அளவுநூல்
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். எசேக் 40:3சகரி 1:16எசேக் 40:5எசேக் 47:4வெளி 11:1வெளி 21:15சகரி 1:18 நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார். எசேக் 45:6எரே 31:39வெளி 21:15-17வெளி 11:1எசேக் 48:15-17சகரி 5:10எசேக் 40:3எசேக் 48:30-35 இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான். சகரி 1:19சகரி 1:13-14சகரி 1:8-11சகரி 4:5சகரி 5:5சகரி 4:1 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும். சகரி 1:17எசேக் 38:11எரே 33:22மீகா 7:11எசேக் 36:10-11ஏசா 44:26ஏசா 49:20எரே 31:27 நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 4:5சங் 3:3சகரி 9:8ஏசா 60:18-19வெளி 21:23ஏசா 12:6ஏசா 26:1-2ஏசா 33:21 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 17:21ஏசா 48:20உபா 28:64எசேக் 11:16ஆதி 19:17ஏசா 52:11-12வெளி 18:42 கொரி 6:16-17 பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். ஏசா 48:20அப் 2:40ஆதி 19:17ஏசா 52:11எரே 51:6வெளி 18:4ஏசா 52:2எரே 50:8 அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான். சங் 17:8உபா 32:10யோவா 15:21-23யோவா 14:262 தெச 1:6சங் 105:13-15மத் 25:40எரே 50:17-18 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். ஏசா 19:16எசேக் 39:10ஏசா 14:2சகரி 4:9சகரி 6:15ஏசா 11:15ஏசா 13:2ஆப 2:17 மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். யோவா 1:14மத் 28:20சகரி 9:9எசேக் 37:27சகரி 8:3செப்ப 3:14-152 கொரி 6:15-16ஏசா 51:11 அந்நாளிலே அநேக தேசங்கள் யெகோவாவைச் சேர்ந்து என் மக்களாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். வெளி 11:151 பேது 2:9-10அப் 28:28ஏசா 45:14லூக் 2:32சகரி 2:9-10ஏசா 19:24-25ஏசா 52:10 யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். சகரி 1:17உபா 32:9எரே 10:16சங் 33:12யாத் 19:5-6ஏசா 41:9எரே 51:19சங் 135:4 மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார். ஆப 2:20செப்ப 1:7சங் 68:5சங் 78:65சங் 46:10செப்ப 3:8ஏசா 26:20-21ஏசா 42:13-15