எசேக்கியேல் 27

Ezekiel 27

தீருவுக்கான புலம்பல்

யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ தீருவைக் குறித்து புலம்பு. எசேக் 19:1எசேக் 28:12எரே 9:10எரே 9:17-20ஆமோ 5:1ஆமோ 5:16எசேக் 26:17எசேக் 27:32 கடலின் துறைமுகத்தில் அமைந்திருப்பதும், அநேக கடற்கரையில் வாழ்வோருடன் வியாபாரம் செய்வதுமான தீரு பட்டணத்திற்குச் சொல்லவேண்டியதாவது, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; எசேக் 27:4எசேக் 26:17எசேக் 27:10-36எசேக் 28:2-3ஏசா 23:11ஏசா 23:2-3ஏசா 23:8-9சங் 50:2

“தீருவே, ‘அழகில் நான் பரிபூரணமானவள்,

“எனக் கூறுகிறாய்.”

உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது. எசேக் 26:5

உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.

சேனீரின் தேவதாரு மரங்களால், உபா 3:9ஏசா 14:8உன்னத 4:81 இராஜா 5:11 இராஜா 5:6சங் 104:16சங் 29:5சங் 92:12

அவர்கள் உன் மர வேலைகளை அமைத்தார்கள்.

உனக்குப் பாய்மரம் செய்வதற்காக

லெபனோனின் கேதுருவை எடுத்தார்கள்.

பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால், ஆதி 10:4ஏசா 2:13சகரி 11:2எரே 2:10ஏசா 23:12எரே 22:20எண் 21:33எண் 24:24

உனக்குத் துடுப்புகளைச் செய்தார்கள்.

சைப்பிரஸின் கடற்கரைகளிலிருந்து பெற்ற சவுக்கு மரங்களினால்

அவர்கள் உன் கப்பல் தளத்தைக் கட்டி,

யானைத் தந்தத்தினால் அதை அலங்கரித்தார்கள்.

எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலைப்பாடமைந்த மென்பட்டு, யாத் 25:4எரே 10:9ஆதி 10:4ஏசா 19:91 நாளாக 1:71 இராஜா 10:28நீதி 7:16

உனது பாயாகவும் கொடியாகவும் இருந்தது.

எலீஷாவின் கரையோரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீலத் துணியும்,

கருஞ்சிவப்புத் துணியும் உனக்குக் கூடாரமாயின.

சீதோன், அர்வாத் பட்டணத்தினர் உன் படகோட்டிகளானார்கள். ஆதி 10:181 இராஜா 9:27எசேக் 27:111 இராஜா 5:62 நாளாக 2:13-14எசேக் 27:28ஆதி 10:15ஆதி 49:13

தீருவே! உன் தொழில் வல்லுனர், உனது கப்பல்களில் மாலுமிகளானார்கள்.

கேபாவின் அனுபவமிக்க கைவினைஞர் உன் கப்பல்களைப் 1 இராஜா 5:18யோசு 13:5சங் 83:7

பழுது பார்ப்பவர்களாய் உன் கப்பல்களில் இருந்தார்கள்.

கடலிலுள்ள எல்லா கப்பல்களும் அவைகளின் மாலுமிகளும்

உன்னுடைய பொருட்களை வாங்குவதற்கு உன்னிடம் வந்தார்கள்.

“ ‘பெர்சியா, லீதியா, பூத்தியா எசேக் 30:5எசேக் 38:5ஏசா 66:19எரே 46:9உன்னத 4:41 நாளாக 1:111 நாளாக 1:171 நாளாக 1:8

ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதர்கள் உன் இராணுவவீரர்களாய் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் மதில்களில் தொங்கவிட்டு,

உனக்குச் சிறப்பைக் கொண்டுவந்தார்கள்.

அர்வாத், ஹேலேக் பட்டணங்களைச் சேர்ந்த மனிதர் எசேக் 27:3-4

உன் மதில்களின் ஒவ்வொரு புறங்களிலும்

காவலிருந்தார்கள்.

கம்மாத் மனிதர் உன் கோபுரங்களில் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கேடயங்களை உன் மதில்களின்மேல் சுற்றிலும் தொங்கவிட்டார்கள்.

அவர்கள் உன் அழகை முழுநிறைவாக்கினார்கள்.

