ஏசாயா 19

Isaiah 19

எகிப்தைப் பற்றிய இறைவாக்கு

இது எகிப்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு: யாத் 12:12வெளி 1:7எசேக் 30:13யோவே 3:19யோசு 2:11உபா 33:26எசேக் 29:1-21ஏசா 13:1

இதோ, யெகோவா விரைந்து செல்லும் மேகமொன்றில் ஏறி

எகிப்திற்கு வருகிறார்.

எகிப்திய விக்கிரகங்கள் அவர்முன் நடுங்குகின்றன;

எகிப்தியரின் இருதயங்கள் அவர்களுக்குள்ளேயே உருகுகின்றன.

“எகிப்தியனை எகிப்தியனுக்கு விரோதமாக நான் எழுப்பிவிடுவேன்; நியாயாதி 7:221 சாமு 14:20மத் 10:36எசேக் 38:21மத் 10:21மத் 12:25வெளி 17:12-172 நாளாக 20:22-23

சகோதரன் சகோதரனுக்கு விரோதமாகச் சண்டையிடுவான்.

அயலான் அயலானை எதிர்ப்பான்,

பட்டணம் பட்டணத்தை எதிர்க்கும்,

அரசு அரசை எதிர்க்கும்.

அதனால் எகிப்தியர் இருதயத்தில் சோர்ந்துபோவார்கள்; ஏசா 8:19தானி 2:21 நாளாக 10:13ஏசா 44:25நீதி 21:301 சாமு 25:372 நாளாக 25:16-202 சாமு 15:31

நான் அவர்களுடைய திட்டங்களை நிறைவேறாதபடி செய்வேன்.

அவர்கள் விக்கிரகங்களிடமும், இறந்தோரின் ஆவிகளிடமும், குறிசொல்வோரிடமும்,

ஆவியுலகத் தொடர்புடையோரிடமும் ஆலோசனை கேட்பார்கள்.

நான் எகிப்தியரை கொடிய தலைவன் ஏசா 20:4எசேக் 29:19எரே 46:261 சாமு 23:7ஏசா 19:2சங் 31:8

ஒருவனது வல்லமைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

அவர்களை கொடூரமான அரசன் ஒருவன் ஆளுவான்”

என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், எசேக் 30:12எரே 51:36சகரி 14:18சகரி 10:11

ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.

வாய்க்கால்கள் நாறும்; ஏசா 37:25யாத் 7:18யோபு 8:112இராஜா 19:24யாத் 2:3ஏசா 15:6ஏசா 18:2

எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும்.

கோரையும் நாணலும் வாடிவிடும்.

ஆற்றின் முகத்துவாரத்தில், எசேக் 19:13ஏசா 23:3ஏசா 32:20எரே 14:4யோவே 1:17-18

நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும்.

நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து,

பறந்து இல்லாமல் போகும்.

மீனவர்கள் புலம்புவார்கள், எசேக் 47:10ஆப 1:15எண் 11:5யாத் 7:21

நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்;

தண்ணீருள் வலை வீசுகிறவர்களும்

கவலையால் வாடிப்போவார்கள்.

சணற்பட்டுத் தொழில் செய்வோரும் எசேக் 27:7நீதி 7:161 இராஜா 10:28

வெண்பருத்தி நூலினால் நெசவு செய்வோரும் வெட்கமடைவார்கள்.

துணி நெசவு செய்வோர் அனைவருமே சோர்வடைவார்கள்; யாத் 8:5உபா 11:10யாத் 7:19

கூலிக்கு வேலைசெய்யும் யாவரும் மனமுடைந்து போவார்கள்.

சோவானின் அதிகாரிகள் புத்தியீனரேயன்றி வேறு யாருமல்லர்; எண் 13:221 இராஜா 4:30அப் 7:22ஏசா 30:4சங் 78:43ஆதி 41:38-39சங் 78:121 கொரி 1:19-20

பார்வோனின் ஞானமுள்ள ஆலோசகர் அர்த்தமற்ற ஆலோசனை வழங்குகிறார்கள்.

“நான் ஞானிகளில் ஒருவன்;

பூர்வகால அரசர்களின் வழிவந்தவன்”

என்று நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி பார்வோனுக்குச் சொல்வீர்கள்?

இப்பொழுது உன் ஞானிகள் எங்கே? 1 கொரி 1:20ஏசா 14:24ஏசா 40:13-14ஏசா 41:22-23ஏசா 44:7ஏசா 47:10-13ஏசா 5:21நியாயாதி 9:38

சேனைகளின் யெகோவா

எகிப்திற்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதை,

அவர்கள் உனக்கு வெளிப்படுத்திக் காட்டட்டும்.

சோவானின் அதிகாரிகள் புத்தியீனரானார்கள்; எசேக் 30:13எரே 2:16எரே 46:14எரே 46:19சகரி 10:4ஏசா 19:111 பேது 2:71 சாமு 14:38

மெம்பிஸ் 1 பட்டணத்தின் தலைவர்கள் ஏமாந்துபோனார்கள்.

