இவ்வாறு வானமும் பூமியும், அவற்றில் உள்ள எல்லாம் உண்டாக்கப்பட்டு முடிந்தன. யாத் 31:17யாத் 20:11சங் 33:6ஆதி 1:1ஏசா 45:182இராஜா 19:15ஏசா 42:5ஏசா 45:12
ஏழாம்நாள் ஆகும்போது இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்தார்; ஆதலால் அவர், ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார். எபி 4:4யாத் 31:17உபா 5:14யாத் 20:8-11யாத் 23:12யோவா 5:17ஏசா 58:13ஆதி 1:31 இறைவன் தாம் செய்துமுடித்த படைப்பின் வேலைகள் எல்லாவற்றிலுமிருந்து ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தபடியால், அந்த நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். லேவி 23:3எசேக் 20:12மாற் 2:27யாத் 31:13-17லூக் 23:56யாத் 34:21யாத் 35:2-3எரே 17:21-27
ஆதாமும் ஏவாளும்
இறைவனாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கியபோது, வானமும் பூமியும் படைக்கப்பட்ட வரலாறு இவைகளே. ஆதி 5:1வெளி 1:8யாத் 15:3ஆதி 1:1ஆதி 1:31ஆதி 1:4ஆதி 36:11 இராஜா 18:39
இறைவனாகிய யெகோவா பூமியில் மழையை அனுப்பாதிருந்ததினால், பூமியில் எந்தப் புதரும் இன்னும் காணப்படவுமில்லை, எந்த செடிகளும் இன்னும் முளைத்திருக்கவும் இல்லை; நிலத்தைப் பண்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. ஆதி 3:23எபி 6:7யோபு 5:10ஆதி 1:11-12ஆதி 4:12ஆதி 4:2யோபு 38:26-28எரே 14:22 ஆனாலும், பூமியிலிருந்து மூடுபனி மேலெழும்பி நிலத்தின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தது. இறைவனாகிய யெகோவா நிலத்தின் மண்ணினால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசியில் உயிர்மூச்சை ஊதினார்; அப்பொழுது மனிதன் உயிருள்ளவனானான். பிரச 12:7யோபு 33:41 கொரி 15:45ஏசா 64:8அப் 17:251 கொரி 15:47யோபு 27:3ஆதி 3:19
இறைவனாகிய யெகோவா, கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடியமர்த்தினார். எசேக் 28:13ஆதி 3:24ஆதி 13:102இராஜா 19:12எசேக் 31:8-9ஆதி 4:16யோவே 2:3ஏசா 51:3 இறைவனாகிய யெகோவா பார்வைக்கு இனியதும் உணவுக்கு ஏற்றதுமான எல்லா வகையான மரங்களையும் அத்தோட்டத்தில் வளரச்செய்தார். தோட்டத்தின் நடுவில் வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன. ஆதி 3:22வெளி 2:7வெளி 22:14வெளி 22:2எசேக் 47:12நீதி 11:30நீதி 3:18ஆதி 2:17
ஏதேனிலிருந்து ஒரு ஆறு ஓடி, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது. அங்கிருந்து அது நான்கு ஆறுகளாகப் பிரிந்து ஓடியது. வெளி 22:1சங் 46:4 முதலாம் ஆற்றின் பெயர் பைசோன்; அது தங்கம் விளையும் தேசமான ஆவிலா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. ஆதி 25:181 சாமு 15:7ஆதி 10:29ஆதி 10:7 அந்த நாட்டின் தங்கம் மிகத் தரமானது; அங்கே நறுமணமுள்ள சாம்பிராணியும் கோமேதகக் கல்லும் இருந்தன. எசேக் 28:13யாத் 28:20யோபு 28:16யாத் 39:13எண் 11:7 இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. ஆதி 10:6ஏசா 11:11 மூன்றாம் ஆற்றின் பெயர் திக்ரீசு என்ற இதெக்கேல். இது அசீரியா நாட்டின் கிழக்குப் பக்கம் ஓடியது. நான்காம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர். தானி 10:4ஆதி 15:18உபா 1:7உபா 11:24ஆதி 10:11ஆதி 10:22ஆதி 25:18வெளி 9:14
இறைவனாகிய யெகோவா, மனிதனைக் கொண்டுபோய், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார். சங் 128:2ஆதி 2:8எபே 4:28ஆதி 2:2யோபு 31:33 பின்பு இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டு, “நீ தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் சாப்பிடலாம்; 1 சாமு 15:221 தீமோ 4:41 தீமோ 6:17ஆதி 2:9ஆதி 3:1-2 ஆனால் நீ நன்மை தீமையின் அறிவைத் தரும் மரத்திலிருந்து மட்டும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதிலிருந்து சாப்பிடும் நாளில் நிச்சயமாய் நீ சாகவே சாவாய்” என்று சொன்னார். ரோம 6:23யாக் 1:15ஆதி 3:191 கொரி 15:561 கொரி 15:22கலா 3:10வெளி 21:81 யோவா 5:16
பின்பு இறைவனாகிய யெகோவா, “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன்” என்றார். பிரச 4:9-12நீதி 18:221 கொரி 11:7-121 பேது 3:71 தீமோ 2:11-13ரூத் 3:1ஆதி 1:31ஆதி 3:12
அப்பொழுது இறைவனாகிய யெகோவா எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார். மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படி அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. சங் 8:4-8ஆதி 1:28ஆதி 1:20-26ஆதி 9:2ஆதி 2:22-23ஆதி 6:20 இவ்வாறு மனிதன் எல்லா வளர்ப்பு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். ஆதி 2:18
ஆனால் ஆதாமுக்கோ தகுந்த துணை இன்னமும் காணப்படவில்லை. எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில் 1 ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். ஆதி 15:12யோபு 4:131 சாமு 26:12தானி 8:18யோபு 33:15நீதி 19:15 பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார். 1 கொரி 11:8-91 தீமோ 2:13எபி 13:4நீதி 18:22நீதி 19:14ஆதி 2:19சங் 127:1
அப்பொழுது மனிதன் சொன்னான்: எபே 5:28-301 கொரி 11:8-92 சாமு 5:1ஆதி 29:14நியாயாதி 9:22 சாமு 19:13
“இவள் என் எலும்பின் எலும்பாகவும்
என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்;
இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால்,
‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.”
இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். மத் 19:3-9எபே 5:28-31மாற் 10:6-12ரோம 7:21 பேது 3:1-71 கொரி 7:2-41 கொரி 6:16-17நீதி 31:10
ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை. ஆதி 3:7ஆதி 3:10-11ரோம 10:11எரே 17:13யோவே 2:26ஏசா 47:3ஏசா 54:4யாத் 32:25