மணவாளன்
என் சகோதரியே! என் மணவாளியே! உன்னத 6:2உன்னத 4:16வெளி 22:17உன்னத 4:9-14ஏசா 51:3ஏசா 55:1-2ஏசா 58:11ஏசா 61:11
நான் என் தோட்டத்திற்கு வந்தேன்,
என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;
என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;
என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன்.
சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே!
குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.
சூலமித்தியாளின் இரவு
மணவாளி
நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; வெளி 3:20உன்னத 2:14உன்னத 6:9சகரி 4:1சங் 119:1ஆதி 29:20ஆதி 31:40-41ஏசா 50:6
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:
என் சகோதரியே! என் பிரியமே!
என் புறாவே! என் உத்தமியே!
கதவைத் திற;
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
என் உடையைக் கழற்றிப்போட்டேன்; லூக் 11:7மத் 25:5மத் 26:38-43நீதி 13:4நீதி 22:13நீதி 3:28ரோம 7:22-23
நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,
என் பாதங்களைக் கழுவினேன்,
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், 1 இராஜா 3:262 கொரி 8:1-22 கொரி 8:16அப் 16:14ஆதி 43:30பிலி 2:13சங் 110:3உன்னத 1:4
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; உன்னத 5:13எபே 3:172 கொரி 7:72 கொரி 7:9-11லூக் 12:36வெளி 3:20உன்னத 3:6உன்னத 4:13-14
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,
என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; உன்னத 5:2ஓசி 5:15வெளி 3:191 சாமு 28:62 சாமு 16:10ஆதி 42:28ஓசி 5:6ஏசா 12:1
என் நேசரோ இல்லை, போய்விட்டார்;
அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;
அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, உன்னத 3:31 கொரி 4:10-131 பேது 4:14-162 கொரி 11:13அப் 20:29-30அப் 26:9-10அப் 5:40-41எபி 11:36-37
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், உன்னத 2:5உன்னத 2:7சங் 42:1-3உன்னத 3:5கலா 6:1-2சங் 119:81-83சங் 63:1-3சங் 77:1-3
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
மணவாளியின் தோழிகள்
பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! உன்னத 1:8உன்னத 6:1உன்னத 6:9-10ஏசா 53:2மத் 16:13-17சங் 45:13சங் 87:32 கொரி 4:3-6
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
நீ இப்படி எங்களை ஆணையிட,
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
மணவாளி
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; சங் 45:2பிலி 2:9-11சங் 45:17உன்னத 2:11 சாமு 16:12கொலோ 1:18உபா 32:31எபி 2:10
பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,
யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; தானி 7:9எபே 1:21-22வெளி 1:14உன்னத 5:2உன்னத 7:5தானி 2:37-38
அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும்,
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், உன்னத 1:15உன்னத 4:1எபி 4:13
பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், உன்னத 1:10உன்னத 2:1உன்னத 6:2ஏசா 50:6லூக் 4:22சங் 27:4சங் 4:6-7சங் 45:2
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; யாத் 24:10ஏசா 54:11யாத் 15:6யாத் 28:20யாத் 39:13எசேக் 1:16எசேக் 1:26-28ஏசா 52:13
அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; 1 இராஜா 4:33வெளி 1:15-161 தீமோ 3:16அப் 2:28யாத் 26:19ஓசி 14:7நியாயாதி 13:6மத் 17:2
அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்
கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; சங் 45:2உன்னத 7:91 பேது 2:6-7கலா 2:20ஓசி 3:1ஏசா 9:6-7யாக் 2:23யாக் 4:4
அவர் முற்றிலும் அழகுள்ளவர்.
இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.