யோனா 3

Jonah 3
அத்தியாயம் 3

யோனா நினிவேக்குச் செல்லுதல்

இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: யோனா 1:1யோவா 21:15-17 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார். எசேக் 2:7எரே 1:17யோனா 1:2யோனா 3:3எசேக் 3:17எரே 15:19-21யோவா 5:14மத் 3:8 யோனா எழுந்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்று நாட்கள் நடை பிரயாண தூரமும் விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது. ஆதி 22:3மத் 21:28-29சங் 80:10ஆதி 30:8சங் 36:62 தீமோ 4:11 யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான். உபா 18:22எரே 18:7-102இராஜா 20:12இராஜா 20:6யோனா 3:10 அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள். லூக் 11:32தானி 9:3யோவே 2:12-17மத் 12:412 நாளாக 20:3யோவே 1:14யாத் 9:18-21அப் 27:25 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். எஸ்த 4:1-4யாக் 4:6-10தானி 9:3யோபு 2:8எசேக் 27:30-31யாக் 1:9-10எரே 6:26லூக் 10:13 மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும், 2 நாளாக 20:3யோவே 1:18யோவே 2:15-16யோனா 3:5எஸ்றா 8:21ரோம 8:20-22 மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும். ஏசா 55:6-7ஏசா 59:6யோனா 1:6அப் 3:19எசேக் 18:21-24ஏசா 1:16-19யோனா 1:14அப் 26:20 யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனமிரங்கி, தம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று சொல்லச்சொன்னான். 2 சாமு 12:22யோவே 2:13-14யோனா 1:6லூக் 15:18-20சங் 106:45ஆமோ 5:15 அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய செயல்களைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார். எரே 18:81 இராஜா 21:27-29யாத் 32:14ஆமோ 7:6லூக் 11:32லூக் 15:20ஆமோ 7:3எரே 31:18-20