சங்கீதங்கள் 42

Psalms 42
சங்கீதம் 42

கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, சங் 63:1-2சங் 143:6-7சங் 119:131ஏசா 26:8-9சங் 84:1-2சங் 48:1சங் 46:1சங் 85:1

தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; சங் 63:1சங் 84:10யோவா 7:37சங் 27:4வெளி 22:1சங் 36:8-9சங் 84:2சங் 84:4

நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், சங் 79:10சங் 115:2யோவே 2:17சங் 42:10சங் 80:5சங் 102:9மீகா 7:10சங் 79:12

இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.

முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, ஏசா 30:291 சாமு 1:15-16சங் 122:1சங் 62:8யோபு 29:2நாகூ 1:15சங் 100:4சங் 55:14

கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே;

இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? சங் 37:7எபி 10:36-37சங் 61:2மத் 1:23சங் 27:13-14புலம் 3:24-26சங் 56:3சங் 43:5

ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;

அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; சங் 61:2யோனா 2:7உபா 3:8-9சங் 43:42 சாமு 17:22உபா 4:47-48மத் 27:46சங் 22:1

ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; யோனா 2:3சங் 69:14-15சங் 88:7புலம் 3:53-55எசேக் 7:26எரே 4:20யோபு 1:14-19சங் 88:15-17

உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; சங் 16:7சங் 149:5சங் 63:6யோபு 35:10உபா 28:8அப் 16:25கொலோ 3:3சங் 133:3

இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது;

என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.

நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: சங் 38:6சங் 18:2சங் 43:2ஏசா 40:27புலம் 5:1-16சங் 28:1சங் 44:23-24சங் 62:2

ஏன் என்னை மறந்தீர்?

எதிரியால் ஒடுக்கப்பட்டு,

நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

உன் தேவன் எங்கே என்று சங் 42:3யோவே 2:17லூக் 2:35நீதி 12:18மீகா 7:10

என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி,

என்னை நிந்திப்பது

என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? சங் 42:5எரே 30:17எரே 33:6சங் 43:5மத் 9:12

ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்?

தேவனை நோக்கிக் காத்திரு;

என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.