மக்கள் கூட்டங்களின் மூலைக் கற்களாய் இருந்த அவர்கள்

எகிப்தை வழிதவறிப் போகச் செய்தார்கள்.

யெகோவா அவர்களுக்குள் மயக்கத்தின் ஆவியை ஊற்றியிருக்கிறார். 1 இராஜா 22:20-232 தெச 2:11எசேக் 14:7-9ஏசா 47:10-11எரே 25:27யோபு 12:25ஏசா 19:2ஏசா 28:7-8

மதுபோதையில் தனது வாந்தியைச் சுற்றி தள்ளாடுபவனைப் போல்,

அவர்கள் எகிப்தை அதன் செயல்கள் அனைத்திலும்

தள்ளாடப் பண்ணுகிறார்கள்.

அப்பொழுது எகிப்தின் தலையினாலோ, ஏசா 9:14-151 தெச 4:11-12ஆப 3:17ஆகா 1:11நீதி 14:23சங் 128:2

வாலினாலோ, ஓலையினாலோ, நாணலினாலோ செய்யக்கூடியது எதுவுமேயில்லை.

அந்த நாளில் எகிப்தியர் பெண்களைப் போலாவார்கள். சேனைகளின் யெகோவா, தமது உயர்த்திய கரத்தை அவர்களுக்கு விரோதமாக ஓங்கும்போது, அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். எரே 51:30நாகூ 3:13ஏசா 11:15எரே 30:5-7எரே 50:37ஏசா 10:32சகரி 2:9எபி 10:31 யூதா நாடும் எகிப்தியரைத் திகிலடையச் செய்யும். சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதின் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள். ஏசா 14:24தானி 4:35எசேக் 29:6-7ஏசா 14:26-27ஏசா 20:2-5ஏசா 36:1ஏசா 46:10-11எரே 25:19

அந்த நாளிலே, எகிப்திலுள்ள ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, “சேனைகளின் யெகோவாவுக்கே உண்மையாயிருப்போம்” என ஆணையிடுவார்கள். அவைகளில் ஒன்று அழிவின் நகரம் என அழைக்கப்படும். செப்ப 3:9ஏசா 19:21சகரி 2:11ஏசா 11:11எரே 12:16உபா 10:20ஏசா 19:19ஏசா 2:11

அந்த நாளிலே எகிப்தின் மத்தியில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதன் எல்லையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னமும் இருக்கும். ஆதி 28:18யோசு 22:10யாத் 24:4யோசு 22:26ஆதி 12:7ஏசா 66:23சகரி 6:15எபி 13:10 இது எகிப்து தேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு ஒரு அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்கும். அவர்கள் தங்களை ஒடுக்குவோரினிமித்தம் யெகோவாவிடம் கதறியழும்போது, மீட்பரும் பாதுகாப்பவருமான ஒருவரை அவர்களிடம் அனுப்புவார்; அவர் அவர்களை விடுவிப்பார். சங் 50:15தீத் 2:13ஏசா 45:21-22லூக் 2:112இராஜா 13:4-5யாத் 2:23யாத் 3:7ஏசா 19:4 இப்படியாக யெகோவா எகிப்தியருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்; அந்நாளில் அவர்கள் யெகோவாவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் பலிகளாலும், தானிய பலிகளாலும் வழிபடுவார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து, அவைகளை நிறைவேற்றுவார்கள். ஏசா 11:9மல்கி 1:111 இராஜா 8:431 பேது 2:51 பேது 2:91 சாமு 17:46பிரச 5:4ஆப 2:14 யெகோவா எகிப்தைக் கொள்ளைநோயால் வாதிப்பார்; அவர் அவர்களை வாதித்துக் குணமாக்குவார். அவர்கள் யெகோவாவிடத்தில் மனந்திரும்புவார்கள். அவரும் அவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு, அவர்களைச் சுகமாக்குவார். எபி 12:11உபா 32:39ஓசி 14:1அப் 26:17-20ஆமோ 4:6-12ஓசி 5:15ஓசி 6:2ஏசா 19:1-15

அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை ஒரு பெரும்பாதை இருக்கும். எகிப்தியர் அசீரியாவுக்கும், அசீரியர் எகிப்திற்கும் போவார்கள். எகிப்தியரும், அசீரியரும் ஒன்றுகூடி வழிபடுவார்கள். ஏசா 11:16எபே 2:18-22எபே 3:6-8ஏசா 27:13ஏசா 35:8-10ஏசா 40:3-5 அந்த நாளில் இஸ்ரயேல், எகிப்தியருடனும், அசீரியருடனும் மூன்றாவது அரசாய், பூமியிலே ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். ஆதி 12:2ஏசா 65:8ரோம 10:11-13உபா 32:43எசேக் 34:26கலா 3:14ஏசா 49:22ஏசா 49:6 சேனைகளின் யெகோவா, “என் மக்களாகிய எகிப்தியரும், என் கைவேலையாகிய அசீரியரும், எனது உரிமைச்சொத்தான இஸ்ரயேலரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிப்பார். ஏசா 29:23ஓசி 2:23ரோம 9:24-25உபா 32:9சங் 115:15சங் 138:8ஏசா 60:21ஏசா 61:9