ஆதியாகமம் 10

Genesis 10

நாடுகளின் அட்டவணை

பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு. ஆதி 2:4ஆதி 9:7ஆதி 5:1ஆதி 6:9ஆதி 9:1ஆதி 9:19மத் 1:1

யாப்பேத்தியர்

யாப்பேத்தின் மகன்கள் 1: எசேக் 38:2எசேக் 38:61 நாளாக 1:5-7ஏசா 66:19வெளி 20:8எசேக் 39:1எசேக் 27:12-14எசேக் 27:19

கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.

கோமரின் மகன்கள்: எசேக் 27:14எரே 51:27

அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.

யாவானின் மகன்கள்: தானி 11:30ஏசா 23:1ஏசா 23:12எண் 24:24எசேக் 27:12எசேக் 27:25

எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம். இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள். செப்ப 2:11ஏசா 42:4எரே 2:10ஆதி 10:20எரே 25:22ஆதி 10:25ஆதி 11:1-9ஏசா 24:15

காமியர்

காமின் மகன்கள்: 1 நாளாக 1:8-161 நாளாக 4:40எசேக் 27:10ஆதி 9:22ஏசா 11:11எரே 46:9சங் 105:23சங் 105:27

கூஷ், மிஸ்ராயீம் 2, பூத், கானான்.

கூஷின் மகன்கள்: எசேக் 27:22எசேக் 27:151 இராஜா 10:1ஆதி 2:11ஏசா 21:13சங் 72:10

சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா.

ராமாவின் மகன்கள்:

சேபா, திதான்.

கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான். மீகா 5:6 அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று. 2 நாளாக 28:22ஆதி 13:13ஆதி 25:27ஆதி 27:30ஆதி 6:11ஆதி 6:4எசேக் 13:18எரே 16:16 சிநெயார் 3 நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன. ஆதி 11:9ஆதி 11:2ஆதி 14:1மீகா 4:10ஆமோ 6:2ஏசா 10:9ஏசா 11:11ஏசா 39:1 அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான். மீகா 5:6யோனா 1:2நாகூ 1:1சங் 83:82இராஜா 19:36எசேக் 27:23எசேக் 32:22எஸ்றா 4:2 நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.

மிஸ்ராயீமின் சந்ததிகள்: 1 நாளாக 1:11-12எரே 46:9எசேக் 30:5

லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர். எரே 47:41 நாளாக 1:12ஆமோ 9:7உபா 2:23ஏசா 11:11எரே 44:1

கானானின் சந்ததிகள்: யாத் 34:11எண் 34:2-151 நாளாக 1:13ஆதி 15:18-21ஆதி 23:32 சாமு 11:3யாத் 3:8ஆதி 28:3-20

மூத்த மகன் சீதோன், கேத்து, எபூசியர், எமோரியர், கிர்காசியர், 2 சாமு 24:18நியாயாதி 1:21சகரி 9:7 ஏவியர், அர்கீயர், சீனியர், ஆதி 34:2 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். 2 நாளாக 13:42இராஜா 17:242இராஜா 17:302 சாமு 8:9எசேக் 27:8எசேக் 47:16-17ஏசா 10:9யோசு 18:22

பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர். கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது. ஆதி 14:2ஆதி 19:24-25உபா 32:8ஆதி 13:10-17ஆதி 18:20ஆதி 20:1ஆதி 26:1ஓசி 11:8

அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே. ஆதி 10:6ஆதி 11:1-9

சேமியர்

சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான். எண் 24:24ஆதி 11:10-26

சேமின் மகன்கள்: ஏசா 66:191 நாளாக 1:17-272இராஜா 15:19அப் 2:9ஆதி 14:1-9ஆதி 9:26ஏசா 11:11ஏசா 21:2

ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.

ஆராமின் மகன்கள்: யோபு 1:1எரே 25:20

ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.

அர்பக்சாத் சேலாவின் தகப்பன், ஆதி 11:12-15லூக் 3:35

சேலா ஏபேரின் தகப்பன்.

ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். 1 நாளாக 1:19ஆதி 10:32உபா 32:8அப் 17:26லூக் 3:35-36ஆதி 11:16-19ஆதி 10:21

ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

யொக்தான் என்பவன், 1 நாளாக 1:20-28

அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு, அதோராம், ஊசால், திக்லா, 1 நாளாக 1:20-28 ஓபால், அபிமாயேல், சேபா, 1 நாளாக 1:20-281 இராஜா 10:1ஆதி 25:3 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள். 1 இராஜா 9:281 நாளாக 8:181 நாளாக 9:101 நாளாக 9:131 இராஜா 22:481 சாமு 15:7ஆதி 25:18ஏசா 13:12

இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது. எண் 23:7

அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே. ஆதி 10:20ஆதி 10:5அப் 17:26

தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின. ஆதி 9:19அப் 17:26ஆதி 10:1ஆதி 10:20ஆதி 10:25ஆதி 5:29-31ஆதி 9:1ஆதி 9:7