புலம்பல்கள் 5

Lamentations 5
அத்தியாயம் 5

மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்

யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; சங் 44:13-16சங் 89:50-51ஆப 3:2எரே 15:15புலம் 2:15புலம் 3:19புலம் 3:61நெகே 4:4

எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.

எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது. ஏசா 1:7செப்ப 1:13உபா 28:30-68சங் 79:1-2எசேக் 7:21எசேக் 7:24ஏசா 5:17ஏசா 63:18

திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; யாத் 22:24எரே 18:21ஓசி 14:3எரே 15:8

எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்; ஏசா 3:1உபா 28:48எசேக் 4:9-17

எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது.

பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; புலம் 1:14நெகே 9:36-37உபா 28:48எரே 27:11-12எரே 27:8எரே 28:14அப் 15:10உபா 28:65-66

நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.

உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம். ஓசி 12:1ஓசி 9:3ஆதி 24:2ஓசி 5:13ஓசி 7:11எரே 2:18எரே 2:362இராஜா 10:15

எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; எரே 16:12எரே 31:29எசேக் 18:2எரே 14:20யாத் 20:5ஆதி 42:36எரே 31:15மத் 23:32-36

நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; நெகே 5:15நீதி 30:22சகரி 11:6சங் 7:2உபா 28:43ஆதி 9:25ஓசி 2:10ஏசா 43:13

எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.

வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், எசேக் 4:16-17எசேக் 12:18-19எரே 40:9-122 சாமு 23:17நியாயாதி 6:11எரே 41:1-10எரே 41:18எரே 42:14

எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம்.

பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது. புலம் 4:8யோபு 30:30சங் 119:83புலம் 3:4

சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். ஏசா 13:16சகரி 14:2உபா 28:30

தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; புலம் 4:16ஏசா 47:6எரே 39:6-7எரே 52:10-11எரே 52:25-27புலம் 2:10புலம் 2:20

முதியோர்கள் மதிக்கப்படவில்லை.

வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; நியாயாதி 16:21மத் 23:4யாத் 1:11யாத் 11:5யாத் 2:11யாத் 23:5ஏசா 47:2ஏசா 58:6

இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.

முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், எரே 7:34எசேக் 26:13ஏசா 24:7-11வெளி 18:22உபா 16:18ஏசா 3:2-3எரே 16:9எரே 25:10

வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.

எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; ஆமோ 8:10எரே 25:10ஆமோ 6:4-7யாக் 4:9-10சங் 30:11

எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.

எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. சங் 89:39ஏசா 3:9-11எரே 13:18யோபு 19:9புலம் 1:1புலம் 4:13எசேக் 21:26எசேக் 22:12-16

அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; ஏசா 1:5சங் 6:7யோபு 17:7புலம் 2:11ஏசா 38:14உபா 28:65எசேக் 21:15எசேக் 21:7

அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.

பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. மீகா 3:12எரே 9:111 இராஜா 9:7-8ஏசா 32:13-14எரே 17:3எரே 26:9எரே 52:13புலம் 2:8-9

யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; சங் 102:12எபி 1:8-12சங் 45:6சங் 102:25-27சங் 145:131 தீமோ 1:17சங் 9:7வெளி 1:8

உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? சங் 13:1சங் 44:24எரே 14:19-21ஏசா 64:9-12சங் 74:1சங் 77:7-10சங் 79:5சங் 85:5

யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; சங் 80:3சங் 80:7சங் 85:4எரே 31:18சங் 80:19சகரி 8:3-6எசேக் 36:37எசேக் 11:19-20

ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? ஓசி 1:6சங் 60:1-2எசேக் 37:11ஏசா 64:9எரே 15:1-5சங் 44:9

எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!