2 தீமோத்தேயு 4

2 Timothy 4

இறைவனுக்கு முன்பாகவும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கும்படி வரப்போகிற, அவருடைய அரசையும் கருத்தில்கொண்டு, நான் உனக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: அப் 10:422 தீமோ 4:81 தீமோ 5:21மத் 16:272 தீமோ 2:141 பேது 5:42 தெச 1:7-10தீத் 2:13 வார்த்தையைப் பிரசங்கம்பண்ணு; சாதகமான சூழ்நிலையிலும், பாதகமான சூழ்நிலையிலும் அதற்கு ஆயத்தமாய் இரு. நீடிய பொறுமையுடனும், கவனமான அறிவுறுத்தலுடனும் சீர்திருத்து. கண்டனம் செய், உற்சாகப்படுத்து. 1 தெச 5:141 தீமோ 4:15-16வெளி 3:191 தீமோ 4:13தீத் 2:152 தீமோ 2:21தீத் 1:13கலா 6:6 ஏனெனில், ஆரோக்கியமான போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்லும் போதகர்கள் அநேகரைத் தங்களுக்காகச் சேர்த்துக்கொள்வார்கள். 2 பேது 2:1-32 தீமோ 3:1-61 தீமோ 4:1-31 தீமோ 1:10கலா 4:16யோவா 3:19-21எரே 23:16-17எரே 6:16-17 அவர்கள் சத்தியத்திற்கு தங்கள் செவிகளை விலக்கி கற்பனைக் கதைகளுக்குச் செவிசாய்ப்பார்கள். சகரி 7:11அப் 7:571 தீமோ 1:42 பேது 1:161 தீமோ 4:7தீத் 1:141 தீமோ 6:202 தீமோ 1:15 ஆனால் நீயோ, எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. பாடுகளைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனின் பணியைச்செய். உனது ஊழியத்திற்குரிய கடமைகள் எல்லாவற்றையும் நிறைவேற்று. 2 தீமோ 1:82 தீமோ 2:31 பேது 1:13கொலோ 4:172 தீமோ 3:10-121 தீமோ 4:151 தீமோ 4:12அப் 21:8

ஏனெனில் நான் இப்போதே பானபலியாக ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது. பிலி 1:23பிலி 2:172 பேது 1:14-15யோசு 23:14ஆதி 48:21எண் 27:12-17உபா 31:14ஆதி 50:24 நான் ஆவிக்குரிய போராட்டத்தை நன்றாகப் போராடினேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்தேன். என் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 1 தீமோ 6:121 கொரி 9:24-27எபி 12:1-2அப் 20:24பிலி 3:13-14யோவா 4:34வெளி 3:8லூக் 8:15 இப்பொழுது எனக்கென நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீதியுள்ள நீதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் எனக்குத் தருவார். எனக்கு மட்டுமல்ல, அவருடைய வருகையை வாஞ்சையுடன் எதிர்பார்த்திருக்கிற எல்லோருக்கும் கொடுப்பார். யாக் 1:12வெளி 2:101 பேது 5:4மத் 6:19-201 பேது 1:41 கொரி 9:252 தீமோ 1:12கொலோ 1:5

பவுலின் அறிவுரை

நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய். 2 தீமோ 1:42 தீமோ 4:21 ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். 1 யோவா 2:15-162 தீமோ 1:15கொலோ 4:14-151 யோவா 5:4-52 கொரி 2:13அப் 16:6பிலே 1:242 தீமோ 4:16 லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறான். மாற்குவையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வா. ஏனெனில் அவன் எனது ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான். அப் 12:12அப் 12:25பிலே 1:242 தீமோ 1:15அப் 15:39கொலோ 4:10கொலோ 4:141 பேது 5:13 நான் தீகிக்குவை எபேசுவிற்கு அனுப்பியுள்ளேன். அப் 20:4எபே 6:21கொலோ 4:7தீத் 3:121 தீமோ 1:3அப் 20:16-17அப் 20:25 துரோவாவிலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் விட்டுவந்த எனது மேலுடையை நீ வரும்போது கொண்டுவா. என் புத்தகச்சுருள்களையும், விசேஷமாக தோல்சுருள்களையும் கொண்டுவா. 1 கொரி 4:112 கொரி 11:27அப் 16:11அப் 16:8அப் 20:5-12

செப்புத்தொழிலாளியாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகவும் தீமைசெய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார். 1 தீமோ 1:202 தெச 1:6சங் 28:41 சாமு 24:122 சாமு 3:39அப் 19:33-34எரே 15:15எரே 18:19-23 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன், நமது செய்தியைக் கடுமையாக எதிர்த்தான். 2 தீமோ 3:8பிலி 3:2மத் 10:16-17

எனது முதலாவது வழக்கு விசாரணையில் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக அது குற்றமாய் எண்ணப்படாதிருப்பதாக. அப் 7:60யோவா 16:32மாற் 14:50சங் 31:11-131 கொரி 9:31 பேது 3:152 கொரி 7:112 தீமோ 1:15 ஆனால் கர்த்தர் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பெலன் கொடுத்தார். இதனால் என் மூலமாய் நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்பட்டதுடன், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாயிருந்தது. என்னை சிங்கத்தின் வாயிலிருந்தும் விடுவித்தார். 1 பேது 5:8பிலி 1:12-14சங் 22:211 சாமு 17:37தானி 6:22அப் 18:9-10அப் 9:15அப் 23:11 ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். சங் 121:72 தெச 3:3யூதா 1:24-25மத் 6:131 தெச 5:23யோவா 10:28-301 பேது 1:5சங் 73:24

இறுதி வாழ்த்துதல்

பிரிஸ்காளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துதல் சொல். அப் 18:21 கொரி 16:192 தீமோ 1:16-18ரோம 16:3-4அப் 18:26அப் 18:18

எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோப்பீமு வியாதியாய் இருந்ததால், நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். அப் 20:4அப் 19:22அப் 21:29பிலி 2:26-27அப் 20:15ரோம 16:23அப் 20:17 குளிர் காலத்திற்கு முன்பு, இங்கு வந்து சேருவதற்கு முயற்சிசெய். 2 தீமோ 4:9பிலி 4:221 கொரி 16:202 கொரி 13:132 யோவா 1:132 தீமோ 1:42 தீமோ 4:133 யோவா 1:14

ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்ற எல்லா பிரியமானவர்களும் உன்னை வாழ்த்துகிறார்கள்.

ஆண்டவர் உனது ஆவியோடு இருப்பாராக. கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. பிலே 1:25கலா 6:18கொலோ 4:18ரோம 1:71 பேது 5:14எபே 6:24வெளி 22:211 கொரி 16:23