“ ‘உன் பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தம் தர்ஷீஸ் வர்த்தகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை மாற்றீடு செய்தார்கள். 1 இராஜா 10:22எசேக் 38:13ஆதி 10:4ஏசா 23:101 இராஜா 22:482 நாளாக 20:36-37எசேக் 27:16எசேக் 27:18

“ ‘கிரீஸ், தூபால், மேசேக் வர்த்தகர்களும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக அடிமைகளையும், வெண்கலப் பொருட்களையும் மாற்றீடு செய்துகொண்டார்கள். ஆதி 10:2ஏசா 66:191 நாளாக 1:5எசேக் 39:1வெளி 18:13எசேக் 32:26யோவே 3:31 நாளாக 1:7

“ ‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள். எசேக் 38:6ஆதி 10:31 நாளாக 1:6

“ ‘தேதான் மனிதர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அநேக கடலோர நாடுகள் உன் வாடிக்கையாளர்களாய் இருந்தன. அவர்கள் யானைத்தந்தங்களையும், கருங்காலி மரங்களையும் உன்னிடம் மாற்றீடாய் தந்தார்கள். 1 இராஜா 10:22ஆதி 10:7வெளி 18:12எசேக் 27:20எரே 25:231 நாளாக 1:321 நாளாக 1:9எசேக் 25:13

“ ‘சீரியர் உன் அநேக உற்பத்திகளினிமித்தம் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் இளநீல இரத்தினங்களையும் ஊதாநிற துணிகளையும் வேலைப்பாடமைந்த உடைகளையும், மென்பட்டுத் துணிகளையும், பவளத்தையும், சிவப்பு இரத்தினத்தையும் உன்னிடம் மாற்றீடு செய்துகொண்டார்கள். நியாயாதி 10:6எசேக் 28:132 சாமு 10:62 சாமு 15:82 சாமு 8:5ஆதி 10:22ஆதி 28:5ஏசா 7:1-8

“ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள். நியாயாதி 11:331 இராஜா 5:92 நாளாக 2:10அப் 12:20உபா 32:14உபா 8:8எஸ்றா 3:7ஆதி 43:11

“ ‘தமஸ்கு, உனது பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தமும், உன் அநேக உற்பத்திப் பொருள்களினிமித்தமும் கெல்போனின் திராட்சை இரசத்தையும், ஷாகாரின் ஆட்டுமயிரையும் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தது. ஏசா 7:81 இராஜா 11:24-25அப் 9:2எசேக் 47:16-18ஆதி 14:15ஆதி 15:2 வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள். யாத் 30:23-24நியாயாதி 18:29சங் 45:8உன்னத 4:13-14

“ ‘தேதான் சேணத்திற்குப் பயன்படுத்தும் கம்பளங்களை உனக்கு விற்றது. ஆதி 25:3எசேக் 27:15

“ ‘அரேபியாவும், கேதாரின் சகல இளவரசர்களும் உன் வாடிக்கையாளர்களாயிருந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றைக்கொண்டு உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். ஏசா 60:7ஆதி 25:131 நாளாக 1:291 இராஜா 10:152 நாளாக 17:11அப் 2:11கலா 4:25ஏசா 21:16

“ ‘சேபா, ராமாவின் வணிகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் வியாபாரப் பொருள்களுக்காக எல்லாவித உயர்தர வாசனைத் திரவியங்களையும், விலை உயர்ந்த கற்களையும், தங்கத்தையும் மாற்றீடு செய்தார்கள். ஆதி 10:7ஏசா 60:61 நாளாக 1:91 இராஜா 10:1-132 நாளாக 9:1-12எசேக் 38:13ஆதி 43:11சங் 72:10

“ ‘ஆரான், கன்னே, ஏதேன் ஆகியவற்றுடன் சேபா, அசீரியர், கில்மாத் வணிகரும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். 2இராஜா 19:12ஏசா 37:12ஆமோ 1:5ஆதி 10:22அப் 7:4ஆமோ 6:2ஆதி 10:10ஆதி 11:31-32 அவர்கள் உனது சந்தையில் அழகிய உடைகள், நீலப்பட்டுத் துணி, வேலைப்பாடமைந்த தையல் துணி, கயிறுகளால் பின்னப்பட்ட பலவர்ணக் கம்பளிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். 2இராஜா 2:8

“ ‘உனது பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு ஏசா 2:16ஏசா 23:14சங் 48:71 இராஜா 10:22ஏசா 60:9

தர்ஷீஸின் கப்பல்கள் பயன்பட்டன.

