உலகத்தின் ஒளி
அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். லூக் 13:2யோவா 9:34அப் 28:4யாத் 20:5மத் 16:14மத் 23:7 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான். யோவா 11:4யோவா 11:40பிரச 9:1-2யோபு 2:3-6யோபு 42:7மத் 11:5அப் 4:21அப் 28:4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது. யோவா 12:35எபே 5:16யோவா 4:34பிரச 9:10யோவா 11:9-10கலா 6:10யோவா 17:4கொலோ 4:5
இயேசு பிறவிக்குருடனைச் சுகப்படுத்துதல்
நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார். யோவா 8:12யோவா 12:46அப் 13:47யோவா 1:4-9அப் 26:18எபே 5:14ஏசா 42:6-7வெளி 21:23 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: மாற் 7:33மாற் 8:23வெளி 3:18 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான். ஏசா 35:5யோவா 11:37யோவா 9:11அப் 26:18ஏசா 8:6சங் 146:8யாத் 4:11ஏசா 42:7 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள். 1 சாமு 2:81 சாமு 21:11அப் 3:2-11லூக் 16:20-22லூக் 18:35மாற் 10:46ரூத் 1:19 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். பிரச 11:5மாற் 4:271 கொரி 15:35யோவா 3:9யோவா 9:15யோவா 9:21யோவா 9:26 அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான். யோவா 9:6-7யோவா 9:27எரே 36:17 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். யாத் 2:18-20யோவா 5:11-13யோவா 7:11
பரிசேயர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றுதல்
குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள். யோவா 12:42யோவா 11:46-47யோவா 11:57யோவா 12:19யோவா 8:3-8 இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. யோவா 5:9லூக் 13:10-17மத் 12:1-14யோவா 5:16யோவா 7:21-23லூக் 14:1லூக் 6:1-11மாற் 2:23 ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான். யோவா 9:10-11யோவா 9:26-27 அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது. யோவா 10:19யோவா 7:43யோவா 3:2யோவா 7:12மத் 12:2யோவா 14:11யோவா 15:24யோவா 5:36 மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அப் 3:22-26யோவா 4:19யோவா 6:14அப் 10:38அப் 2:22லூக் 24:19மத் 21:11 அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து, எபி 3:15-19ஆதி 19:14எபி 4:11ஏசா 26:11ஏசா 53:1யோவா 1:19யோவா 12:37-40யோவா 5:44 அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். அப் 4:14யோவா 9:8-9அப் 3:10 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். யோவா 16:2யோவா 7:13லூக் 6:22யோவா 12:42-43யோவா 9:34அப் 4:18அப் 5:13அப் 5:40 அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள். யோவா 9:21 ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். யோவா 9:16யோசு 7:19யோவா 8:492 கொரி 5:21யோவா 19:6சங் 50:14-151 சாமு 6:5-9ஏசா 66:5 அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். 1 யோவா 5:10யோவா 9:30யோவா 5:11 அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான். லூக் 22:67யோவா 9:10-15 அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர். 1 கொரி 4:121 கொரி 6:10ரோம 2:171 பேது 2:23அப் 6:11-14ஏசா 51:7யோவா 5:45-47யோவா 7:19 மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள். யோவா 8:141 இராஜா 22:272இராஜா 9:11அப் 22:22அப் 26:22அப் 7:35உபா 34:10எபி 3:2-5 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம். சங் 119:18யோவா 12:37ஏசா 29:18ஏசா 29:14யோவா 3:102 கொரி 4:6ஏசா 35:5லூக் 7:22 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். நீதி 15:29ஏசா 1:15நீதி 28:9மீகா 3:4நீதி 1:28-29சங் 145:19சகரி 7:13சங் 34:15-16 பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. ஏசா 64:4யோபு 20:4லூக் 1:70வெளி 16:18 அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். யோவா 9:16யோவா 3:2அப் 5:38-39 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். யோவா 9:2யோவா 9:22ஏசா 66:5ஆதி 19:9யோபு 25:4லூக் 18:17சங் 51:51 கொரி 5:13
ஆவிக்குரிய பார்வையின்மை
அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார். யோவா 20:311 யோவா 5:13ரோம 10:201 யோவா 4:15யோவா 10:361 யோவா 5:101 யோவா 5:201 யோவா 5:5 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான். ரோம 10:14யோவா 1:38மத் 11:3நீதி 30:3-4உன்னத 5:9 இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். யோவா 4:26யோவா 14:21-23யோவா 7:17சங் 25:14சங் 25:8-9மத் 11:25மத் 13:11-12அப் 10:31-33 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். மத் 14:33மத் 28:9யோவா 20:28லூக் 24:52மத் 28:17சங் 2:12சங் 45:11வெளி 5:9-14 அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். யோவா 3:19அப் 26:18யோவா 12:46யோவா 8:121 யோவா 2:11லூக் 4:18யோவா 12:40-41லூக் 1:79 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். வெளி 3:17மத் 15:12-14யோவா 7:47-52யோவா 9:34லூக் 11:39-54மத் 23:16-28ரோம 2:19-22 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார். ஏசா 5:21யோவா 15:22-24லூக் 18:141 யோவா 1:8-10நீதி 26:12எபி 10:26எரே 2:35லூக் 12:47