இயேசு சீடர்களை ஊழியத்திற்கு அழைத்தல்
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள். மாற் 1:16-20மத் 4:18-22மாற் 3:9மத் 14:34மாற் 6:53உபா 3:17யோசு 12:3மத் 11:12 அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். மாற் 1:19மத் 4:21 அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார். மத் 4:18மத் 13:1-2யோவா 1:41-42மாற் 4:1-2யோவா 8:2 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார். யோவா 21:6மத் 17:27 அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான். யோவா 2:5யோவா 15:14லூக் 6:46-482இராஜா 5:10-14எசேக் 37:4-7சங் 127:1-2யோவா 21:3எசேக் 37:11-12 அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். 1 கொரி 15:58யோவா 21:6-112இராஜா 4:3-7பிரச 11:6கலா 6:9அப் 2:41அப் 4:4 அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். கலா 6:2பிலி 4:3அப் 11:25யாத் 23:5ரோம 16:2-4நீதி 18:24 சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். ஏசா 6:5யோபு 42:5-6வெளி 1:17நியாயாதி 13:22யோபு 40:4யாத் 20:19மத் 2:11மத் 8:8 அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான். லூக் 4:32மாற் 9:6சங் 8:8சங் 8:6லூக் 4:36 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார். மத் 13:47மத் 4:19எசேக் 47:9-10மாற் 1:17லூக் 5:72 கொரி 8:23அப் 2:4லூக் 6:14 அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். மத் 4:20லூக் 18:28-30லூக் 5:28மத் 19:27மாற் 10:21மாற் 1:18-25பிலி 3:7-8மத் 10:37
குஷ்டரோகியான மனிதன்
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். சங் 50:15மத் 8:2-4லூக் 17:16லூக் 17:12-13மத் 9:28மாற் 1:40-45ஆதி 18:14எபி 7:25 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது. மத் 9:29-30யோவா 4:50-532இராஜா 5:14எசேக் 36:25-27எசேக் 36:29ஓசி 14:42இராஜா 5:10ஆதி 1:9 அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். லேவி 14:2-32லேவி 13:2லூக் 17:14மத் 8:4மாற் 1:44மத் 12:16மத் 9:30லூக் 9:5 அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள். மத் 15:30-31லூக் 12:1மத் 4:23-25மத் 9:26மாற் 1:45மாற் 1:28மாற் 3:7லூக் 14:25 அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். லூக் 6:12மாற் 1:35-36மத் 14:23மாற் 6:46யோவா 6:15
பக்கவாதக்காரனை சுகப்படுத்துதல்
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது. லூக் 6:19லூக் 8:46அப் 19:11மத் 11:5அப் 4:30மத் 15:1மாற் 5:30மாற் 7:1 அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள். மத் 9:2-8மாற் 2:3-12அப் 9:33யோவா 5:5-6 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள். மாற் 2:4மத் 10:272 சாமு 11:2உபா 22:8மத் 24:17எரே 19:13 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப் 14:9மத் 9:2கொலோ 3:13யாக் 2:18யோவா 2:25லூக் 7:48மாற் 2:52 கொரி 2:10 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள். ஏசா 43:25மாற் 2:6-7அப் 6:11-13யோவா 10:33லூக் 7:49தானி 9:9மத் 26:65சங் 32:5 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன? மத் 9:4அப் 5:3லூக் 24:38மத் 12:25மாற் 8:17ஏசா 66:18சங் 139:2வெளி 2:23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? மத் 9:5மாற் 2:9 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஏசா 53:11அப் 14:10அப் 9:40வெளி 1:13அப் 3:6-8அப் 5:31அப் 9:34லூக் 8:54 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான். யோவா 9:24சங் 103:1-3சங் 107:20-22லூக் 13:13லூக் 17:15-18லூக் 18:43லூக் 5:13சங் 33:9 அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். மத் 9:8அப் 4:21எரே 33:9மத் 12:23மாற் 2:12அப் 5:11-13ஓசி 3:5லூக் 7:16
மத்தேயுவின் ஊழிய அழைப்பு
இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார். மாற் 2:13-22மத் 9:9-17மாற் 3:18யோவா 1:43மத் 10:3லூக் 18:22மத் 4:19-21யோவா 12:26 அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். லூக் 5:111 இராஜா 19:19-21மத் 19:22-27லூக் 9:59-62 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள். மாற் 2:151 கொரி 10:27லூக் 15:1மத் 9:101 கொரி 5:9-11யோவா 12:2 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள். அப் 23:9லூக் 15:1-2லூக் 19:7லூக் 5:17லூக் 5:21லூக் 7:29-30மத் 21:28-32மாற் 7:3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை. மாற் 2:17மத் 9:12-13எரே 8:22 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். லூக் 19:10லூக் 15:101 தீமோ 1:15-16லூக் 15:7அப் 3:19லூக் 24:47அப் 17:30ஏசா 55:6-7
உபவாசத்தைப்பற்றிய கேள்வி
பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள். மத் 9:14-17மாற் 2:18-22யோவா 3:25லூக் 18:12லூக் 20:47ரோம 10:2-3அப் 9:11ஏசா 1:15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா? யோவா 3:29மத் 25:1-10வெளி 19:7-92 கொரி 11:2எபே 5:25-27ஏசா 54:5ஏசா 62:5சங் 45:10-16 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். அப் 14:23அப் 3:21யோவா 16:4-7லூக் 17:221 கொரி 7:52 கொரி 11:27அப் 1:9அப் 13:2-3 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது. மத் 9:16-17மாற் 2:21-222 கொரி 6:16உபா 22:11லேவி 19:19 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும். சங் 119:83யோசு 9:13யோசு 9:4 புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும். எபி 8:8-132 கொரி 5:17எசேக் 36:26கலா 4:9-11கலா 5:1-6வெளி 21:51 தீமோ 4:8எபி 13:9-10 அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார். எபி 11:39எரே 6:16மாற் 7:7-13ரோம 4:11-12எபி 11:1-2