அவை கடலின் நடுவில் பாரமான

பொருள்களினால் நிரப்பப்பட்டுள்ளன.

உன், படகோட்டிகள் உன்னைப் சங் 48:7அப் 27:14எசேக் 26:19எரே 18:17எசேக் 27:34ஏசா 33:23சங் 93:3-4வெளி 17:15

பெருங்கடலுக்குக் கொண்டுபோகிறார்கள்.

ஆனால், நடுக்கடலில் கீழ்க்காற்று

உன்னைத் துண்டுகளாக உடைக்கும்.

உன் செல்வமும், வர்த்தகப் பொருள்களும் மற்றும் பொருட்களும் நீதி 11:4எசேக் 26:12எசேக் 26:14எசேக் 26:21எசேக் 27:12எசேக் 27:18-19எசேக் 27:22எசேக் 27:24

நடுக்கடலில் கப்பல் விபத்துநாளிலே விழுந்துபோகும்.

அதனுடன் கப்பலாட்கள், மாலுமிகள்,

கப்பல் பழுதுபார்ப்போர்,

வர்த்தகர்கள், இராணுவவீரர்,

கப்பலிலுள்ள எல்லோருங்கூட நடுக்கடலிலே விழுவார்கள்.

உன் மாலுமிகள் ஓலமிடும் வேளையிலே, எசேக் 26:10யாத் 15:14எசேக் 26:15-18எசேக் 27:35எசேக் 31:16நாகூ 2:3

கடலோர நாடுகள் அதிரும்.

தண்டு வலிப்போர் அனைவரும் எசேக் 26:16எசேக் 32:10வெளி 18:17-24

தங்கள் கப்பல்களைக் கைவிட்டு விடுவார்கள்.

கப்பலாட்கள், மாலுமிகள் அனைவருமே

கரையில் நிற்பார்கள்.

அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி எரே 6:262 சாமு 1:2புலம் 2:101 சாமு 4:12எசேக் 26:17ஏசா 23:1-6யோனா 3:6எஸ்த 4:1-4

உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள்.

அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை

வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.

அவர்கள் உன்னிமித்தம் துக்கித்து, தங்கள் தலைகளை மொட்டையடித்து, எசேக் 7:18ஏசா 22:12ஏசா 15:2ஏசா 16:9ஏசா 22:4ஆமோ 8:10உபா 14:1எரே 16:6

துக்கவுடைகளை உடுத்துவார்கள்.

அவர்கள் உனக்காக ஆத்தும வேதனையுடன்

அழுது மனக்கசப்புடன் துக்கங்கொண்டாடுவார்கள்.

அவர்கள் உனக்காக துக்கங்கொண்டாடுகையில், எசேக் 26:17எசேக் 27:2வெளி 18:18எசேக் 26:4-5எசேக் 27:26புலம் 1:12புலம் 2:13

“கடலால் சூழப்பட்ட தீருவைப்போல்

எப்பொழுதாவது அமைதியாக்கப்பட்டது யார்?”

என, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்.

உன் வர்த்தகப் பொருள்கள் கடல்களுள் வழியாகச் சென்றபோது, வெளி 18:19எசேக் 27:12-36எசேக் 27:3எசேக் 28:16எசேக் 28:4-5ஏசா 23:3-8வெளி 18:12-15வெளி 18:3

நீ அநேக நாடுகளைத் திருப்திசெய்தாய்;

உன் பெரும் செல்வத்தாலும் உனது பொருட்களாலும்

பூமியின் அரசர்களைச் செல்வந்தராக்கினாய்.

இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில் எசேக் 27:26-27சகரி 9:3-4எசேக் 26:12-15எசேக் 26:19-21

கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய்.

உன் பொருட்களும், உனது கூட்டமும்

உன்னோடு அமிழ்ந்து போயின!

கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும், எசேக் 32:10ஏசா 23:6எசேக் 26:15-18எசேக் 28:17-19வெளி 18:9-10

உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்,

அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்!

அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.

நாடுகளின் வர்த்தகர்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கின்றார்கள்; எரே 18:16எசேக் 26:21எரே 19:8சங் 37:10சங் 37:36செப்ப 2:151 இராஜா 9:8எசேக் 26:14

உனக்கு ஒரு பயங்கர முடிவு வந்துவிட்டது!

நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”