அடையாளம் கேட்ட பரிசேயர்களும் சதுசேயர்களும்
பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். லூக் 11:16அப் 4:1மத் 16:61 கொரி 1:22யோவா 8:6மாற் 8:11-21அப் 23:6-8அப் 5:17 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். லூக் 12:54-56 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? லூக் 12:561 நாளாக 12:32லூக் 13:15மத் 11:5லூக் 11:44மத் 15:7மத் 22:18மத் 23:13 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார். லூக் 11:29-30மத் 12:39-40யோனா 1:17மாற் 8:12மாற் 8:38மத் 15:14ஆதி 6:3மாற் 5:17-18
பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவு
அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள். மாற் 8:13-14மத் 15:39 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார். லூக் 12:1கலா 5:9மத் 16:121 கொரி 5:6-8லேவி 2:11மாற் 8:152 தீமோ 2:16-17யாத் 12:15-19 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். மாற் 8:16-18அப் 10:14லூக் 9:46மத் 15:16-18மாற் 9:10 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? மத் 6:30மத் 14:31மத் 8:26மாற் 16:14எபி 4:13யோவா 2:24-25யோவா 16:30வெளி 2:23 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; மத் 14:17-21யோவா 6:9-13லூக் 9:13-17மத் 15:16-17மாற் 6:38-44லூக் 24:25-27மாற் 7:18வெளி 3:19 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? மத் 15:34-38மாற் 8:17-21மாற் 8:5-9 பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். மத் 16:6மாற் 4:40மாற் 8:21யோவா 8:43லூக் 12:56 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள். மத் 5:20அப் 23:8மத் 15:4-9மத் 23:13-28
கிறிஸ்துவைக்குறித்து பேதுருவின் அறிக்கை
பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். லூக் 9:18-20மாற் 8:27-29தானி 7:13யோவா 5:27மத் 9:6எபி 2:14-18மத் 12:8மத் 13:37 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். மாற் 6:15மத் 14:2மல்கி 4:5யோவா 9:17லூக் 9:18-19யோவா 7:12யோவா 7:40-41லூக் 9:8 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். லூக் 9:20மாற் 8:29மத் 13:11 சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். யோவா 11:27மத் 14:331 யோவா 4:15மத் 27:541 தீமோ 4:10அப் 9:201 தெச 1:9மத் 26:63 இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். யோவா 6:45எபே 1:17-18மத் 11:25-27கலா 1:161 யோவா 5:201 கொரி 15:50மத் 13:16-17கலா 1:11-12 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. எபே 2:19-221 கொரி 3:9-11ஏசா 28:16கொலோ 1:18சங் 125:1-2யோவா 1:42எபி 12:28அப் 2:47 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். மத் 18:18ஏசா 22:22வெளி 1:18யோவா 20:23வெளி 3:72 கொரி 2:10வெளி 11:61 கொரி 5:4-5 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். மாற் 8:30லூக் 9:21யோவா 1:41மத் 17:9லூக் 9:36மத் 8:41 யோவா 2:221 யோவா 5:1
இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல்
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். லூக் 24:6-7மத் 17:22-23மத் 20:17-191 கொரி 15:3-4மத் 17:12மத் 27:63மத் 20:28அப் 2:23-32 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். மாற் 8:32அப் 21:11-13யோவா 13:6-8மத் 16:16-17மத் 26:51-531 இராஜா 22:13 அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். ரோம 8:5-8கொலோ 3:2பிலி 3:19மாற் 8:331 கொரி 2:14-15மத் 4:10யோவா 6:702 கொரி 11:14-15 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும். மத் 10:38லூக் 14:271 பேது 4:1-2லூக் 9:23-27மாற் 10:21மாற் 8:342 தீமோ 3:12எபி 11:24-26 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மத் 10:39வெளி 12:11மாற் 8:35யோவா 12:25லூக் 17:33அப் 20:23-24எஸ்த 4:16எஸ்த 4:14 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? யோபு 27:8மாற் 8:36-37லூக் 9:25லூக் 12:20சங் 49:7-8லூக் 16:25யோபு 2:4மத் 5:29 மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். சங் 62:122 கொரி 5:10ரோம 2:6ரோம 14:12எரே 17:10வெளி 22:12-15ஏசா 3:10-11எபே 6:8 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 9:27மாற் 9:1யோவா 8:52மத் 26:64மத் 10:23லூக் 21:27-28லூக் 2:26மாற் 13:26