தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 4

Song 4
அத்தியாயம் 4

மணவாளன்

நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன்னத 1:15உன்னத 6:5உன்னத 6:7மீகா 7:14உன்னத 2:14உன்னத 4:9-10உன்னத 7:52 கொரி 3:18

உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது;

உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.

உன்னுடைய பற்கள், உன்னத 6:61 தெச 2:132 பேது 1:5-8கொலோ 1:4-6உபா 7:13-14யாத் 23:26எரே 15:16யோவா 15:7

ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,

ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான

ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.

உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன்னத 6:7யோசு 2:18உன்னத 5:162 கொரி 5:18-21கொலோ 3:16-17கொலோ 4:6எபே 4:29எசேக் 16:63

உன் வாய் இன்பமுமாக இருக்கிறது;

உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.

உன்னுடைய கழுத்து, உன்னத 7:41 பேது 1:5எபே 4:15-16எசேக் 27:10-11நெகே 3:192 நாளாக 12:9-112 சாமு 22:51கொலோ 2:19

பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட

தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.

உன் இரண்டு மார்பகங்களும் உன்னத 2:16உன்னத 6:3உன்னத 7:31 பேது 2:2நீதி 5:19உன்னத 8:10ஏசா 66:10-12உன்னத 1:13

லீலிமலர்களுக்கு இடையில் மேயும்

வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், உன்னத 2:17உன்னத 4:14லூக் 1:781 யோவா 2:82 பேது 1:19உபா 12:5-6யாத் 20:24யாத் 30:23-26

நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.

என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னத 1:15உன்னத 4:1கொலோ 1:22எபே 5:25-27யூதா 1:24சங் 45:112 பேது 3:14சங் 45:13

உன்னில் குறையொன்றும் இல்லை.

லீபனோனிலிருந்து என்னோடே வா, உபா 3:9உன்னத 2:131 நாளாக 5:23சங் 45:10ஏசா 62:51 இராஜா 4:33கொலோ 3:1-2உபா 3:25

என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா.

அமனாவின் உச்சியிலிருந்தும்,

சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும்,

சிங்கங்களின் குகைகளிலிருந்தும்,

சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே 1 இறங்கி வா.

என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; நீதி 5:19-20உன்னத 4:12உன்னத 5:1-22 கொரி 11:2ஓசி 2:19-20உன்னத 7:10உன்னத 7:5-6எசேக் 16:8

என் சகோதரியே! என் மணவாளியே!

உன் கண்களில் ஒன்றிலும்

உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும்

என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.

உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; உன்னத 1:2-4கலா 5:22உன்னத 7:6பிலி 4:18உன்னத 1:12உன்னத 3:6உன்னத 5:52 கொரி 1:21-22

என் சகோதரியே! என் மணவாளியே!

திராட்சைரசத்தைவிட

உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது!

சகல கந்தவர்க்கங்களைவிட

உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன்னத 5:1ஆதி 27:27ஓசி 14:6-7உன்னத 5:13உன்னத 7:9எபி 13:15ஓசி 14:2ஏசா 7:15

உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது,

உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.

என் சகோதரியே! என் மணவாளியே! நீதி 5:15-18வெளி 21:271 கொரி 6:13ஏசா 61:10-111 கொரி 6:19-201 கொரி 7:34வெளி 7:32 கொரி 1:22

நீ அடைக்கப்பட்ட தோட்டமும்,

மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்,

பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.

உன் தோட்டம் மாதுளம்செடிகளும், உன்னத 1:14பிரச 2:5உன்னத 6:11உன்னத 1:12ஏசா 60:21ஏசா 61:11யோவா 12:3யோவா 15:1-3

அருமையான பழமரங்களும்,

மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,

நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், யாத் 30:23உன்னத 4:6உன்னத 3:6உன்னத 6:2எசேக் 27:19நீதி 7:17உன்னத 1:121 இராஜா 10:10

சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும்,

சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.

தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், யோவா 4:10யோவா 4:14யோவா 7:38எரே 2:13பிரச 2:6எரே 17:13எரே 18:13-14சங் 36:8-9

லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

மணவாளி

வாடைக்காற்றே! எழும்பு; உன்னத 6:2உன்னத 5:11 பேது 2:5அப் 2:1-2எசேக் 37:9உன்னத 4:13-14உன்னத 7:12-131 தெச 2:12-13

தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு;

என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து,

தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.