தீருவைப் பற்றிய இறைவாக்கு
தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு: யோவே 3:4-8ஆமோ 1:9-10ஆதி 10:4ஏசா 2:16எரே 25:22எரே 47:41 இராஜா 10:221 இராஜா 22:48
தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்!
தீரு அழிந்துபோனது;
அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது.
சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு
ஒரு செய்தி வந்திருக்கிறது.
தீவின் மக்களே, ஏசா 47:5எசேக் 27:3-4எசேக் 27:8-36எசேக் 28:2ஆப 2:20ஏசா 41:1சங் 46:10
கப்பலோட்டிகளில் செல்வந்தரான சீதோனின் வணிகர்களே,
மவுனமாயிருங்கள்.
சீகோரின் பெருவெள்ளத்தினால் 1 நாளாக 13:5எரே 2:18உபா 11:10எசேக் 27:3-23எசேக் 27:33எசேக் 28:4ஏசா 19:7ஏசா 23:8
விளையும் தானியமும்,
நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது.
தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.
ஆகையால் சீதோனே, வெட்கப்படு; வெளி 18:23எசேக் 26:3-6ஆதி 10:15ஆதி 10:19ஓசி 9:11-14எரே 47:3-4
“நான் பிரசவ வேதனைப்படவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை;
நான் இளைஞர்களைப் பராமரிக்கவோ, கன்னிகைகளை வளர்க்கவோ இல்லை”
என்று கடல் சொல்கின்றது;
கடற்கோட்டை பேசுகின்றது.
செய்தி எகிப்திற்கு எட்டியதும், யாத் 15:14-16யோசு 2:9-11எசேக் 26:15-21எசேக் 27:29-36எசேக் 28:19வெளி 18:17-19ஏசா 19:16
அங்குள்ளவர்கள் தீருவிலிருந்து வந்த
அந்தச் செய்தியின் நிமித்தம் வேதனைப்படுவார்கள்.
தீவுகளின் மக்களே, ஏசா 23:12ஏசா 16:7ஏசா 21:15ஏசா 23:10ஏசா 23:1-2
தர்ஷீசுக்குக் கடந்துசென்று அழுது புலம்புங்கள்.
அந்தப் பழைய பட்டணம் இதுதானா? ஏசா 22:2பிரச 10:7ஏசா 32:13ஏசா 47:1-2யோசு 19:29
களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா?
தூர நாடுகளில் குடியிருக்கும்படி,
தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்? உபா 29:24-28எசேக் 28:12-18எசேக் 28:2-6ஏசா 10:8ஏசா 36:9எரே 50:44-45வெளி 18:8
அது மகுடங்களை வழங்கியதே,
தீருவின் வர்த்தகர்கள் இளவரசர்களாயும்,
அதன் வியாபாரிகள் பூமியில் பெயர் பெற்றவர்களாயும் இருந்தனரே!
சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்; ஏசா 13:11யாக் 4:6யோபு 40:11-12ஏசா 2:11தானி 4:371 கொரி 1:26-29அப் 4:28எபே 1:11
எல்லாச் சிறப்பின் பெருமையையும் சிறுமைப்படுத்துவதற்கும்,
பூமியில் புகழ்ப்பெற்ற அனைவரையும் தாழ்த்துவதற்குமே இவ்வாறு செய்தார்.
தர்ஷீசின் மகளே, 1 சாமு 28:20ஏசா 23:14யோபு 12:21சங் 18:32ஆகா 2:22புலம் 1:6ரோம 5:6
நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ;
ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.
யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி, சகரி 9:3-4யாத் 14:21யாத் 15:8-10எசேக் 26:10எசேக் 26:15-19எசேக் 27:34-35எசேக் 31:16ஆதி 10:15-19
அதன் அரசுகளை நடுங்கச் செய்துள்ளார்.
கானானின் கோட்டைகளை அழிக்கும்படி
அவர் கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே, வெளி 18:22எசேக் 26:13-14ஏசா 23:1-2ஏசா 47:1உபா 28:64-67எசேக் 27:6ஆதி 10:15-19ஆதி 49:13
இப்போது நசுக்கப்பட்டுக் கிடக்கிறாயே!
இனி உனக்கு ஒருபோதும் களியாட்டம் இல்லை.
“நீ எழுந்து சைப்பிரஸுக்குப் போ,
அங்கேயும் நீ ஆறுதலைக் காணமாட்டாய்” என்றார்.
கல்தேயரின் நாட்டைப் பார், ஆப 1:62 நாளாக 33:112இராஜா 17:242இராஜா 20:12அப் 7:4தானி 4:30எசேக் 26:7-21எசேக் 29:18
அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே!
இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப்
பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள்.
முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி,
அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப்
பாழிடமாக்கி விட்டார்கள்.
தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்; ஏசா 23:1எசேக் 27:25-30ஏசா 2:16ஏசா 23:6வெளி 18:11-19
உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!
அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்: எரே 25:22தானி 7:14தானி 8:21எசேக் 27:25எசேக் 29:11ஓசி 2:15எரே 25:9-11எரே 27:3-7
“மறக்கப்பட்ட வேசியே, எரே 30:14நீதி 7:10-12
வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட;
உன்னை நினைவுகூரும்படியாக
வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”
யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள். நாகூ 3:4எசேக் 27:6-36வெளி 19:21 பேது 5:21 தீமோ 3:31 தீமோ 3:8அப் 15:14உபா 23:18 ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும். சங் 72:10உபா 26:12-14பிலி 4:17-18உபா 12:18-19யாத் 28:36கலா 6:62 நாளாக 2:11-162 நாளாக 2:7-9