ஆபிராம் லோத்துவை காப்பாற்றுதல்
அந்நாட்களில் சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால் ஆதி 10:10ஆதி 10:22ஆதி 11:2ஏசா 37:12ஏசா 11:11தானி 1:2எசேக் 32:24ஏசா 21:2 ஆகிய இவர்கள் சோதோமின் அரசன் பேரா, கொமோராவின் அரசன் பிர்சா, அத்மாவின் அரசன் சினாபு, செபோயீமின் அரசன் செமேபர், பேலா என்னும் சோவாரை ஆண்ட அரசன் ஆகியோருடன் யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள். ஆதி 13:10உபா 29:23ஆதி 10:19ஓசி 11:8ஏசா 1:9-101 சாமு 13:18உபா 34:3ஆதி 19:20-30 இந்த பிந்தைய அரசர்கள், தங்கள் படைகளை உப்புக்கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள். உபா 3:17யோசு 3:16எண் 34:12ஆதி 19:24சங் 107:34 பன்னிரண்டு வருடங்களாக கெதர்லாகோமேரின் ஆதிக்கத்திற்குள் இருந்த இவர்கள், பதிமூன்றாம் வருடத்தில் அவனை எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். எசேக் 17:15ஆதி 9:25-26
பதினாலாவது வருடத்தில், கெதர்லாகோமேரும் அவனுடன் கூட்டுச்சேர்ந்த அரசர்களும் ஒன்றுசேர்ந்து, அஸ்தரோத் கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியரையும், காமிலிருந்த சூசிமியரையும், சாவே கீரியாத்தாயீமிலே இருந்த ஏமியரையும், உபா 1:4உபா 2:10-11உபா 3:11ஆதி 15:20உபா 3:221 நாளாக 11:151 நாளாக 14:91 நாளாக 4:40 பாலைவனத்துக்கு அருகே எல்பாரான் வரையுள்ள, சேயீர் மலைநாட்டில் வாழ்ந்த ஓரியரையும் தோற்கடித்தார்கள். உபா 2:22உபா 2:12ஆதி 21:21எண் 12:16எண் 13:31 நாளாக 1:38-42ஆதி 16:7ஆதி 36:20-30 பின்பு அவர்கள் மற்றப் பக்கமாகத் திரும்பி, காதேஸ் எனப்படும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியரின் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அதோடு அத்சாத்சோன் தாமாரில் இருந்த எமோரியரையும் வெற்றிகொண்டார்கள். 2 நாளாக 20:2ஆதி 16:14ஆதி 20:11 சாமு 15:1-351 சாமு 27:1-121 சாமு 30:1-31உபா 1:19உபா 1:46
அப்பொழுது அவர்களை எதிர்க்க சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் (அது சோவார்), பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் அணிவகுத்துச்சென்று, சித்தீம் பள்ளத்தாக்கில் ஆதி 13:10ஆதி 19:20ஆதி 19:22ஆதி 14:10ஆதி 14:2-3 ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், மற்ற ஐந்து அரசர்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள். சித்தீம் பள்ளத்தாக்கில் பல நிலக்கீல் குழிகள் இருந்தன; அந்த போரில் சோதோம், கொமோரா நாட்டு அரசர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடியபோது, அவர்கள் அக்குழிகளில் விழுந்தார்கள்; மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். ஆதி 19:17ஆதி 11:3ஆதி 19:30ஏசா 24:18எரே 48:44யோசு 8:24சங் 83:10 வெற்றியடைந்த நான்கு அரசர்களும், சோதோமிலும் கொமோராவிலும் இருந்த எல்லா பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். ஆதி 14:16ஆதி 14:21உபா 28:31உபா 28:35உபா 28:51ஆதி 12:5 அத்துடன், சோதோமில் குடியிருந்த ஆபிராமுடைய சகோதரனின் மகனான லோத்தையும், அவனது உடைமைகளையும் கொண்டுபோய்விட்டார்கள். ஆதி 12:5ஆதி 11:27வெளி 3:191 தீமோ 6:9-11ஆதி 13:12-13எரே 2:17-19யோபு 9:23எண் 16:26
தப்பியோடிய ஒருவன், எபிரெயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தான்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆநேர் என்போரின் சகோதரன். ஆதி 13:18ஆதி 14:24ஆதி 40:151 சாமு 4:122 கொரி 11:22யாத் 2:11யாத் 2:6ஆதி 10:16 தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான முந்நூற்றுப் பதினெட்டு பயிற்சி பெற்ற மனிதருடன் அவர்களை தாண்வரை துரத்திச்சென்றான். நியாயாதி 18:29ஆதி 15:3உபா 34:1பிரச 2:7ஆதி 17:12ஆதி 17:27நீதி 24:11-12ஆதி 12:5 அன்றிரவு ஆபிராம், தன் ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கினான்; அவன் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபாவரை துரத்தி முறியடித்தான். அப் 9:21 இராஜா 15:18உபா 15:2ஏசா 41:2-3சங் 112:5 அவன் லோத்தையும், அவனுடைய எல்லா உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினான். 1 சாமு 30:18-191 சாமு 30:8ஆதி 12:2ஆதி 14:11-12ஏசா 41:2
ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான். 2 சாமு 18:18எபி 7:1நீதி 19:41 சாமு 18:6நியாயாதி 11:34நீதி 14:20
அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான். சங் 110:4எபி 6:20எபி 5:6எபி 5:10சங் 76:2அப் 16:17சங் 57:2எபி 7:10-22 அவன் ஆபிராமை ஆசீர்வதித்து சொன்னது: ஆதி 14:22எபி 7:6-7ரூத் 3:10எண் 6:23-27சங் 24:1அப் 16:17எபே 1:3மத் 11:25
“வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய
மகா உன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
உன் பகைவரை உன் கையில் ஒப்படைத்த, ஆதி 28:22எபி 7:4-9நெகே 13:12உபா 14:28மல்கி 3:10உபா 12:17உபா 14:23ஆதி 24:27
மகா உன்னதமான இறைவன், துதிக்கப்படுவாராக.”
ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தான்.
அதன்பின் சோதோமின் அரசன் ஆபிராமிடம், “ஆட்களை என்னிடம் கொடும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.
ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான யெகோவாவுக்கு என் கைகளை உயர்த்தி சத்தியம் செய்கிறதாவது: தானி 12:7தானி 4:34உபா 32:40யாத் 6:8நியாயாதி 11:35சங் 24:1சங் 83:18வெளி 10:5-6 ‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீ சொல்லாதபடி, உன்னிடமிருந்து ஒரு நூலையோ, செருப்பின் வாரையோ அல்லது உனக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். 2இராஜா 5:162 கொரி 11:9-12எஸ்த 9:15-16எபி 13:51 இராஜா 13:82 கொரி 12:142இராஜா 5:20 என் ஆட்கள் சாப்பிட்டதையும் என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகிய மனிதரின் பங்கையும் தவிர, வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். ஆதி 14:13மத் 7:12நீதி 3:271 கொரி 9:14-151 தீமோ 5:18ரோம 13:7-8