ஏழு ஐயோ!
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: லூக் 12:1லூக் 20:45-46மத் 15:10-20லூக் 12:57மாற் 12:38-39மாற் 7:14 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; லூக் 20:46மாற் 12:38மல்கி 2:7எஸ்றா 7:25எஸ்றா 7:6நெகே 8:4-8 ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 2 தீமோ 3:5ரோம 2:19-24தீத் 1:16அப் 5:29ரோம 13:12 நாளாக 30:12உபா 17:9-12மத் 21:30 சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். லூக் 11:46அப் 15:10கலா 6:13மத் 11:28-30மத் 23:23வெளி 2:24அப் 15:28 தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, யோவா 12:43மத் 6:1-16உபா 6:8யோவா 5:44லூக் 16:15பிலி 2:3எண் 15:38-39உபா 22:12 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், 3 யோவா 1:9லூக் 11:43-54மாற் 12:38-39யாக் 2:1-4லூக் 14:7-11நீதி 25:6-7லூக் 20:46-47மத் 20:21 சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். யோவா 1:38யோவா 1:49யோவா 20:16யோவா 3:2யோவா 3:26யோவா 6:25மத் 23:8மாற் 10:51 நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். யாக் 3:1லூக் 22:321 கொரி 1:12-131 பேது 5:3வெளி 1:9மத் 17:5மத் 23:10கொலோ 1:1-2 பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். 1 யோவா 3:1எபி 12:9மல்கி 1:6யோபு 32:21-22ரோம 8:14-17மத் 6:8-9மத் 7:111 கொரி 4:15 நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார். உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். 1 கொரி 9:19கலா 5:13யோவா 13:14-15மாற் 10:43-442 கொரி 4:5லூக் 22:26-27பிலி 2:5-8மத் 20:26-27 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 1 பேது 5:5யாக் 4:6லூக் 14:11நீதி 29:23லூக் 18:14மத் 18:4நீதி 15:33மத் 5:3 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. லூக் 11:52மத் 23:29மத் 23:23மத் 23:27சகரி 11:172 தீமோ 4:15அப் 8:12 தீமோ 3:8 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். அப் 13:10அப் 13:43எபே 2:3அப் 14:2கலா 4:17கலா 6:12யோவா 8:44அப் 17:5-6 குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மத் 15:14யாக் 5:12மத் 23:17மத் 23:24மத் 5:33-35ஏசா 56:10-11யோவா 9:39-41மத் 15:5-6 மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மத் 23:19எண் 16:38-39யாத் 30:26-29சங் 94:8 மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? யாத் 29:37யாத் 30:29 ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான். தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். 1 இராஜா 8:13சங் 26:82 நாளாக 6:21 இராஜா 8:272 நாளாக 7:2கொலோ 2:9எபே 2:22சங் 132:13-14 பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். மத் 5:34ஏசா 66:1சங் 11:4அப் 7:49வெளி 4:2-3 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே. லூக் 11:42மீகா 6:8ஓசி 6:6மத் 9:13மத் 5:19-201 சாமு 15:22நீதி 21:3கலா 5:22-23 குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். மத் 19:24மத் 27:6-8லூக் 6:7-10மத் 15:2-6யோவா 18:28மத் 23:16யோவா 18:40மத் 7:4 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. லூக் 11:39-40மத் 15:19-20ஏசா 28:7-8மாற் 7:4-13 குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 2 கொரி 7:1எபி 10:22யாக் 4:8எசேக் 18:31ஏசா 55:7லூக் 6:45மத் 12:33எரே 13:27 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். லூக் 11:44அப் 23:3எண் 19:16ஏசா 58:1-2 அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். லூக் 16:15மத் 23:5சங் 51:61 சாமு 16:7எபி 4:12-13மத் 12:34-35மத் 15:19-20மாற் 7:21-23 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து: லூக் 11:47-48அப் 2:29 எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். எரே 2:30மத் 21:35-36மத் 23:34-352 நாளாக 36:15 ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். அப் 7:51-521 தெச 2:15-16யோபு 15:5-6யோசு 24:22லூக் 19:22சங் 64:8 நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். ஆதி 15:16எண் 32:141 தெச 2:16சகரி 5:6-11 சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? மத் 3:7மத் 12:34லூக் 3:7மத் 5:22ஆதி 3:15யோவா 8:44மத் 21:34-35சங் 58:3-5 ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; மத் 10:16-17மத் 13:52கொலோ 1:28அப் 13:1லூக் 11:49-51மத் 10:23மத் 23:34-361 கொரி 12:3-11 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 2 நாளாக 24:20-22எபி 11:4சகரி 1:1ஆதி 4:8வெளி 18:24எரே 26:152இராஜா 21:162இராஜா 24:4 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 10:23மத் 24:34லூக் 21:32-33மாற் 13:30-31எசேக் 12:21-28
எருசலேமுக்காகப் புலம்புதல்
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது. லூக் 13:34-35சங் 91:4ரூத் 2:12உபா 32:11-12சங் 17:8நெகே 9:26நீதி 1:24-31எரே 6:16-17 இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். எரே 22:5லூக் 13:35லூக் 21:241 இராஜா 9:7அப் 6:13-14லூக் 19:43-44லூக் 21:20லூக் 21:6 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். சங் 118:26மத் 21:9ரோம 11:25ஓசி 3:4ஏசா 40:9-11யோவா 8:21யோவா 8:24லூக் 10:22-23