விசுவாசிகளுக்கான காணிக்கை சேகரிப்பு
இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள். 1 யோவா 3:172 கொரி 8:1-92 கொரி 9:12-15ரோம 12:13கலா 2:10ரோம 15:25-26அப் 24:17எபி 6:10 ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்படி. அதை சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வரும்போது பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மல்கி 3:9-10அப் 20:7லூக் 16:10உபா 15:11-14உபா 8:182 கொரி 9:3-52 கொரி 8:1-32 கொரி 8:11-15 நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன். 2 கொரி 8:18-242 கொரி 8:42 கொரி 8:61 கொரி 11:341 கொரி 4:19-21அப் 6:1-6 நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம். 2 கொரி 8:192 கொரி 8:4ரோம 15:25
தனிப்பட்ட வேண்டுகோள்
எனவே, நான் மக்கெதோனியா நாட்டின் வழியாகப்போக இருக்கிறேன். மக்கெதோனியாவின் வழியாக நான் போனபின், நான் உங்களிடம் வருவேன். அப் 19:211 கொரி 4:192 கொரி 1:15-17அப் 20:1-3 சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம். அப் 15:33 யோவா 1:6-7ரோம 15:241 கொரி 16:112 கொரி 1:16அப் 17:15அப் 20:38அப் 21:5 இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அப் 18:211 கொரி 4:19யாக் 4:15எரே 10:23ரோம 1:102 கொரி 1:15நீதி 19:21 ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன். அப் 2:1யாத் 23:161 கொரி 15:32அப் 18:19லேவி 23:15-21 ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான ஒரு பெரியவாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. ஆனால், என்னை எதிர்க்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள். 2 கொரி 2:12அப் 14:27கொலோ 4:3வெளி 3:7-82 கொரி 1:8-101 கொரி 15:32அப் 19:8-10பிலி 3:18
தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி வசதியாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் செய்கிறதுபோலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறானே. 1 கொரி 15:581 கொரி 4:171 தெச 3:2பிலி 2:19-22ரோம 16:211 கொரி 16:111 தெச 4:122 கொரி 1:1 ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 1 தீமோ 4:12அப் 15:33தீத் 2:151 கொரி 16:101 கொரி 16:61 தெச 4:83 யோவா 1:6லூக் 10:16
நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கிறதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர, அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான். 1 கொரி 1:121 கொரி 3:51 கொரி 3:22அப் 18:24தீத் 3:4அப் 24:25பிரச 3:1மாற் 6:21
கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். யோசு 1:9எபே 6:13-18எபே 6:101 கொரி 15:582 கொரி 12:9-10கலா 5:1சங் 27:14பிலி 4:13 நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள். யோவா 13:34-351 பேது 4:81 தீமோ 1:51 யோவா 4:7-81 கொரி 12:31யோவா 15:17கலா 5:22ரோம 13:8-10
ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணிசெய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நான் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது: 1 கொரி 1:16ரோம 16:5ரோம 15:251 பேது 4:101 தீமோ 5:102 கொரி 8:42 கொரி 9:1ரோம 12:13 இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்புக்கொடுத்து நடவுங்கள். கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகிற ஒவ்வொருவருக்கும் மதிப்புக்கொடுத்து நடவுங்கள். 1 தெச 5:12எபி 13:173 யோவா 1:81 நாளாக 12:181 கொரி 12:281 கொரி 3:91 பேது 5:51 தெச 1:3 ஸ்தேவானும், பொர்த்துனாத்தும், அகாயுவும் இங்கு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள். 2 கொரி 11:9பிலி 2:30பிலே 1:13 அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்கவேண்டும். பிலே 1:72 கொரி 7:13ரோம 15:321 தெச 5:12கொலோ 4:8நீதி 25:13நீதி 25:251 தெச 3:6-7
இறுதி வாழ்த்துதல்
ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகளும், உங்களுக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். அப் 18:21 பேது 1:12 தீமோ 4:19அப் 18:18அப் 18:26அப் 19:10கொலோ 4:15பிலே 1:2
ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபையோரும், கர்த்தருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ரோம 16:161 பேது 5:141 தெச 5:262 கொரி 13:12-13எபி 13:24பிலே 1:23-24பிலி 4:22ரோம 16:21
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன். கொலோ 4:18கலா 6:112 தெச 3:17பிலே 1:19ரோம 16:22
யாராவது கர்த்தரில் அன்பாயிருக்காவிட்டால், அவன் சபிக்கப்பட்டவன். கர்த்தாவே வாரும்! எபே 6:24யோவா 14:211 யோவா 4:191 யோவா 5:12 கொரி 5:14-15எபி 6:10யோவா 8:42மத் 10:37
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக. ரோம 16:20ரோம 16:23
கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென். மத் 6:13வெளி 3:191 கொரி 14:162 கொரி 12:151 கொரி 16:141 கொரி 4:14-152 கொரி 11:11மத் 28:20