மத்தேயு 17

Matthew 17
அத்தியாயம் 17

இயேசு மருரூபமாகுதல்

ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய், லூக் 9:28-36மத் 26:37மாற் 5:372 கொரி 13:12 பேது 1:18மாற் 9:2-13லூக் 8:51 அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது. சங் 104:2மத் 28:3யோவா 1:14லூக் 9:29வெளி 10:1யோவா 17:24வெளி 20:11மாற் 9:3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். லூக் 24:44மல்கி 4:51 இராஜா 18:36-40உபா 34:10மாற் 9:41 இராஜா 17:12 கொரி 3:7-112இராஜா 2:11-14 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். மாற் 9:5-6லூக் 9:33வெளி 22:3-51 யோவா 3:2யோவா 14:8-9சங் 63:1-5யாத் 33:18-19ஏசா 33:17 அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. மத் 3:17மத் 12:18உபா 18:15மாற் 9:7எபி 2:1-3வெளி 1:7யோவா 3:35மாற் 1:11 சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப் 26:142 பேது 1:18நியாயாதி 13:201 நாளாக 21:16அப் 22:7தானி 10:16-17தானி 10:7-9தானி 8:17 அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார். தானி 10:18தானி 8:18மத் 14:27தானி 10:10வெளி 1:17அப் 9:6தானி 9:21லூக் 24:5 அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. லூக் 9:36மாற் 9:8அப் 12:10-11 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மாற் 8:30லூக் 24:46-47லூக் 8:56லூக் 9:21-22மத் 16:20-21மத் 17:12மத் 17:23மத் 8:20 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள். மல்கி 4:5-6மத் 11:14யோவா 1:21மாற் 9:11யோவா 1:25மத் 17:3-4மத் 27:47-49 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான். அப் 3:21லூக் 1:16-17மல்கி 4:6லூக் 3:3-14 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார். ஏசா 53:3-12அப் 13:24-28மத் 16:21மாற் 6:14-28அப் 3:14-15அப் 4:10யோவா 5:32-36மாற் 9:12-13 அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். மத் 11:14

பிசாசு பிடித்திருந்த சிறுவன் குணமடைதல்

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: மாற் 9:14-29மாற் 1:40அப் 10:25-26மாற் 10:17லூக் 9:37-43மத் 17:14-19 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான். மத் 4:24யோவா 4:46-47யோபு 1:10-19யோபு 2:7லூக் 9:38-42மத் 15:22மத் 8:31-32மாற் 5:22-23 அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான். மத் 17:19-20அப் 19:15-16லூக் 9:402இராஜா 4:29-31அப் 3:16 இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். எண் 14:11மத் 6:30எபி 3:16-19மாற் 16:14மாற் 9:19மத் 8:26நீதி 1:22அப் 13:18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான். மத் 9:22மாற் 1:34அப் 16:18அப் 19:13-15யோவா 4:52-53லூக் 4:35-36லூக் 8:29லூக் 9:42 அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள். மாற் 9:28மாற் 4:10 அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 17:6மாற் 11:23லூக் 1:37லூக் 18:27மத் 21:21மாற் 9:231 கொரி 13:2மத் 13:31 இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். மத் 16:21லூக் 18:31-34மத் 17:23மாற் 8:31லூக் 24:46லூக் 24:6-7லூக் 9:22லூக் 9:44-45 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். ஏசா 53:10-12மத் 16:21மாற் 8:31சகரி 13:71 கொரி 15:3-4அப் 2:23-31ஏசா 53:7யோவா 16:20-22

தேவாலய வரி

அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். யாத் 30:13யாத் 38:26மாற் 9:33 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். மத் 22:21மத் 22:17மத் 22:19ரோம 13:6-71 சாமு 17:25மத் 3:15 அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே. ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார். 2 கொரி 6:31 கொரி 8:91 கொரி 9:19-222 கொரி 8:91 கொரி 8:13ரோம 15:1-3யோனா 1:17மத் 15:12-14