9