உன்னதப்பாட்டு 6

Song 6
அத்தியாயம் 6

மணவாளியின் தோழிகள்

உன் நேசர் எங்கே போனார்? உன்னத 1:8உன்னத 5:9எரே 14:8ரூத் 2:12ஏசா 2:5ரூத் 1:16-17உன்னத 1:4உன்னத 2:2

பெண்களில் அழகுமிகுந்தவளே!

உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்?

உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.

மணவாளி தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், உன்னத 5:131 தெச 4:13-14எசேக் 34:23ஏசா 40:11ஏசா 57:1ஏசா 58:11ஏசா 61:11யோவா 14:3

என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.

நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; உன்னத 2:16உன்னத 7:10எபி 8:10வெளி 21:2-4

அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.

சூலமித்தியாளின் அழகு

மணவாளன்

என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், உன்னத 6:10சங் 48:21 இராஜா 14:17புலம் 2:15சங் 50:2வெளி 21:2உன்னத 2:14உன்னத 4:7

எருசலேமைப்போல் வடிவமும்,

கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.

உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, யாத் 32:10ஆதி 32:26-28எரே 15:1மத் 15:27-28உன்னத 4:1-3

அவைகள் என்னை வென்றது;

உன் கருமையான கூந்தல்

கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், உன்னத 4:2மத் 21:19மத் 25:30

ஒன்றாகிலும் மலடாக இல்லாமல்

இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.

உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. உன்னத 4:3

ராணிகள் அறுபதுபேரும், சங் 45:141 இராஜா 11:31 இராஜா 11:12 நாளாக 11:21சங் 45:9வெளி 7:9

மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு;

கன்னியர்களுக்குத் தொகையில்லை.

என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; உன்னத 2:14ஆதி 30:13சங் 45:9நீதி 31:28-29வெளி 21:9-10உன்னத 5:2கலா 4:26சங் 126:2

அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை;

அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்;

இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்;

ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், உன்னத 6:4வெளி 12:1யோபு 31:262 சாமு 23:4எபே 5:27ஏசா 58:8மத் 17:2வெளி 10:1

கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக,

சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?

பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், உன்னத 7:12அப் 15:36ஆதி 2:9ஏசா 5:2-4மாற் 11:13சங் 92:12-15உன்னத 4:12-15உன்னத 5:1

திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும்,

வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

நினைக்காததற்குமுன்னே ஓசி 11:8-9லூக் 15:20எரே 31:18-20

என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது.

மணவாளியின் தோழிகள்

திரும்பிவா, திரும்பிவா, ஆதி 32:22 சாமு 17:242 தெச 1:10எபே 2:14-17எபே 6:10-19கலா 5:17ஆதி 49:10எபி 7:2

சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு,

திரும்பிவா, திரும்பிவா.

மணவாளி

சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?

அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.