ஏசாயா 60

Isaiah 60
அத்தியாயம் 60

சீயோனின் மகிமை

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது. எபே 5:14எபே 5:8யோவா 8:12ஏசா 52:1-2ஏசா 60:19-20ஏசா 58:8யோவா 12:46மத் 5:16 இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். கொலோ 1:131 பேது 2:9அப் 17:30-312 கொரி 4:4-6அப் 26:18எபே 4:17-20ஆகா 2:7-9ரோம 1:21-32 உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். ஏசா 49:23அப் 13:47வெளி 21:24ஏசா 2:2-5மீகா 4:1-2சங் 117:1-2ஏசா 45:14சங் 68:29 சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். ஏசா 42:6ஏசா 49:18ஏசா 49:20-22கலா 3:28-29ஏசா 43:6அப் 13:44ஏசா 66:11-12மத் 8:11 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். ஏசா 61:6ஏசா 23:18அப் 10:45சங் 98:7-91 சாமு 2:1அப் 11:17ஓசி 1:10-11ஓசி 3:5 ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள். மத் 2:11சங் 72:10சங் 72:151 பேது 2:9ஆதி 25:3-4நியாயாதி 6:51 பேது 2:5வெளி 5:9-10 கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கீகரிக்கப்பட்டதாக என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். ஏசா 56:7ஆதி 25:13எபி 13:15-16ஆகா 2:7-9யோபு 42:8ரோம 12:1ரோம 15:16ஏசா 42:11 மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்கு வேகமாகவருகிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? வெளி 7:9லூக் 13:29எபி 12:1ஏசா 49:21ஏசா 60:4ஆதி 8:8-11ஏசா 45:22 தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும். ஏசா 55:5ஏசா 2:16ஏசா 11:11ஏசா 51:5கலா 4:26ஏசா 42:10ஏசா 42:4ஏசா 49:1 அந்நியமக்கள் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு மனமிரங்கினேன். ஏசா 61:5ஏசா 49:23வெளி 21:26ஏசா 14:1-2ஏசா 60:3வெளி 21:24சகரி 6:15ஏசா 12:1 உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும். வெளி 21:25-26ஏசா 60:5ஏசா 60:18ஏசா 62:10சங் 149:8நெகே 13:19 உன்னைச் சேவிக்காத தேசமும் ராஜ்யமும் அழியும்; அந்த தேசங்கள் நிச்சயமாகப் பாழாகும். ஏசா 54:15சகரி 14:12-19தானி 2:44-45ஏசா 14:2ஏசா 41:11சங் 2:12தானி 2:35லூக் 19:27 என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன். ஏசா 35:21 நாளாக 28:2சங் 132:7சங் 96:6எஸ்றா 7:27ஓசி 14:6-7ஏசா 41:19-20ஏசா 55:13 உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். வெளி 3:9ஏசா 49:23எபி 12:22ஏசா 45:14ஏசா 1:26ஏசா 14:1-2ஏசா 62:12வெளி 3:12 நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். ஏசா 61:7எரே 30:17ஏசா 49:14-23ஏசா 35:10எரே 33:11ஏசா 4:2ஏசா 54:6-14ஏசா 6:12 நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, யெகோவாவாகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய். ஏசா 49:23ஏசா 66:11-12ஏசா 66:14ஏசா 61:6ஏசா 43:3-4எசேக் 34:30ஏசா 59:20 நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன். எபி 11:40ஏசா 30:26ஏசா 1:26சகரி 12:81 இராஜா 10:21-272 பேது 3:13ஏசா 32:1-2 இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய். ஏசா 26:1ஏசா 11:9சகரி 9:8சங் 72:3-7ஏசா 2:4மீகா 4:3வெளி 19:1-6 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். வெளி 21:23வெளி 22:5சகரி 2:5சங் 36:9சங் 3:3சங் 62:7லூக் 2:32சங் 4:2 உன் சூரியன் இனி மறைவதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; யெகோவாவே உனக்கு நிலையான வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும். வெளி 21:4சங் 84:11ஏசா 35:10சங் 27:1மல்கி 4:2ஏசா 30:26ஏசா 25:8வெளி 7:15-17 உன் மக்கள் அனைவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும் குடிமக்களும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் செயல்களுமாயிருப்பார்கள். மத் 15:13சங் 37:22சங் 37:11ஏசா 29:23ஏசா 61:3யோவா 15:2சங் 92:13எபே 2:10 சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன். ஆப 2:3எபி 10:36லூக் 18:7மத் 13:31-322 பேது 3:8ஏசா 66:8ஏசா 5:19தானி 2:44