இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள்
யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளும், விதிமுறைகளும், சட்டங்களும் இவையே. இவற்றை உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை நியமித்திருக்கிறார். உபா 4:1உபா 12:1உபா 4:45உபா 5:31லேவி 27:34உபா 4:14உபா 4:5எசேக் 37:24 நான் உங்களுக்குக், கொடுக்கிற அவருடைய இந்த விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கைக்கொண்டால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளும் வாழும் காலமெல்லாம் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பீர்கள். நீங்கள் நீடித்த வாழ்வையும் அனுபவிப்பீர்கள். உபா 4:40உபா 13:4பிரச 12:13யாத் 20:20நீதி 3:1-2சங் 128:1நீதி 3:161 பேது 3:10-11 இஸ்ரயேலே, கேளுங்கள், கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். கீழ்ப்படிந்தால் நீங்கள் நலமாயிருப்பீர்கள்; பாலும் தேனும் வழிந்தோடுகிற நாட்டில், உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே மிகுதியாய்ப் பெருகுவீர்கள். ஆதி 22:17யாத் 3:8ஆதி 15:5ஆதி 26:4ஆதி 28:14ஏசா 3:10அப் 7:17உபா 4:6
இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா. மாற் 12:29-32ஏசா 44:61 தீமோ 2:5ஏசா 45:5-6யோவா 17:3யோவா 10:30ஏசா 44:8ஏசா 42:8 உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து. மாற் 12:30மத் 22:37லூக் 10:27உபா 10:12உபா 30:6உபா 4:291 யோவா 5:3மாற் 12:33 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும். கொலோ 3:16நீதி 7:3எரே 31:33உபா 11:182 கொரி 3:3சங் 37:31உபா 32:46சங் 119:11 அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள். உபா 11:19எபே 6:4சங் 78:4-61 பேது 3:15உபா 4:9-10உபா 6:2எபே 4:29ஆதி 18:19 அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். நீதி 6:21உபா 11:18நீதி 3:3யாத் 13:9நீதி 7:3யாத் 13:16எண் 15:38-39எபி 2:1 அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள். உபா 11:20ஏசா 30:8ஏசா 57:8ஆப 2:2யாத் 12:7யோபு 19:23-25
உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. யோசு 24:13சங் 105:44நெகே 9:25ஆதி 26:3சங் 78:55ஆதி 13:15-17ஆதி 15:18ஆதி 28:13 நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். உபா 7:12-18உபா 8:10-20எசேக் 16:10-20உபா 32:15எரே 2:31-32நியாயாதி 3:7நீதி 30:8-9மத் 19:23-24 அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள். லூக் 4:8உபா 10:20உபா 13:4மத் 4:10லேவி 19:12உபா 10:12சங் 63:11ஏசா 45:23 உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம். எரே 25:61 யோவா 5:21உபா 13:7உபா 8:19உபா 11:28யாத் 34:14-16 ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார். உபா 4:24யாத் 20:5உபா 11:17உபா 7:41 இராஜா 13:342 நாளாக 36:16ஆமோ 3:2ஆமோ 9:8 நீங்கள் மாசாவிலே 1 செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம். யாத் 17:7லூக் 4:12மத் 4:7சங் 95:8-9எபி 3:8-91 கொரி 10:9யாத் 17:2எண் 21:4-5 உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள். உபா 11:22சங் 119:41 கொரி 15:582 பேது 1:5-102 பேது 3:14யாத் 15:26எபி 6:11தீத் 3:8 யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். உபா 4:40உபா 12:25உபா 5:29ரோம 12:2எசேக் 18:5யோவா 8:29உபா 12:28உபா 13:18 அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார். யாத் 23:28-30எண் 33:52-53நியாயாதி 2:1-3நியாயாதி 3:1-4
வருங்காலத்திலே உன்னுடைய மகன் உன்னிடம், “நம்முடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற இந்த ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், சட்டங்கள், இவைகளின் கருத்து என்ன?” என்று கேட்டால், யாத் 13:14யாத் 12:26யோசு 4:21-24யோசு 4:6-7உபா 6:7நீதி 22:6 நீ அவனிடம் சொல்லவேண்டியதாவது: “நாங்கள் எகிப்திலே பார்வோனுடைய அடிமைகளாயிருந்தோம். ஆனால் யெகோவா எங்களைத் தமது வலிய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். எபே 2:11-12ரோம 6:17-18உபா 15:15உபா 5:6யாத் 20:2உபா 26:5-9உபா 5:15யாத் 13:3 மேலும், பெரிதும் பயங்கரமுமான, அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் எகிப்தின்மேலும், பார்வோனின்மேலும், அவன் குடும்பத்திலுள்ள யாவர்மேலும் யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாகவே அனுப்பினார். உபா 4:34சங் 58:10-11உபா 7:19சங் 91:8உபா 1:30உபா 3:21உபா 4:3யாத் 14:1-31 ஆனால், இறைவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக, எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். உபா 6:18உபா 1:8உபா 6:10யாத் 13:5உபா 1:35 இந்த விதிமுறைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நமது இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்பொழுது நாம் இன்று இருப்பதுபோலவே என்றும் செழிப்புற்று, உயிருடன் காக்கப்படுவோம். எரே 32:39சங் 41:2உபா 10:12-13ஏசா 3:10உபா 4:1உபா 8:1ரோம 10:5ரோம 6:21-22 எங்கள் இறைவனாகிய யெகோவா, நமக்குக் கட்டளையிட்டபடியே அவருக்கு முன்பாக இந்த சட்டம் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய கவனமாயிருந்தால் அதுவே நமக்கு நீதியாய் இருக்கும்.” உபா 24:13ரோம 10:3யாக் 2:10லேவி 18:5ரோம 10:5-6லூக் 10:28-29நீதி 12:28சங் 106:30-31