யாத்திராகமம் 3

Exodus 3

மோசேயும் எரிகின்ற புதரும்

மோசே மீதியான் நாட்டு ஆசாரியரான தன் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; ஒரு நாள் அவன் மந்தையை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தின் தூரமான பகுதிக்கு, ஓரேப் 1 என்னும் இறைவனின் மலைக்கு வந்தான். 1 இராஜா 19:8யாத் 17:6சங் 78:70-72எண் 10:29யாத் 18:1-6நியாயாதி 4:11மல்கி 4:4ஆமோ 7:14-15 அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்குக் காட்சியளித்தார்; அந்தப் புதரில் நெருப்பு பற்றியிருந்தும் எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டான். அப் 7:30-35ஏசா 43:2உபா 33:16மாற் 12:26லூக் 20:37சங் 66:12யாத் 3:16ஏசா 63:9 எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப்பார்ப்பேன்” என்றான். அப் 7:31சங் 107:8யோபு 37:14சங் 111:2-4

அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார். உபா 33:161 சாமு 3:41 சாமு 3:61 சாமு 3:8அப் 9:4ஆதி 22:1ஆதி 22:11ஆதி 46:2

அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.

இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார். யோசு 5:15அப் 7:33யாத் 19:12பிரச 5:1ஆதி 28:16-17எபி 12:20யாத் 19:21லேவி 10:3 மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். லூக் 20:37மத் 22:32யாத் 4:5மாற் 12:26அப் 7:32ஆதி 28:13வெளி 1:171 இராஜா 18:36

பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். சங் 145:19சங் 106:44யாத் 2:23-25சங் 34:6யாத் 22:23நெகே 9:9ஆதி 29:32யாத் 1:11 அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். ஆதி 50:24யாத் 3:17ஆதி 15:18-21உபா 1:25யாத் 13:5உபா 8:7-9எரே 11:5எண் 13:27 இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். யாத் 2:23நீதி 22:22-23யாத் 1:11யாத் 1:13-14யாத் 3:7யாத் 1:22பிரச 4:1பிரச 5:8 ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார். மீகா 6:41 சாமு 12:6ஏசா 63:11-12சங் 105:26அப் 7:34ஓசி 12:13சங் 77:20அப் 7:36

ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான். 1 சாமு 18:18யாத் 6:122 கொரி 3:5எரே 1:62 கொரி 2:161 இராஜா 3:92 சாமு 7:18யாத் 4:10-13

அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார். யோசு 1:5ரோம 8:31உபா 31:23ஏசா 41:10யாத் 4:12யாத் 4:15ஆதி 31:3மத் 28:20

அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான். ஏசா 9:6நீதி 30:4யாத் 3:14ஆதி 32:29ஏசா 7:14எரே 23:6மத் 1:21யாத் 15:3

அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ” யோவா 8:58எபி 13:8வெளி 1:8சங் 90:2ஏசா 44:6யாத் 6:3வெளி 1:4வெளி 1:17

மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். ஆதி 17:7-8எபி 13:8ஓசி 12:5மல்கி 3:6யாத் 3:6மீகா 4:5ஏசா 9:6சங் 102:12

“இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது,

இந்தப் பெயராலேயே

நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும்.

“நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன். சங் 8:4யாத் 4:29யாத் 4:31ஆதி 50:24அப் 15:141 பேது 2:121 பேது 5:1அப் 11:30 உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல். ஆதி 15:13-21யாத் 3:8-9ஆதி 50:24யாத் 2:23-25ஆதி 46:4யோசு 24:11

“இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள். யாத் 9:1யாத் 7:16யாத் 10:24-26யாத் 10:3யாத் 9:13எண் 23:15-162 நாளாக 30:12யாத் 4:31 ஆனால் வல்லமையான ஒரு கரம் எகிப்தின் அரசனைப் பலவந்தப்படுத்தினால் ஒழிய, அவன் உங்களைப் போகவிடமாட்டான் என்று எனக்குத் தெரியும். யாத் 5:2யாத் 6:1யாத் 7:1-14ஏசா 63:12-13சங் 136:11-12 ஆதலால் நான் என் கரத்தை நீட்டி, எகிப்தியர் மத்தியில் செய்யப்போகும் எல்லா விதமான அதிசய செயல்களினால் அவர்களை வாதிப்பேன். அதன்பின் அவன் உங்களைப் போகவிடுவான். அப் 7:36உபா 6:22யாத் 9:15நெகே 9:10யாத் 6:6யாத் 12:31-33யாத் 11:8-9சங் 105:27

“எகிப்தியர்கள் இந்த இஸ்ரயேல் மக்களுக்குத் தயவுகாட்டும்படி நான் செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது, வெறுங்கையுடன் போகமாட்டீர்கள். யாத் 12:36யாத் 11:3சங் 105:37நீதி 16:7சங் 106:46அப் 7:10ஆதி 39:21நெகே 1:11 ஒவ்வொரு பெண்ணும் தன் அண்டை வீட்டாரிடமும், தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க நகைகளையும் உடைகளையும் கேட்டு வாங்கவேண்டும்; அவற்றை உங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் அணிவிக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார். யாத் 11:2எசேக் 39:10யாத் 12:35-36ஆதி 15:14சங் 105:37யோபு 27:16-17ஏசா 33:1நீதி 13:22