ஆமோஸ் 5

Amos 5

மனமாறுதலுக்கு அழைப்பு

இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்: எசேக் 19:1எரே 7:29எரே 9:10எரே 9:17ஆமோ 3:1ஆமோ 4:1ஆமோ 5:16எசேக் 19:14

“இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள், எரே 14:17ஓசி 14:12இராஜா 15:292இராஜா 17:16ஆமோ 7:2-5ஆமோ 8:14ஆமோ 9:11எசேக் 16:36-37

இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள்.

தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள்.

அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.”

ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: எசேக் 12:16ஏசா 10:22ஏசா 6:13ரோம 9:27உபா 28:62உபா 4:27ஏசா 1:9ஆமோ 6:9

“இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு,

நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள்.

நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு,

பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”

இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே: 2 நாளாக 15:2செப்ப 2:3எரே 29:12-13ஏசா 55:3சங் 14:2ஏசா 55:6-7மத் 7:8சங் 105:3-4

என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.

பெத்தேலைத் தேடாதீர்கள், ஓசி 4:15ஆமோ 4:4ஆமோ 8:14ஆதி 21:331 கொரி 1:281 கொரி 2:6ஆமோ 7:17வெளி 18:17

கில்காலுக்குப் போகாதீர்கள்,

பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள்.

கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும்,

பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,

இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், எசேக் 20:47-48எசேக் 33:11ஏசா 55:6ஆமோ 5:14ஆமோ 5:4ஆதி 48:8-20மாற் 9:43-48சகரி 10:6

அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.

இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக

நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார்.

அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும்.

அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே, ஆமோ 6:12ஆமோ 5:11-12உபா 29:18எசேக் 3:20ஓசி 10:4செப்ப 1:6எசேக் 18:24எசேக் 33:12-13

நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள்.

அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். ஆமோ 4:13யோபு 9:9ஆமோ 9:6ஆமோ 8:9சங் 104:20யோபு 38:31-32யாத் 10:21-23யோபு 12:22

இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும்,

பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே;

கடலின் தண்ணீரை அழைத்து,

பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே,

“யெகோவா” என்பது அவர் பெயர்.

அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து, 2இராஜா 13:172இராஜா 13:25எபி 11:34எரே 37:10மீகா 5:11

அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.

இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு 1 இராஜா 22:8ஏசா 29:21யோவா 8:45-47எரே 17:16-171 இராஜா 18:171 இராஜா 21:202 நாளாக 24:20-222 நாளாக 25:16

குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள்,

உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள்.

ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி உபா 28:30மீகா 6:15செப்ப 1:13யாக் 2:6ஆகா 1:6வெளி 11:8-10ஆமோ 3:15மீகா 2:2

அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள்.

ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும்,

அதில் வாழமாட்டீர்கள்,

செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும்

அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள்.

உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், ஆமோ 2:6-7ஆமோ 5:10ஏசா 1:231 சாமு 8:3அப் 7:52யாக் 5:4மல்கி 3:5சங் 26:9-10

உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன்.

நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள்.

நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.

ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். 2 தீமோ 3:1பிரச 3:7எபே 5:15-16ஓசி 4:4மீகா 2:3ஆமோ 6:10பிரச 9:12எபே 6:13

ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது.

தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், யோசு 1:9மத் 6:33மீகா 3:11மீகா 6:8பிலி 4:8-92 தீமோ 4:221 நாளாக 28:20ஆதி 39:2-3

அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.

சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே,

அவர் உங்களோடிருப்பார்.

தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். ரோம 12:93 யோவா 1:11யோவே 2:14சங் 97:101 தெச 5:21-22மீகா 5:7-8ரோம 8:7மீகா 5:3

நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள்.

ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா,

யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார்.

ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: யோவே 1:11எரே 9:17-20எரே 9:10ஆமோ 3:13ஆமோ 5:27ஆமோ 8:10ஏசா 15:2-5ஏசா 15:8

“எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.

பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும்.

அழுவதற்காக விவசாயிகளும்,

புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.

திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். யாத் 12:12ஏசா 16:10எரே 48:33யாத் 12:23ஓசி 9:1-2ஏசா 32:10-12யோவே 3:17நாகூ 1:12

ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்”

என்று யெகோவா சொல்கிறார்.

யெகோவாவின் நாள்

யெகோவாவின் நாளை விரும்புகிற யோவே 1:15யோவே 2:1-2யோவே 2:31எரே 30:7மல்கி 4:1ஏசா 24:11-12ஏசா 5:19ஏசா 5:30

உங்களுக்கு ஐயோ கேடு,

யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்?

அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும்.

ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், ஏசா 24:17-18எரே 15:2-3அப் 28:4எரே 48:43-441 இராஜா 20:29-30ஆமோ 9:1-2யோபு 20:24-25

கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும்.

அவன் தன் வீட்டிற்குள் வந்து

சுவரில் கையை ஊன்றியபோது,

அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும்.

யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ? ஏசா 13:10எசேக் 34:12செப்ப 1:15யோபு 10:21-22யோபு 3:4-6யூதா 1:13மத் 22:13நாகூ 1:8

ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ?

உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; ஏசா 1:11-16நீதி 28:9லேவி 26:31ஏசா 66:3எரே 6:20நீதி 15:8ஓசி 8:13ஆதி 8:21

உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.

தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் மீகா 6:6-7ஆமோ 4:4-5ஏசா 66:3லேவி 7:12-15சங் 107:21-22சங் 116:17சங் 50:23சங் 50:8-14

நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும்,

அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும்,

அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.

உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள். ஆமோ 6:5ஆமோ 8:10ஆமோ 8:3

உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன்.

அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும். மீகா 6:8எரே 22:3நீதி 21:3ஓசி 6:6மாற் 12:32-34ஆமோ 5:14-15ஆமோ 5:7யோபு 29:12-17

நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும்.

இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய் அப் 7:42-43எசேக் 20:8நெகே 9:18எசேக் 20:16யோசு 24:14லேவி 17:7நெகே 9:21உபா 32:17-19

நீங்கள் எனக்கு பலிகளையும்,

காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?

ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள். 2இராஜா 23:12-13லேவி 20:2-51 இராஜா 11:33லேவி 18:21

உங்களுக்கென செய்த

விக்கிரகங்களின் கூடாரத்தையும்,

நட்சத்திரத் தெய்வங்களையும் சுமந்துகொண்டு போனீர்கள்.

ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று, 2இராஜா 17:6அப் 7:43ஆமோ 4:132இராஜா 15:29

சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய யெகோவா சொல்கிறார்.