எண்ணாகமம் 14

Numbers 14
அத்தியாயம் 14

மக்கள் கலகம் செய்தல்

அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். உபா 1:45எண் 11:1-4 இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லோரும் அவர்களை நோக்கி: “எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாக இருக்கும்; இந்த வனாந்திரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். யாத் 15:24யாத் 17:3எண் 16:411 கொரி 10:10யாத் 16:2-3யூதா 1:16எண் 14:27-29பிலி 2:14-15 நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், யெகோவா எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ” என்றார்கள். எரே 9:3எண் 14:31-32சங் 78:40 பின்பு அவர்கள்: “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப் 7:39நெகே 9:16-17உபா 17:16லூக் 17:32உபா 28:68எபி 11:152 பேது 2:21-22எபி 10:38-39 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். எண் 16:4எண் 16:22எண் 16:451 நாளாக 21:16எசேக் 9:8ஆதி 17:3யோசு 5:14லேவி 9:24 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எண் 13:30எண் 14:30ஆதி 37:29ஆதி 37:34எண் 13:6எண் 13:8எண் 14:382இராஜா 18:37 இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். எண் 13:27உபா 1:25உபா 6:10-11உபா 8:7-9 யெகோவா நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். 2 சாமு 22:20ஏசா 62:4எண் 13:27உபா 10:15சங் 147:10-11ரோம 8:311 இராஜா 10:9சங் 22:8 யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள். உபா 7:18உபா 31:6ரோம 8:31உபா 31:8எண் 24:8சங் 74:142 நாளாக 20:172 நாளாக 32:8 அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே யெகோவாவுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது. யாத் 17:41 சாமு 30:6லேவி 9:23யாத் 16:10யாத் 16:7மத் 23:37எண் 16:19எண் 16:42 யெகோவா மோசேயை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மக்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை நம்பாமலிருப்பீர்கள்? சங் 78:32சங் 106:24சங் 78:22உபா 9:22-23சங் 78:41-42உபா 1:32எபி 3:8யோவா 12:37 நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, கானானில் அவர்களுக்குரியதை வெளியே தள்ளி, அவர்களைவிட உன்னைப் பெரிதும் பலத்ததுமான தேசமாக்குவேன் என்றார். யாத் 32:102 சாமு 24:1எண் 16:46-49எண் 25:92 சாமு 24:12-15யாத் 5:3 மோசே யெகோவாவை நோக்கி: “எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே. சங் 106:23உபா 32:27யாத் 32:11-14எசேக் 20:9உபா 9:26-28எசேக் 20:14யோசு 7:8-9 யெகோவாவாகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், யெகோவாவாகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். யாத் 15:14யாத் 13:21-22நெகே 9:12உபா 5:4யாத் 33:11யாத் 40:38ஆதி 32:30யோவா 1:18 ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: நியாயாதி 6:16 யெகோவா அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. உபா 9:28யோசு 7:7யோசு 7:9உபா 32:26-27 ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, மத் 9:6மத் 9:8மீகா 3:8 என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக. யாத் 34:6-7சங் 145:8யாத் 20:5யோனா 4:2நாகூ 1:2-3சங் 103:8மீகா 7:18உபா 5:9 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். யாத் 34:9சங் 106:45சங் 78:38யாத் 32:32யோனா 4:2சங் 51:1-21 யோவா 5:14-161 இராஜா 8:34 அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன். மீகா 7:18-20யாக் 5:16சங் 106:23 பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். ஆப 2:14சங் 72:19ஏசா 6:3உபா 32:40ஏசா 49:18மத் 6:10எசேக் 18:3எசேக் 33:11 என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும், எபி 3:17-18ஆதி 31:7யோபு 19:3உபா 1:31-35யாத் 32:1சங் 106:26யாத் 17:21 கொரி 10:5 அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். எண் 32:11எசேக் 20:15எண் 26:64உபா 1:35-45எபி 3:17-18எபி 4:3நெகே 9:23சங் 106:26 என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். யோசு 14:6-14எண் 14:6-9எண் 32:11-12அப் 11:23உபா 1:36எபே 6:6எண் 13:30எண் 26:65 அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பயணம்செய்யுங்கள்” என்றார். உபா 1:40எண் 13:29எண் 14:4நீதி 1:31சங் 81:11-13 பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன். யாத் 16:121 கொரி 10:10யாத் 16:28மாற் 9:19எண் 14:11மத் 17:7 நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார். எண் 14:21எபி 3:17எண் 14:2உபா 1:35எண் 14:23எண் 26:64-65எண் 32:11சங் 90:8-9 இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எண் 1:45எண் 26:641 கொரி 10:5எபி 3:17யூதா 1:5எண் 14:32-33 எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை. உபா 1:36-38எண் 14:38ஆதி 14:22எண் 26:65எண் 32:12 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைசெய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உபா 1:39சங் 106:24எண் 14:3எண் 26:6எண் 26:64அப் 13:41ஆதி 25:34எபி 12:16-17 உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும். 1 கொரி 10:5எண் 14:29எபி 3:17 அவைகள் வனாந்திரத்திலே விழுந்து தீரும்வரை, உங்களுடைய பிள்ளைகள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே திரிந்து, நீங்கள் செய்த கலகங்களின் பலனைச் சுமப்பார்கள். எசேக் 23:35எண் 32:13உபா 2:14சங் 107:40உபா 1:3எசேக் 23:45-49ஓசி 9:1எரே 3:1-2 நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். எசேக் 4:6எண் 13:25எரே 18:9-10தானி 9:241 சாமு 2:302 நாளாக 36:21உபா 31:16-17எபி 4:1 யெகோவாவாகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்திரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். எண் 23:191 கொரி 10:5எபி 3:19எண் 26:651 கொரி 10:11எண் 14:27-29 அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, எண் 13:31-33எண் 13:4-16 சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். 1 கொரி 10:10எண் 16:49எபி 3:17எண் 14:12எரே 28:16-17எரே 29:32யூதா 1:5எண் 25:9 தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள். யோசு 14:6-10எண் 26:65 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னபோது, மக்கள் மிகவும் துக்கித்தார்கள். யாத் 33:4எபி 12:17மத் 8:12நீதி 19:3ஏசா 26:16 அதிகாலையில் அவர்கள் எழுந்து: “நாங்கள் பாவம்செய்தோம், யெகோவா வாக்குத்தத்தம்செய்த இடத்திற்கு நாங்கள் போவோம்” என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். உபா 1:41பிரச 9:3லூக் 13:25மத் 7:21-23மத் 26:11-12 மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படி யெகோவாவின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. 2 நாளாக 24:20எரே 2:37எரே 32:5யோபு 4:9எண் 14:25 நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாமலிருங்கள்; யெகோவா உங்களுடைய நடுவில் இருக்கமாட்டார். உபா 1:42யோசு 7:12யோசு 7:8சங் 44:1-11 அமலேக்கியர்களும் கானானியர்களும் அங்கே உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் யெகோவா வை விட்டுப் பின்வாங்கினபடியால், யெகோவா உங்களோடு இருக்கமாட்டார்” என்றான். 2 நாளாக 15:2எண் 13:29எண் 14:251 நாளாக 28:9உபா 28:25ஓசி 9:12ஏசா 63:10நியாயாதி 16:20 ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் முகாமை விட்டுப்போகவில்லை. உபா 1:431 சாமு 4:3-11எண் 10:33எண் 15:30எண் 31:6 அப்பொழுது அமலேக்கியர்களும் கானானியர்களும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறியடித்து, அவர்களை ஓர்மாவரை துரத்தினார்கள். எண் 21:3உபா 1:44நியாயாதி 1:17எண் 14:43உபா 32:30யாத் 17:16யோசு 7:11-12யோசு 7:5