பிரசங்கி 11

Ecclesiastes 11

பல முயற்சிகளில் முதலீடு செய்யுங்கள்

கடல் வாணிபத்தில் முதலீடு செய்; பிரச 11:6நீதி 19:17எபி 6:10மத் 10:422 கொரி 9:6ஏசா 32:20சங் 41:1-2கலா 6:8-10

பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய்.

உன்னிடம் இருப்பதை ஏழு பேருடனும், எட்டுப் பேருடனும் பங்கிட்டுக்கொள். 1 தீமோ 6:18-19யோபு 5:19சங் 112:9லூக் 6:30-35நீதி 6:16அப் 11:28-30தானி 4:27எஸ்த 9:19

பூமியின்மேல் என்ன பேராபத்து வரும் என்பதை நீ அறியாதிருக்கிறாயே.

மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், 1 யோவா 3:17ஏசா 55:10-11சங் 65:9-13லூக் 13:71 இராஜா 18:45லூக் 16:22-26மத் 3:10

அவை பூமியின்மேல் மழையைப் பொழியும்.

ஒரு மரம் வடக்குப் பக்கம் விழுந்தாலும்,

தெற்குப் பக்கம் விழுந்தாலும் அது விழுந்த இடத்திலேயே கிடக்கும்.

காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்; நீதி 20:4நீதி 3:27நீதி 22:13

மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான்.

காற்றின் வழியையோ, யோவா 3:8பிரச 8:17சங் 92:5ரோம 11:33ஏசா 40:28சங் 104:24சங் 139:13-16பிரச 7:24

தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது.

அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும்

இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது.

உனது தானியத்தைக் காலையில் விதை, 2 கொரி 9:10-11ஏசா 55:10ஆகா 1:6-11ஓசி 10:122 கொரி 9:6சகரி 8:11-12யோவா 4:36-381 கொரி 3:5-7

பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை.

இதுவோ, அதுவோ,

எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே;

ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.

உன் இளமையில் படைத்தவரை நினைவில்கொள்

வெளிச்சம் இன்பமானது, பிரச 7:11மத் 5:45நீதி 15:30சங் 84:11யோபு 33:30நீதி 29:13பிரச 6:5யோபு 33:28

சூரியனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஒருவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், யோவா 12:35உபா 32:29பிரச 7:14யோவே 2:2பிரச 12:1-5பிரச 6:11பிரச 8:12பிரச 8:15

அவன் அவற்றை மகிழ்ச்சியுடன் களிக்கட்டும்.

ஆனால் இருளின் நாட்களையும் நினைவில் கொள்ளட்டும்,

ஏனெனில் அவை அநேகமாயிருக்கும்.

வரப்போகும் யாவும் அர்த்தமற்றதே.

வாலிபனே, உன் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியாயிரு, பிரச 12:141 யோவா 2:15-16பிரச 12:1பிரச 3:17புலம் 3:272 கொரி 5:10யோபு 31:7எபி 9:27

உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும்.

உன் இருதயத்தின் வழிகளையும்,

உன் கண்கள் காண்பவற்றையும் பின்பற்று.

ஆனால் இவை எல்லாவற்றிற்காகவும்

இறைவன் உன்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார் என்பதை அறிந்துகொள்.

எனவே உனது இருதயத்திலிருந்து கவலைகளை அகற்று, 2 கொரி 7:12 தீமோ 2:22பிரச 1:2பிரச 1:14பிரச 12:12 பேது 3:11-14யோபு 20:11சங் 39:5

உனது உடலின் வேதனையை உன்னைவிட்டு அகற்று.

ஏனெனில் இளவயதும் வாலிபமும் அர்த்தமற்றதே.